Tuesday, December 3, 2013

மூளையைப் பாதிக்கும் 10 பழக்கங்கள்! ! ! !

1. காலையில் உணவு உண்ணாமல் இருப்பது...! காலையில் உணவு உண்ணாமல் இருப்பவர்களுக்கு  ரத்தத்தில் குறைவான அளவே சர்க்கரை இருக்கும். இது மூளைக்குத் தேவையான சக்தியையும் தேவையான ஊட்டச் சத்துக்களையும் கொடுக்காமல் ஆக்கி, மூளை அழிவுக்குக் காரணமாகும். 2.மிக அதிகமாகச் சாப்பிடுவது...! இது மூளையில் இருக்கும் ரத்த நாளங்கள் இறுகக் காரணமாகி, மூளையின் சக்தி குறைவுக்குக் காரணமாகும். 3. புகை பிடித்தல்...! மூளை சுருகவும், அல்ஸைமர்ஸ் வியாதி வருவதற்கும்...

பொன்மொழிகள்!

* துன்பங்களை பலர் பொறுத்து கொள்கின்றனர். ஆனால், அவமதிப்பை சகிப்பவர்கள் வெகு சிலர் தான். —தாமஸ்.   * தவறுகளை ஒப்புக் கொள்ளும் தைரியமும், அதை திருத்திக் கொள்வதற்கான பலனும் தான் வெற்றிக்கான வழி . —லெனின்.   * பிறருடைய அன்புக்கு பாத்திரமாவதை விட பிறரது நம்பிக்கைக்கு பாத்திரமாவது பன்மடங்கு மேல் . —டொனால்டு.   * வற்றி போனால்தான், கிணற்றின் அருமை தெரியும். —பிராங்க்ளின்.   * தொழில் இல்லாத கல்வி, நீரின்றி வாடும் தாவரத்தைப் போன்றது.  — போவீ.   * வசந்தம் ஒரே நாளில் மலர்ந்து...

குட்டிக்கதைகள்!

ஒரு ஊரில் எலித்தொல்லை. அதைப் பார்த்த ராஜா,'  'ஒரு செத்த எலி கொண்டு வந்தால் பத்து ரூபாய் தரப்படும்,''என்று அறிவித்தார். மக்களும் நிறைய எலிகளைக் கொன்று பையில் போட்டு   அரண்மனையில் கொடுத்துப் பணம் பெற்றுச்சென்றனர். அரண்மனை துர்நாற்றம் எடுக்க ஆரம்பித்தது. அரசன் உடனே செத்த எலியின் வாலைக் கொண்டு வந்தால் போதும் என்று அறிவித்தார். வாலைக் கொண்டு வந்து பரிசு வாங்கும் மக்களின் எண்ணக்கை நாளுக்கு நாள் கூடிக் கொண்டே இருந்தது. அனால் எலித்தொல்லை குறையவில்லை.இது பற்றி அரசன் தீவிரமாக விசாரித்ததில்தெரிய வந்தது;  பணம்...

ஆரோக்கியமாக வாழ...!

 * தூங்கப் போவதற்கு முன், தினமும் கை, கால்கள், முகத்தை கழுவுங்கள்; பற்களையும் சுத்தம் செய்யுங்கள். சிறிது நேரம் வாய்க்குள்  தண்ணீரை வைத்து, நன்றாக வாயை கொப்பளியுங்கள்.  * தினமும் நன்றாக தூங்குங்கள். மாதத்தில்  ஒரு முறையாவது கண்ணாடி முன் நின்று, உங்கள் உடலை பாருங்கள். அப்படி பார்த்தால், உடலில் ஏற்படும் சுருக்கங்கள், படைகள் போன்றவைகளை கண்டறியலாம்.  * உணவில் பச்சை காய்கறிகளையும், பழ வகைகளையும் தேவையான  அளவு சேருங்கள்.  * முடிந்த அளவு வாகன  பயணங்களை மேற்கொள்ளாதீர்கள்; அதிகமான தூரம் நடந்து செல்ல முயற்சி...

வெங்கட்பிரபுவுடன் இணையும் சூர்யா!

'மங்காத்தா' படம் முடிந்ததும் சூர்யாவிடம் கதை சொன்னார் வெங்கட்பிரபு. ஆனால், அப்போது சூர்யாவால் வெங்கட்பிரபு சொன்ன கதையில் நடிக்க முடியவில்லை. 'மாற்றான்', 'சிங்கம் 2', படங்களில் பிஸியாக இருந்தார் சூர்யா. அதற்குப் பிறகே, கார்த்தி, ஹன்சிகா நடிப்பில் 'பிரியாணி' யை உருவாக்கினார். இப்போது மீண்டும் சூர்யாவை சந்தித்து ஒன்லைன் சொன்னாராம், வெங்கட்பிரபு. அந்த ஒன்லைன் சூர்யாவுக்கு ரொம்பவே பிடித்துப் போய்விட்டதாம். ''முழு ஸ்கிரிப்ட் ரெடி பண்ணுங்க....

அறுசுவை உணவு...!

காரம்:  உடலுக்கு உஷ்ணத்தைக் கூட்டுவதுடன் உணர்ச்சிகளை கூட்டவும்,குறைக்கவும் செய்யும். கிடைக்கும் உணவுப் பொருட்கள்: வெங்காயம், மிளகாய், இஞ்சி, பூண்டு, மிளகு, கடுகு போன்றவற்றில் அதிகப்படியான காரச்சுவை அடங்கியுள்ளது. கசப்பு:  உடம்பிலுள்ள உதவாத கிருமிகளை அழித்து உடம்பிற்கு சக்திகூட்டும். சளியைக்கட்டுப்படுத்தும். கிடைக்கும் உணவுப் பொருட்கள்: பாகற்காய், சுண்டக்காய், கத்தரிக்காய், வெந்தயம், பூண்டு, எள், வேப்பம்பூ, ஓமம் போன்றவற்றில்...

"கடமையை செய் பலனை எதிர்பாராதே!"

கடவுளுக்கெல்லாம் கடவுளும், முழுமுதல் கடவுளுமாக கருதப்படுகிற கண்ணன் பகவத்கீதையில் அருளிய வார்த்தைகள் இவை. மேலெழுந்த விதமாக இந்த வாக்கியத்தை பார்த்தால் அருமையான வார்த்தைகளாக தெரியும். ஆழமாக சிந்தித்துப் பாருங்கள் அதன் அரசியல் சூட்சுமம் விளங்கும். நீங்கள் மைக்ரோசாப்ட்ல் அல்லது வேறு எந்த இடத்திலும் வேலை செய்யுங்கள் அதற்கு பலனாக ஊதியம் அல்லது எந்த பலனையும் எதிர்பார்க்காதீர்கள். உங்கள் கட்சிக்காக, ஊருக்காக உழையுங்கள் அதன் பலனை எதிர்பாராதீர்கள். இப்படி உங்களிடம் யாராவது சொன்னால் ஏற்க முடியுமா? நாள் முழுவதும் வயல்வெளியில், கடற்பரப்பில், காட்டில், வீட்டு...

சுபாஷ் சந்திரபோசின் மறைக்க பட்ட வரலாறு:

சுருக்கமாக: அகிம்சை முறையில்  போராடி கொண்டு இருந்த  காந்தியிடம் சந்திரபோஸ் சொன்னார். அகிம்சை முறையில் போராடினால்  பல ஆண்டுகளாக இந்த போராட்டம்  இழுத்து கொண்டே போகும். கோடிகணக்கான  இந்தியர்களை வெறும் இருபதாயிரம்  வெள்ளையனைக் கொண்ட ராணுவம்  அடிமை படுத்தி வைத்து இருக்கிறாது. ஏன் அந்த  ராணுவத்தை அடித்து விரட்ட  கூடாது. அவர்களை நான் ஆயுத  ரீதியாக எதிர்கொள்ள திட்ட  மிட்டு இருக்கிறேன். உங்களின்  கருத்து...

பொது அறிவு - தெரிந்துக் கொள்ளுங்கள்!

1. தேசியகீதம் முதன் முதலில் ஜப்பானில்தான் தோன்றியது. 2. ஒரு சிலந்தி ஒரு மணி நேரத்தில் ஏறத்தாழ 450 அடி நீளமுள்ள வலையைப் பின்னுகிறது. 3. பிரான்ஸ் நாட்டில் ஏப்ரல் முதல் தேதியை மீன்கள் தினமாகக் கொண்டாடுகிறார்கள். 4. முதலையின் ஆயுள் 60 ஆண்டுகள். அதன் முதுகில் இருக்கும் பெரிய புடைப்புகளைக் கொண்டு அதன் வயதைக் கணிக்கிறார்கள். 5. புல் வகையில் மிக உயரமாக வளரக்கூடியது மூங்கில். 36 மீட்டர் உயரம் வரை இது வளரும். ஒரு நாளைக்கு அரை மீட்டர் அளவு வளரும். 6. மண்புழுவிற்கு கண்ணும் காதும் கிடையாது. ஆனால், ஒளியையும் அதிர்வையும் உணரக் கூடிய ஆற்றல் உண்டு. 7. "வீனஸ்...

வேகமான சிந்தனை - குட்டிக்கதைகள்!

ஓய்வுக்காக காட்டுக்குச் சென்றபோது தனது செல்ல நாயையும் அழைத்துப் போனார் ஒரு அரசர். அவர் வேட்டையில் மும்முரமாக இருக்க, அங்குமிங்குமாக பாய்ந்துபாய்ந்து காட்டின் வண்ணத்துப் பூச்சிகளைத் துரத்திக் கொண்டிருந்தது நாய். பல நிமிடங்களுக்குப் பிறகுதான் தான் வழியைத் தவறவிட்டுவிட்டதை உணர்ந்தது. அப்போது சற்று தூரத்தில் புலி ஒன்று வருவதைக் கண்டது நாய். அது தன்னை வேட்டையாடத்தான் வருகிறது என்பதையும் உணர்ந்தது. தப்பிப்பது எப்படி என்று எண்ணியபோது எதிரில் சில எலும்புத் துண்டுகளைக் கண்டது. சட்டென ஒரு காரியம் செய்தது அந்த நாய் . புலிக்கு முதுகு காட்டியவண்ணம்...

முதன் முறையாக குரோர்பதி நிகழ்ச்சியில் ரூ. 1 கோடி வென்ற பெண்!

 அமிதாப் பச்சன் நடத்தும் கௌன் பனேகா குரோர்பதி நிகழ்ச்சியில் பிரோஸ் பாத்திமா என்ற பெண் ரூ. 1 கோடி வென்றுள்ளார். இந்தியில் கௌன் பனேகா குரோர்பதி என்ற பெயரில் கோடீஸ்வரன் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இதன் 7வது சீசன் தற்போது நடந்து வருகிறது, இதனை இந்தி நடிகர் அமிதாப் பச்சன் நடத்துகிறார். இந்த நிகழ்ச்சியில் உத்தர பிரதேச மாநிலம் சஹரன்பூர் மாவட்டத்தில் உள்ள சன்சார்பூரைச் சேர்ந்த பிரோஸ் பாத்திமா(வயது 22) கலந்து கொண்டு ரூ.1 கோடி வென்றார். இந்த சீசனில்...

காட்சியும் அதன் கவிதையும்!

இது காதல் அரும்பும்சிரிப்பல்ல ...!!! ****************************** உன் சிரிப்பின் அர்த்தம் ... புரியாமல் தனிமையில் .... தவிர்க்கிறேன் .....!!! இவன் என்னிடம் ... ஏமார்ந்து விட்டானே ...? என்று சிரிக்கிறாயா ...? நான் உன்னிடம் காதல் .. சொல்ல தாமதமாகியதற்கு ... சிரிக்கிறாயா ...? ஒற்று மட்டும் உன் சிரிப்பில் ... நன்றாக தெரிகிறது ...!!! இது காதல் அரும்பும்.... சிரிப்பல்ல ...!!! நீங்கள் உணவு தந்தால் கூட நாங்கள் சாப்பிடும் சக்தியை இழந்து...

கொழுப்பைக் குறைக்க ஒரு டஜன் டிப்ஸ்!

 'இன்றைக்கு 'கொலஸ்ட்ரால்’ என்ற பெயரைச் சொன்னாலே, ஏதோ மிகப் பெரிய அபாயகரமான நோயாகத்தான் பார்க்கப்படுகிறது. உண்மையில் கொலஸ்ட்ரால் அதிகமாகும்போதுதான் பிரச்னை. நம் உடல் செல்கள் உற்பத்தி செய்வதற்கும், சில ஹார்மோன்கள் சுரப்பதற்கும் கொலஸ்ட்ரால் அவசியம். மொத்தக் கொழுப்பும் எல்டிஎல் கொலஸ்ட்ரால், எச்.டி.எல். கொலஸ்ட்ரால், ட்ரைகிளிசரைட்ஸ் என்று பிரிக்கப்படுகிறது. நகர்ப்புற இந்தியர்கள் மத்தியில் நல்ல கொழுப்பான ஹெச்.டி.எல். 35 மி.கி என்ற மிகக்குறைந்த அளவிலேயே காணப்படுகிறது' . . கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்த எளிய வழிகள்  அதிகப்படியான உடல்...

உங்கள் துணை எப்படிப்பட்டவர் - அவசியம் படிக்கவும்!

காதல்! உலகத்தில் இருபது முதல் அறுபதுவரை அத்தனைபேரையும் கட்டிப்போடும் மந்திர சக்தி. காதலில் ஜெயிப்பது தோற்பதை விட அதை கடந்து வராதவர்கள் ஒருசிலர். அப்படி கடக்காதவர்கள் பிறவிப்பயன் அற்றவர்களே. ஒவ்வொருவருக்கும் காதல் வந்தபின் அவரவர் துணையை பற்றி அறிய ஆவலாக இருக்கும். அவர் தன் மேல் அன்பு எவ்வளவு வைத்திருக்கின்றார், தனக்காக என்ன எல்லாம் செய்வார் இப்படி பல. அப்படியானவர்களுக்கு இந்த பதிவு (திருமணமானவர்களும் தங்கள் துணை பற்றி அறியலாம்.) இதை நானாக சொல்லவில்லை நான் இன்னொரு இடத்தில் படித்ததை உங்களிடம் பகிருகின்றேன். (யான் பெற்ற இன்பம் இவ் வையகமும்...

நகைச்சுவை!

 1) கணவன் : நான் செத்துட்டா நீ எங்கே இருப்பே? மனைவி: நான் என் தங்கச்சி கூட இருப்பேன்... ஆமா நான் செத்துட்டா நீங்க எங்கே இருப்பீங்க? கணவன்: நானும் உன் தங்கச்சி கூட இருப்பேன்... மனைவி: ???? 2) மனைவி: நம்ம பையன் ரொம்போ நச்சரிக்கிறான்... ஏதோ ஆப்பிள் போனாம்ல, ஒன்னு வாங்கி கொடுங்க. கணவன் : “ஆப்பிள் போன விலை ரொம்ப அதிகம்” மனைவி: “அப்ப ஒரு ஆரஞ்சு போனாவது வாங்கிக் கொடுக்க்லாமுல....” கணவன் :???? 3) டீச்சர்: உன்பேருஎன்ன..? - மாணவி : " சௌமியா" டீச்சர்: உங்கவீட்ல உன்னை எப்படி கூப்பிடுவாங்க..? மாணவி : தூரமா இருந்தா சத்தமா கூப்பிடுவாங்க.,பக்கத்தில...

பேஸ்புக், ட்விட்டர் மூலம் சதி + வதந்தீ = ஐடி கம்பெனிகளின் தில்லு முல்லு அம்பலம்!

  குறிப்பிட்ட அரசியல் தலைவருக்கு அமோக ஆதரவு இருப்பதாக காட்ட வேண்டுமா? அதற்கு ஒரு விலை. *எதிராக உள்ள தலைவரின் செல்வாக்கை ஒன்றுமில்லாமல் செய்ய வேண்டுமா? இதற்கு இரு மடங்கு விலை. *குறிப்பிட்ட தொகுதியில் யாருக்கும் ஓட்டு விழக்கூடாது என்று தடுக்க வேண்டுமா? சில லட்சம் ஆகும். *தேவைப்பட்டால் வாக்காளர்களை பீதியடைய செய்ய வதந்திகளை கிளப்ப வேண்டுமா? இதற்கு செலவு கோடியை எட்டும். nov 30 edit obra_post  *உயர் அதிகாரி மீது குற்றச்சாட்டுக்களை எழுப்பி...

ஷூ அளவை அறிய ஒரு செயலி!

  ஷூ அளவை கண்டறிந்து சொல்வதற்காக என்றே புதிய செயலி அறிமுகமாகி இருக்கிறது.  நம் ஷூ அளவு நமக்கு தெரியாதா?  இதற்கெல்லாம் ஒரு செயலியா ?  என்று கேட்பதற்கு முன் இணையம் மூலம் ஷூ வாங்கவோ அல்லது வெளிநாட்டுக்கு சென்றிருக்கும் போது ஷூ வாங்கவோ முற்படும் நிலையை கற்பனை செய்து பாருங்கள்.  உள்ளூரிலேயே ஷூக்களின் அளவு நிறுவனத்திற்கு நிறுவனம் மாறுபடுகிறது. அப்படி இருக்க வெளிநாடுகளில் சொல்லவா வேண்டும்.  ஒவ்வொரு நாட்டிலும்...

காவல்துறையினரிடம் ஆவணம் இன்றி சிக்கினால் இனி ஒரு எஸ்எம்எஸ் போதும்!

காவல்துறையினரிடம் ஆவணம் இன்றி சிக்கும்போது எஸ்எம்எஸ் மூலம் இனி இன்சூரன்ஸ் பற்றிய முழு தகவலையும் பெறலாம். எல்லா வாகனங்களுக்கும் இன்சூரன்ஸ் மிக அவசியம். சில சமயங்களில் சர்வீஸ் விடும்போது, வண்டியை கழுவும்போது, ஜெராக்ஸ் எடுக்க மறந்துவிடும்போது வாகனங்களில் இன்சூரன்ஸ் பேப்பரை மீண்டும் எடுத்து வைக்க மறந்துவிடுகிறோம். இதுபோன்ற சமயங்களில் சாலைகளில் போக்குவரத்து காவல்துறையினரிடம் சிக்கினால், தர்மசங்கடமான நிலை ஏற்படும். இந்த பிரச்சனையை தீர்ப்பதற்காக இன்சூரன்ஸ் ஒழுங்குமுறை ஆணையம் (ஐஆர்டிஏ) அதிரடி திட்டத்தை கொண்டு வந்துள்ளது. இதுகுறித்து அதன் வாகனங்கள்...

கேழ்வரகு தோசை - சமையல்!

   தேவையானவை:  கேழ்வரகு மாவு - 1 கப், ஆட்டிய உளுத்தம்பருப்பு மாவு - அரை கப், உப்பு - தேவைக்கேற்ப, சின்ன வெங்காயம் - 15, பச்சை மிளகாய் - 2, சீரகம் - அரை டீஸ்பூன், எண்ணெய் - தேவையான அளவு. செய்முறை: கேழ்வரகு மாவு, ஆட்டிய உளுத்தம்பருப்பு மாவு, உப்பு ஆகியவற்றை ஒன்று சேர்த்து கலந்து மறுநாள் வரை பொங்க விடவும் (12 மணி நேரம்).  வெங்காயத்தை பொடியாகவும் பச்சை மிளகாயை சிறு வளையங்களாகவும் நறுக்கவும். மறுநாள் காலையில்...

முதல்ல தம்பி.. அப்புறம் அண்ணன்?

  'பிரியாணி' படத்தில் கார்த்தியை இயக்கிய வெங்கட்பிரபு, தனது அடுத்த படத்தில் சூர்யாவை இயக்கவிருக்கிறாராம். கார்த்தி, ஹன்சிகா, பிரேம்ஜி, ராம்கி உள்ளிட்ட பலர் நடிக்கும் 'பிரியாணி' படத்தினை இயக்கினார் வெங்கட்பிரபு. யுவன் இசையமைக்க, ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்திருக்கிறது. இப்படம் டிசம்பர் 20ம் தேதி வெளிவரவிருக்கிறது. ஏற்கனவே படத்தின் பணிகள் முழுவதும் முடிவடைந்து விட்டதால், தனது அடுத்த படத்திற்கான கதை விவாதத்தில் ஈடுபட்டு இருக்கிறார்...