
தன்னை நம்பி வருவோர்க்கு நற்கதி நல்குவான் நாராயணன். அவன் கோயில் கொண்டருளும் தலங்களுள் ஒன்று, துத்திப்பட்டு. ஒருசமயம் ரோமச ரிஷியும், அவரது சீடர்களும் கானகத்தில் தவம் புரிந்து வந்தபோது பிரதூர்த்தன் என்ற அரக்கன் தொல்லைகள் கொடுத்து வந்தான். இதனால் வெகுண்ட ரிஷி அந்த அரக்கனை 'புலியாகக் கடவது' என்று சாபமிட்டார். புலியுருவை அடைந்த அரக்கன் கானகத்தில் வாழும் உயிரினங்களை அழிக்க முற்பட்டதுடன், முனிவர்களை முன்பைவிட இன்னும் அதிகமாக துன்புறுத்தி வந்தான். வேறு...