Showing posts with label புனைவுகள். Show all posts
Showing posts with label புனைவுகள். Show all posts

Sunday, December 22, 2013

சுனாமி..!

சுனாமி என்பது ஜப்பானிய மொழியில் உள்ள வார்த்தை. சு + னாமி தான் சுனாமி. சு என்றால் துறைமுகம், னாமி என்றால் பேரலை என்று பெயர். சுனாமி என்பது துறைமுக பேரலை. சில நிமிடங்கள் முதல் சில நாட்கள் வரை கூட, அதுவும் பல்லாயிரக்கணக்கான ராட்சத அலைகளை உருவாக்கக்கூடியது தான் சுனாமி. சுனாமி எப்படி உருவாகிறது? பூகம்பத்தால் ஏற்படுகிறது. அதாவது, பூகம்பம் என் பது நிலப்பகுதியில், கடல் பகுதியில், மலைப்பகுதியில் ஏற்படும். நிலைப்பகுதியில் வந்தால் நிலத்தில் உள்ளவை அதிர்ந்து...

யாரிடத்தும் எதையும் எதிர்ப்பார்க்காதே - சிந்தனைத்துளி

சுதந்திரமானவனாக இரு. எவரிடத்திருந்தும் எதையும் எதிர்பார்க்காதே. நான் உறுதியாகச் சொல்வேன் உனது கடந்தகால வாழ்க்கை நீ பின்னனோக்கித் திரும்பிப் பார்ப்பாயானால், நீ வீணாக எப்போதும் மற்றவர்களிடமிருந்து உதவியைப் பெற முயற்சி செய்த்தையும் அப்படி எதுவும் வராமல் போனதையும் தான்காண்பாய். வந்த உதவிகள் எல்லாம் உனக்குள் இருந்து வந்தவையாகத்தான் இருக்கும். - விவேகானந்தர். நட்புக்கொள்ள விரும்பினாலும் நண்பர்கள் கிடைக்காத ஏழைகளுக்கும் நண்பனாவேன். -கவிஞர் ஷெல்லி. “எளிமையாகவும் தெளிவாகவும் இரு, புரியாத புதிராக இராதே. - வால்ட் விட்மல் ஒரு கொள்கையை எடுத்துக்கொள்....

எழுதுவது ஏன்?

1) எழுதுவதற்கான அவசியத்தையும் உந்துதலையும் உணர்வதால் தனக்குள்ளிருந்து தன்னை யாரோ எழுதும்படியாக வற்புறுத்துவது போல ஒருவன் அடையும் நிலையில் தான் இந்த வகை எழுத்து உருவாகிறது. மிதமிஞ்சிய வேதனையை. தனிமையை பகிர்ந்து கொள்வதற்கு யாருமற்ற நிலையில் கதையோ, கவிதையோ எழுதுவது உருவாகிறது. பெரும்பான்மையான எழுத்தாளர்கள் இந்த வகையில் தான் துவங்குகிறார்கள். 2) தன்னையும் மற்றவர்களையும் மகிழ்விக்க. மிகச்சிறந்த இலக்கியவாதிகள் இந்த வகையைச் சேர்ந்தவர்களே. அவர்கள் தொழில்முறை எழுத்தாளர்கள் அல்ல. வாழ்வின் ஞானமும், சரளத்தன்மையும், அன்பையும் வெளிப்படுத்தவே அவர்கள் எழுதுகிறார்கள்....

மர்லின் மன்றோ

1926 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 1 ஆம் தேதி அமெரிக்காவின் லாஸ்ஏஞ்சல்ஸ் நகரில் பிறந்தவர் மர்லின் மன்றோ. உலக இளைஞர்களின் காமத்தின் குறியீடாக கட்டமைக்கப்பட்ட மர்லினின் பிம்பம், இன்றுவரை அதன் மெருகு குலையாமல் அப்படியே உள்ளது. மர்லினின் அபிரிதமான அழகும், பார்த்த கணம் கலங்கடிக்கும் கவர்ச்சியும், 36 வயதில் தற்கொலை செய்துகொள்ள நேர்ந்த அவரின் மன நெருக்கடியை, ஆழமான சோகத்தை மறைக்கும் கடினமான திரைச்சீலையாகவே இன்றும் உள்ளது. மர்லின் மன்றோ பிறக்கும்போது அவரது தாயார் கிளாடிஸ் மன்றோ பேக்கர் தனது முதல் கணவர் ஜாஸ்பர் பேக்கரை பிரிந்து எட்வர்ட் மார்டின்சன் என்பவருடன் வாழ்ந்து...

மனிதப் பண்பு ( தெய்வம் நீ என்று உணர் )

தெய்வம் நீ என்று உணர் இன்றைய உலகம் அறிவியல் உலகம். எதையும் ஆராய்ந்து கண்டு தெரியும். விருப்பங்கொண்டோர் நிறைந்த உலகம். நேரில் கண்டால் ஒழிய மற்றவற்றை நம்ப மறுக்கின்ற உலகம். பொறுமை இல்லை ‘சந்திர மண்டலத்திற்குச் சென்று வருவது இயலும்’ என்பதைக் கற்பனை என்று ஒதுக்கித் தள்ளியதும் இந்த உலகந்தான். ஆனால் அதுவே உண்மையான போது, அதனை ஒத்துக்கொண்டதும் இந்த உலகந்தான். ஆதலின் காட்சி அளவில் கண்டால் ஒழிய மற்றவற்றை நம்ப இயலாத நிலை உலகில் நாளும் வளர்ந்து வருகின்றது. அதேபோல் அறிவியல் வளர்ச்சியால் கற்பனை என்று கொண்டவற்றுள் சில உண்மையானதாகவும் உண்மை என்று கொண்டவற்றுள்...

வாழ்க்கைப் பிரச்சனைகள் – தீர்வுகள்

வாழ்க்கைப் பிரச்சனைகள் – தீர்வுகள் மனித உறவுப் பிரச்சனைகள் (Human Relations Problems) மன நிம்மதியைப் போக்கிவிடுகின்றன. வாழ்க்கையில் பிடிப்பினைத் தளர்த்துகின்றன. செயலூக்கத்தினைக் குறைக்கின்றன. சிந்தனைத்திறன், அறிவு (Creativity) ஆகியவற்றைப் பாதிக்கின்றன. இவற்றிற்குக் காரணங்கள் யாவை? தீர்வுகள் யாவை என்பதைப் பார்ப்போம். காரணங்கள் தன்னைப் புரிதல், மற்றவர்களைப் புரிதல், வாழ்வினைப் பற்றிய தெளிவான நோக்கு- இவைகள் இல்லாத பட்சத்தில் பிரச்சனைகள் உருவாகின்றன. தீர்வுகள் 1. உயர்வு மனப்பான்மை (Superiorty Complex) & தாழ்வு மனப்பான்மை (Inferiority complex)...

புத்தகங்களை ஏன் படிக்கவேண்டும்

புத்தகங்களை ஏன் படிக்கவேண்டும் எதைச் செய்தாலும் ஏன்? எதற்கு? என்றும், அதனால் நமக்கு என்ன பயன் என்றும், தெளிவுபடுத்திக் கொண்டால் அந்தச் செயலை சிறப்பாக செய்ய முடியும். செயல் செய்வதற்கும் ஆர்வமும் ஈடுபாடும் உண்டாகும். அந்த வகையில் நூல்களை ஏன் படிக்கவேண்டும்? என்பது பற்றி சில விளக்கங்களைப் பார்ப்போம். நூல் படிப்பதறகும் தொலைக்காட்சி பார்ப்பதற்கும் உள்ள வித்தியாசம் ஒரு உதாரணத்திறகு ‘ஒரு அரசன் குதிரையில் வேகமாக ஒரு அடர்ந்த காட்டுப்பகுதியில் சென்று கொண்டிருக்கின்றான். அப்பொழுது- மேற்கண்டதைப் படிக்கும்போது ஒரு அரசனையும், ஒரு குதிரையையும், ஒரு காட்டையும்...

மகிழ்ச்சிக்கு பத்து வழிகள்...

1.சத்தான உணவைச் சாப்பிடுங்கள் கவனியுங்கள்... ருசியான உணவு என்று சொல்லவில்லை. சத்தான, இயற்கையான உணவுவகைகளைச் சாப்பிடும்போது மூளை எப்போதும் சுறுசுறுப்பு நிலையிலேயே இயங்குகிறது. பதப்படுத்தப்பட்ட, டின்களில் அடைக்கப்பட்ட உணவுகளைச் சாப்பிடும்போது உடல் ஒருவித மந்த நிலையினை அடைகிறது. இதனால் நாம் செய்யும் செயல்களில் நமக்குத் திருப்தி ஏற்படுவதில்லை. 2. நன்றாகத் தூங்குங்கள் நல்ல ஆழ்ந்த தூக்கம் அனைத்து மனிதர்களுக்கும் அவசியம். பகலில் நாம் செய்யும் வேலைகளினால் களைப்புறும் உடல் உறுப்புகள் தூக்கத்தில் மட்டுமே Refresh அடைகின்றன. தூக்கத்தில் மட்டுமே ஒரு பகுதி...

மிகவும்...

*மிகவும் கசப்பானது தனிமையே! *மிகவும் மரியாதைக்குரியவர் அன்னையே! *மிகவும் துயரமானது மரணமே! *மிகவும் அழகானது அன்புணர்வே! *மிகவும் கொடுமையானது பழி வாங்குதலே! *மிகவும் கவலை தருவது செய்நன்றி மறப்பதே! *மிகவும் மகிழ்ச்சியானது சிறந்த நட்பே! *மிகவும் வெறுமையானது இல்லையென்பதே! *மிகவும் ரம்மியமானது நம்பிக்கைய...

தேவையான மூன்றுகள்?

இருக்க வேண்டிய மூன்று - தூய்மை, நீதி, நேர்மை. ஆள வேண்டிய மூன்று - கோபம், நாக்கு, நடத்தை. பெற வேண்டிய மூன்று - தைரியம், அன்பு, மென்மை. கொடுக்க வேண்டிய மூன்று - இரப்போர்க்கு ஈதல், துன்புறுவோர்க்கு ஆறுதல், தகுதியானவர்க்குப் பாராட்டு. அடைய வேண்டிய மூன்று - ஆன்ம சுத்தம், முனைவு, உள்ள மகிழ்வு. தவிர்க்க வேண்டிய மூன்று - இன்னா செய்தல், முரட்டுத்தனம், நன்றியில்லாமை. பரிந்துரைக்க வேண்டிய மூன்று - சிக்கனம், தொழிலூக்கம், நாணயம். நேசிக்க வேண்டிய மூன்று - அறிவு, கற்பு, மாசின்ம...

Tuesday, December 3, 2013

காட்சியும் அதன் கவிதையும்!

இது காதல் அரும்பும்சிரிப்பல்ல ...!!! ****************************** உன் சிரிப்பின் அர்த்தம் ... புரியாமல் தனிமையில் .... தவிர்க்கிறேன் .....!!! இவன் என்னிடம் ... ஏமார்ந்து விட்டானே ...? என்று சிரிக்கிறாயா ...? நான் உன்னிடம் காதல் .. சொல்ல தாமதமாகியதற்கு ... சிரிக்கிறாயா ...? ஒற்று மட்டும் உன் சிரிப்பில் ... நன்றாக தெரிகிறது ...!!! இது காதல் அரும்பும்.... சிரிப்பல்ல ...!!! நீங்கள் உணவு தந்தால் கூட நாங்கள் சாப்பிடும் சக்தியை இழந்து...