Friday, January 24, 2014

பாடாய் படுத்தும் பல்வலி பற்றிய அதிர்ச்சி தகவல் ..!



”நாட்டிலேயே பல் மருத்துவமனையில் அதிகமாக புறநோயாளிகள் வருவது தமிழ்நாடு அரசு பல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில்தான். தினமும் 800 முதல் 1500 புறநோயாளிகள் வரை மருத்துவமனைக்கு வந்து செல்கின்றனர். 2007-ஆம் ஆண்டில் ஆண்டுக்கு 2.85 லட்சமாக இருந்த புறநோயாளிகள் எண்ணிக்கை, 2013-ஆம் ஆண்டில் 3.53 லட்சமாக அதிகரித்துள்ளது. மருத்துவக் கல்லூரிக்கென்று புதிய கட்டடங்கள் திறந்த பின்பு புறநோயாளிகளின் எண்ணிக்கை ஆண்டுக்கு 50 ஆயிரம் அதிகரித்துள்ளது.” என்று தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

பல் வலி, ஈறு வீக்கம், பல் கூச்சம், பல் பலமிழந்து ஆடுதல், கடினமான பொருட்களை மென்று சாப்பிட முடியாமை, பல்லடிச் சீழ் போன்றவை பல் வலி, சொத்தைப் பல் வலி ஏற்படுவதற்கான அறிகுறிகள் ஆகும். வாயில் ஏற்படும் தொற்று நோய்கள் மற்றும் உடலில் ஏற்படும் வேறு பல நோய்களின் காரணமாகவும் பல் வலி உருவாகலாம்.

மேலும் ஆரம்பகால சொத்தை பற்களை கவனிக்காமல் விட்டால் அது அந்த பற்களின் நரம்பு வரை சென்று நமக்கு வலி கொடுக்கிறது. அதனால் ஆரம்ப கால சொத்தையை அலட்சியப்படுத்தாமல், உடனே அதை டாக்டரிடம் சென்று அடைத்துக் கொள்ளலாம். அப்படி ஆரம்பத்திலேயே அடைத்து சரி செய்து கொண்டால் அந்த சொத்தை மேற்கொண்டு பரவுவதை தவிர்க்கலாம்.

* சரி இப்போது நரம்பு வரை பரவி வலி கொடுக்கிறது என்ன செய்யலாம்?

ஆரம்பகாலத்தில் வலி என்றாலே பற்களை பிடுங்கி விடுவார்கள். ஆனால் இப்போது அதற்கு அவசியம் இல்லை. சொத்தை நரம்பு வரை பரவினால்தான் வலி ஏற்படும் அப்படி பரவிய சொத்தையும் வேர் சிகிச்சை செய்து அந்த பல்லை காப்பாற்றிக் கொள்ளலாம் தயவு செய்து பற்களை எக்காரணத்தைக் கொண்டும் எடுத்துவிடாதீர்கள் அப்படியும் எடுக்க நேர்ந்தால் எடுத்த பற்களை 15 நாட்களிளோ அல்லது ஒரு மாதத்திலோ புதிய பல் கட்டி விட வேண்டும். இல்லையென்றால், மேல் பல் எடுத்து கட்டாவிட்டால் கீழ் பல் மேலே ஏறி அது இருக்கும் இடத்தை விட்டு நகர்ந்து அதுவும் உபாதைகளை ஏற்படுத்தும். அதே போல் கீழ் பல் எடுத்து கட்டாமல் விட்டால் மேல் பல் கீழே இற்ங்கி விடும்.

*சொத்தை இல்லாமலும் வலி ஏற்படுவதற்கு காரணம் என்ன?


சிலருக்கு சொத்தை இருக்காது. ஆனால் இந்த பல் மட்டும் வலி கொடுக்கிறது என்று சொல்வார்கள். அதற்கு காரணம் நிறைய நேரம் பல் துலக்குவதாலும், மிகவும் கடினமான பிரஷ்ஷை உபயோகிப்பதாலும் பற்கள் தேய்ந்து எனாமல் என்னும் வெளிப்புறப் பகுதியை எடுத்து விடுவார்கள். இது உள்ளே இருக்கும் குழாய் போல் பகுதியை திறந்து விடும். இதனால் அப்பற்கள் மிகவும் கூச்சத்தை ஏற்படுத்தி, பின்னர் வலி உண்டாக்கும். இப்படி இருக்கும் பற்களை அடைத்தோ அல்லது வேர் சிகிச்சை செய்து சரி செய்யலாம். பிரஷ் மிகவும் மென்மையாக இருக்க வேண்டும். மேலும் கீழுமாக பல் துலக்க வேண்டும். நீண்ட நேரம் துலக்க வேண்டாம். ஒன்றிலிருந்து இரண்டு நிமிடங்கள் தேய்த்தால் போதும், இதைக் கண்டிப்பாக நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

* ஈர்களில் தொந்தரவு இருந்தாலும் வலி வருமா?

நம் ஈர்களில் கேல்குலஸ் என்னும் சுண்ணாம்புப் போல் துகள்கள் சேர்ந்து விடும். இது மிகவும் கடினமாக இருக்கும் இதை பிரஷ் வைத்து தேய்த்தாலும் சுத்தப்படுத்த முடியாது இது அனைவருக்கும் ஏற்படும். இதை ஆறு மாதங்களுக்கு ஒறுமுறை பல் டாக்டரிடம் சென்று சுத்தப்படுத்திக்கொள்ள வேண்டும் அப்படி சுத்தப்படுத்தாமல் விட்டால் அவை ஈர்களை அரித்து எலும்புவரைச் சென்று பற்களில் வலி ஏற்படுத்தி, பின்னர் பற்கள் ஆடி தானாகவே விழுந்து விடும் அல்லது எடுக்கும்படி ஆகிவிடும். நீண்ட நாள் புண் இருந்தால் கண்டிப்பாக கவனிக்க வேண்டும்.

* 19 வயதிலிருந்து 25 வயதிற்குள் மூன்றாவது கடாபல் முளைக்கும். அது வலி தருமா?
19 வயதில் மூன்றாவது கடாபல் முளைக்கும் போது அந்த பல் வருவதற்கான போதுமான இடம் இல்லாததாலும் மிகவும் கஷ்டப்பட்டு முளைப்பதாலும் அந்த இடமே வீங்கி வலி ஏற்படும். அதை டாக்டரிடம் காண்பித்து அந்த பல் சரியான திசையில் இருக்கிறதா என்று எக்ஸ்ரே மூலம் பார்த்து தெரிந்துக் கொள்ளலாம். சரியாக இருக்கிறது பல் வந்து விடும் என்றால் அதற்கு மாத்திரைகள் சாப்பிட்டால் போதும். அப்படி சரியாக முளைக்கவில்லை எக்ஸ்ரேவில் பல் சாய்ந்தோ, படுத்தோ இருந்தால் அதை ஒரு சின்ன அறுவை சிகிச்சை மூலமாகத்தான் அந்த பல்லை எடுக்க வேண்டும்.

* ஈரில் கட்டிகள் ஏற்படுவதால் வலி வருமா?

ஈரில் கட்டிகள் ஏற்பட்டு வீங்கி வலி தரும். இது பல்வேறு காரணங்களால் கட்டி வருகிறது முக்கியமான காரணம் முற்பற்கள் எந்த காரணத்தாலோ சிறுவயதில் அடிப்பட்டிருந்தால் அதை கவனிக்காமல் விட்டு விட்டால் பல் வேர்களை சுற்றி இருக்கும் நார் போன்ற தசைகள் கிழிந்து அதன் மூலம் வீக்கம் வலி ஈர்களில் கட்டி வேர் நுனியில் கட்டி ஏற்படும் இதையும் வேர் சிகிச்சை மூலமாக சரி செய்யலாம்.

கைப்பக்குவ மருந்தாக வெந்நீரில் உப்பு போட்டு வாய் கொப்பளிக்கலாம். ஓரிரு கற்பூரவல்லி இலைகளையும், துளசியையும் நன்றாக மென்று வலியுள்ள இடத்தில் வைத்து அழுத்திக் கொள்ளலாம். சித்த மருத்துவ மருந்தாக இரண்டு துளி கிராம்பு தைலத்தை பஞ்சில் தோய்த்து பல் வலி உள்ள இடத்தில் வைத்துக் கொள்ளலாம். 3 முதல் 5 துளி சுக்கு தைலத்தை பஞ்சில் தோய்த்து பிழிந்து பல் வலி உள்ள இடத்தில் வைத்துக் கொள்ளலாம். ஒரு தம்ளர் வெந்நீரில் 10 துளி சுக்கு தைலத்தை கலந்து வாய் கொப்பளிக்கச் செய்ய வேண்டும். தினமும் கல்நார் பற்பொடி கொண்டு பல் துலக்கலாம்.

பற்கள் அதிகமாக அரிக்கப்பட்டு இருந்தால் பல் டாக்டரை அணுகி உரிய சிகிச்சை பெற வேண்டும். பல் வலி ஏற்பட்டால் குளிர்பானங்கள், ஐஸ்கிரீம், இனிப்புப் பண்டங்கள் சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது. தினமும் 2 வேளை பல் துலக்கி ஈறுகளை விரல் கொண்டு தேய்த்து விடுவதும், ஒவ்வொருமுறையும் சாப்பிட்ட பின்பு வாய் கொப்பளிப்பதும் மருத்துவ அறிவுரை ஆகும். பல் துலக்குவதற்கு ஆலமரம், அரசு, வேம்பு மரங்களின் குச்சிகளை பயன்படுத்துவது சிறந்தது.

0 comments:

Post a Comment