Showing posts with label சினிமா. Show all posts
Showing posts with label சினிமா. Show all posts

Wednesday, January 29, 2014

சிம்புதேவன் இயக்கும் படத்தில் விஜய் ஜோடியாக தீபிகாபடுகோனே?



விஜய் ஜில்லா படத்துக்கு பின் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கும் படத்தில் நடிக்கிறார். இருவரும் துப்பாக்கி ஹிட் படத்துக்கு பிறகு மீண்டும் இணைந்துள்ளனர்.

 இதன் படப்பிடிப்பு அடுத்த மாதம் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இப்படத்துக்கு பின் சிம்புதேவன் இயக்கும் படத்தில் விஜய் நடிப்பார் என செய்தி வெளியாகியுள்ளது.

சிம்புதேவன் ஏற்கனவே இம்சை அரசன் 23ம் புலிகேசி என்ற ஹிட் படத்தை டைரக்டு செய்தவர். கதை விஜய்க்கு பிடித்ததால் அவர் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டு விட்டதாக கூறப்படுகிறது.

ஏ.ஆர்.முருகதாஸ் படம் முடிந்ததும் இதன் படப்பிடிப்பை துவக்குகின்றனர். இந்த படத்துக்கு கதாநாயகியாக தீபிகா படுகோனேயை தேர்வு செய்துள்ளதாக தகவல் கசிந்துள்ளது.

தீபிகா படுகோனே கோச்சடையான் படத்தில் ரஜினி ஜோடியாக நடித்துள்ளார். தமிழ் இந்தியில் தயாரான சென்னை எக்ஸ்பிரஸ் படத்திலும் நடித்து இருக்கிறார்.

 அடுத்து விஜய் ஜோடியாகிறார். இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Monday, January 27, 2014

ஹீரோயின் இல்லாத படம்..!



ஹீரோயின் இல்லாமல் தயாராகிறது மொழிவது யாதெனில்...

 இதுபற்றி இயக்குனர் எஸ்.கோபாலகிருஷ்ணன் கூறியதாவது: இப்படத்துக்கு இலக்கிய தமிழில் பெயர் வைக்கப்பட்டது ஏன் என்கிறார்கள். தமிழில் பெயர் வைக்க வேண்டும் என்ற எண்ணமும், இப்படத்துக்கு அப்படியொரு தலைப்பு தேவைப்பட்டதாலும் வைத்தோம்.

சொல்வது என்னவென்றால் என்ற பொருளில் இதன் தலைப்பு அமைந்துள்ளது. நட்பை பற்றி நிறைய கதைகள் வந்திருந்தாலும் இது நட்பை இன்னும் ஆழமாகவும் அழுத்தமாகவும் சொல்லும் படம். உயிரை காப்பாற்றிய நண்பனின் கடனுக்காக தனது வாழ்க்கையையே தியாகம் செய்யும் இரண்டு நண்பர்களின் கதைதான் இது. பின்னணி பாடகர் எஸ்.என்.சுரேந்தர் மகன் விராஜ் ஹீரோவாக அறிமுகமாகிறார்.

இவர் சென்னை 28 படத்தில் சிவா கோஷ்டியிடம் பந்தயம்கட்டி கிரிக்கெட் பேட்டை ஜெயித்து எடுத்துச்செல்லும் சிறுவனாக நடித்தவர். இக்கதைக்கு ஹீரோயின் அவசியப்படவில்லை என்பதால் தேர்வு செய்யவில்லை. ராஜன், ரியாஷ், தேஜ், மீனுகார்த்திகா, லஷ்யா, பாலு ஆனந்த் உள்பட பலர் நடிக்கின்றனர், நித்யன் கார்த்திக் இசை அமைக்கிறார்.

ராஜபாண்டி ஒளிப்பதிவு செய்கிறார். கே.ஆர்.மாணிக்கவாசகம், பழனிச்சாமி, எஸ்.வி.தீபாராணி தயாரிக்கின்றனர். ஈரோடு, சென்னை, புதுச்சேரியில் ஷூட்டிங் நடந்துள்ளது.

மீண்டும் சூப்பர் ஹீரோக்கள்..!



அதேதான். எதன் காரணமாக ஹாலிவுட் திரைப்படங்கள் பிரபஞ்சம் எங்கும் தன் நெட் ஒர்க்கை விரிவுபடுத்தியதோ, எதை மையமாக வைத்து கல்லாவை நிரப்பியதோ..!

அந்த காலம் மீண்டும் திரும்பியிருக்கிறது. யெஸ், சூப்பர் ஹீரோக்கள்தான் இந்த ஆண்டும் ஹாலிவுட் வசூலை பால் வெளியைத் தாண்டி உயர்த்தி இருக்கிறார்கள்.

வரலாறு திரும்பி இருக்கிறது. ஆனால், லேசான மாறுதலுடன். முந்தைய சூப்பர் ஹீரோ படம் போல் இன்று ஹீரோயிச படங்கள் எடுக்கப் படுவதில்லை. கதைகளிலும், காட்சிகளிலும், ஆக்ஷனிலும் உணர்வுகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். சூப்பர் ஹீரோவுக்கும் மனது உண்டு. அவனும் குற்ற உணர்ச்சியால் தவிப்பான். இயலாமையால் தத்தளிப்பான். அவ்வளவு ஏன் வில்லனிடம் தோற்கவும் செய்வான்... என்ற எதார்த்தத்தை அடிநாதமாக சூப்பர் ஹீரோ சப்ஜெக்டுக்குள் நுழைத்து இருக்கிறார்கள்.

வெற்றிப் பெற்ற அயர்ன் மேன் 3, தோர்: த டார்க் வோல்ட், மேன் ஆஃப் ஸ்டீல் ஆகியப் படங்கள் இதைத்தான் உணர்த்துகின்றன. வேறு வழியில்லை. இதற்கு மேல் யாரைத்தான் சூப்பர் ஹீரோக்கள் எதிர்ப்பார்கள்? கம்யூனிச நாடுகள் இன்று அமெரிக்காவை எச்சரிக்கும் வகையில் இல்லை. ஓசாமா பின்லேடன் மறைந்த இடத்தில் புல் முளைத்துவிட்டது. சதாம் ஹுசேன் ஈராக் மக்களின் நினைவுகளில் கூட இல்லை. ஊதிப் பெருக்கப்பட்ட இஸ்லாமிய பயங்கரவாதம் என்ற சொற்றொடரும் பல்லிளித்துவிட்டது. அனைத்துக்கும் மேல் அமெரிக்க பொருளாதாரம் அதளபாதாளத்துக்கு வீழ்ந்துவிட்டது. இந்நிலையில் நரம்பு புடைக்க, முஷ்டியை மடக்கி யாரை நோக்கி கர்ஜிப்பது?

பெட்டிப் பாம்பாக அடங்கி விஞ்ஞானிகளையும், நிதிமூலதன நிறுவனங்களையும் கேள்வி கேட்க ஆரம்பித்துவிட்டார்கள். தவிர, இப்போது ஹாலிவுட்டில் எடுக்கப்படும் படங்களும் வெறும் அமெரிக்காவை மட்டுமே குறிவைத்து எடுக்கப்படுவதில்லை. ஆசிய நாடுகள், மத்திய கிழக்கு நாடுகள், ஆஸ்திரேலியா, ஐரோப்பா... என பிராந்திய மார்க்கெட்டை மனதில் கொண்டே உருவாக்கப்படுகின்றன. ஸோ, கதையின் தன்மைகளும், காட்சிகளின் உருவாக்கவும் அதற்கு ஏற்பவே அமைக்கப்படுகின்றன. இந்த உண்மைகளைத்தான் இந்த ஆண்டு வெளியான  வெற்றிப் பெற்ற  மண்ணைக் கவ்விய அனைத்து ஹாலிவுட் படங்களும் வெளிச்சமிட்டு காட்டி இருக்கின்றன. இந்த மாற்றம் நல்லதா கெட்டதா என்பதை
இப்போது சொல்ல முடியாது. காலம்தான் அதை தீர்மானிக்க வேண்டும். ஆனால், மெல்ல மெல்ல மாற்றம் நிகழ்ந்து வருவது மட்டும் நிஜம்.

அதே போல் பல நாவல்கள் இந்த ஆண்டும் திரை வடிவம் கண்டிருக்கின்றன. ஆனால், இரண்டே இரண்டு மட்டும்தான் பட்டையை கிளப்பி இருக்கின்றன. அவை, த ஹங்கர் கேம்ஸ்: கேட்சிங் ஃபயர். ஹங்கர் கேம்ஸ் டிரையாலஜி நாவல்களின் இரண்டாம் பாகம் இது. முந்தைய முதல் பார்ட் போலவே இந்த இரண்டாவதும் சக்கைப்போடு போட்டிருக்கிறது. போலவே வோல்ட் வார் இசட் நாவலும் அதே பெயரில் வெளியாகி கல்லாவை டாலர்களால் நிரப்பியிருக்கின்றன.

இந்த இரு நாவல்களுமே பசி, பஞ்சம் அதற்காக நடக்கும் வன்முறை போராட்டம், செல்வந்தர்களின் வக்கிரம்... ஆகியவற்றை அடிப்படையாக கொண்டவை. கிட்டத்தட்ட இன்றைய உலக மக்கள் எதிர்கொள்ளும் இருத்தலியல் சிக்கல் இவைகள்தான். எனவே அந்த உணர்வுகளுக்கு இந்த இரு படங்களும் தீனி போட்டன.

போலவே முந்தைய வருடங்கள் போல் இந்த வருடமும் அனிமேஷன் படங்கள் கோதாவில் இறங்கி அனைவரையும் மிரட்டியிருக்கின்றன. டிஸ்பிகபுள் மீ 2, மான்ஸ்ட்ரஸ் யூனிவர்சிட்டி, த க்ரூட்ஸ் ஆகிய மூன்று படங்களும் பம்பர் ஹிட் ஆகியிருப்பது நல்ல விஷயம். பெரியவர்களுக்குள் இருக்கும் குழந்தைகளுக்கும், குழந்தைகளுக்குள் இருக்கும் குதூகலத்துக்கும் தீனி தேவை. அதை இந்த மூன்றுப் படங்களும் பூர்த்தி செய்திருக்கின்றன.

பல ஆக்ஷன் படங்கள் ரிலீசாகி இருந்தாலும் ஒன்றே ஒன்றுதான் சக்சஸ். அது, ஃபாஸ்ட் அண்ட் ஃபியூரியஸ் 6. ஆனால், முழுக்க முழுக்க வெர்சுவல் ஸ்டூடியோவில் எடுக்கப்பட்ட கிராவிட்டி அனைவரையும் நடுங்க வைக்கும் அளவுக்கு வசூலில் மிரட்டியிருக்கிறது. ஒருவகையில் இது ஆரோக்கியமான விஷயம். ஏனெனில் இனி வரும் காலங்களில் பலப் படங்கள் வெர்சுவல் ஸ்டூடியோக்களில்தான் தயாராகப் போகின்றன. அதற்கான அஸ்திவாரத்தை இந்தப் படம் போட்டிருக்கிறது.

மண்ணைக் கவ்விய படங்களுக்கும் குறைச்சலில்லை. குறிப்பாக மெகா பட்ஜெட்டில் தயாராகி, ஆர்ப்பாட்டத்துடன் வெளியான த ஃபிஃப்த் எஸ்டேட், புல்லட் டூ த ஹெட், பார்க்கர், ப்ரோக்கன் சிட்டி, பேட்டில் ஆஃப் த இயர், கெட்டவே, ஆர்.ஐ.பி.டி., த பிக் வெட்டிங், த லோன்
ரேன்ஜர், ஜாக் த ஜெயின்ட் ஸ்லேயர் ஆகியவை இந்தப் பட்டியலில் இணைந்திருக்கும் வைரங்களாக கருதப்பட்ட கண்ணாடி துகள்கள்.

ஆண்டு இறுதியில் வெளிவரவிருக்கும் ஹாபிட் இரண்டாம் பாகம், ஃப்ரோசன் உள்ளிட்ட படங்கள் இங்கு கணக்கில் எடுத்துக் கொள்ளப்படவில்லை.

மொத்தத்தில் கதைத் தன்மையில் கொஞ்சூண்டு எதார்த்தத்துக்கு ஹாலிவுட் மாறி இருக்கிறது. இதுதான் 2013 ஹாலிவுட்டின் நிலைமை.

Sunday, January 26, 2014

”ரஜினி இதுவரை வாழ்த்து சொல்லவில்லை” – கமல்ஹாசன்



பத்ம பூஷண் விருது கிடைத்ததிற்கு ரஜினி வாழ்த்து இதுவரைக்கு சொல்லல. இனிமேதான் சொல்லுவார். எல்லாரும் சொல்லி முடிச்ச உடனே நிதானமாக சொல்லுவார். அவரைப் பற்றி எனக்குத் தெரியும். அவருக்கு நான் சொல்லும் வாழ்த்தும் அப்படிப்பட்டதுதான்.” என்று பத்ம பூஷண் விருது பெறுவதையொட்டி, நடிகர் கமல்ஹாசன் சென்னை – ஆழ்வார்பேட்டையில் உள்ள தன் அலுவலகத்தில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த போது தெரிவித்தார்.

நடிகர் கமலஹாசனுக்கு மத்திய அரசு பத்மபூஷண் விருது அறிவித்துள்ளது. இதைத்தொடர்ந்து ஆழ்வார்பேட்டை அலுவலகத்தில் இன்று அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.அப்போது,””நான் பணியாற்றும் துறையில் தகுதியானவர்கள், திறமையாளர்கள் பலரும் இருக்கையில் என் பெயர் பத்ம பூஷண் பட்டியலில் இடம்பெற்றது எனக்கு கிடைத்த பெருமை. இந்தப் பட்டத்திற்கு தகுதி உள்ளவனாக இனிமேல்தான் நான் ஆக வேண்டும். இனிமேல் நான் போகவேண்டிய தூரத்திற்கான ஊக்கியாக, இந்த விருதை நான் எடுத்துக் கொள்கிறேன். இந்தப் பெருமைக்கு தகுதியுள்ளவனாக நான் என்னையாக்கிக் கொள்ள வேண்டும் என்பது தான் எனது எண்ணம்.”


பாரத ரத்னா விருது எப்போது வாங்கப் போகிறீர்கள்..?

“நான் எப்போதுமே மெதுவாகத்தான் போவேன். பள்ளிப் படிப்பில்கூட அப்படித்தான். இந்த நாட்டில் மக்கள் கொடுத்திருக்கும் அங்கீகாரம்தான் முதன்மையானது. அதற்குப் பிறகுதான் விருதுகள். நீங்கள் சொல்வது போன்று அதுதான் அடுத்த கட்டம் என்று நினைத்தால், அதுவும் சாத்தியம்தான்.”

கிரிக்கெட்டில் 25 ஆண்டுகள் சாதனைபடைத்த சச்சினுக்கு பாரத ரத்னா வழங்கியுள்ளார்கள். ஆனால், நீங்கள் 50 ஆண்டுகளாக மக்களை மகிழ்வித்துக் கொண்டு இருக்கிறீர்களே. உங்களுக்கு கிடைக்காதை எப்படிப் பார்க்கிறீர்கள்?

“கண்டிப்பாக எதுவும் நினைக்கவில்லை. சுதந்திரப் போராட்டம் மாதிரிதான். கிடைத்தாலும் சரி, மறந்தாலும் சரி எனக்கு ஒ.கே தான். இருப்பதற்கும், பணி செய்வதற்கு தகுதியுடையவனாக இருப்பதே பெரிய பட்டம்.”

பத்ம பூஷண் விருது கிடைத்ததிற்கு ரஜினி வாழ்த்து கூறினாரா..?


“இதுவரைக்கு சொல்லல. இனிமேதான் சொல்லுவார். எல்லாரும் சொல்லி முடிச்ச உடனே நிதானமாக சொல்லுவார். அவரைப் பற்றி எனக்குத் தெரியும். அவருக்கு நான் சொல்லும் வாழ்த்தும் அப்படிப்பட்டதுதான்.”

இவ்விருதை யாருக்கு சமர்பிக்க விரும்புகிறீர்கள்..?

“எனக்கு கற்றுக் கொடுத்தவர்களுக்கு, குடும்பத்திற்கு இந்த விருதை நான் சமர்ப்பிகிறேன். சம்பளம் வாங்கிக்கொண்டும், சம்பளம் கொடுத்தும் கற்றுக்கொடுத்தவர்கள் அனைவருக்குமே இந்த விருதை சமர்ப்பிகிறேன். சண்முகம் அண்ணாச்சியும், பாலசந்தர் அவர்களும் இதில் முதன்மையானவர்கள். அது மறக்க முடியாத நன்றிக்கடன். தீர்க்க முடியாத கடன். எனக்கு இகழ்வுகள் ஏற்படும் போது மட்டுமே, அது என்னுடையதாகிறது. எனக்கு புகழ் வரும் போது எல்லாம் எனக்கு பின்னால் பலர் இருக்கிறார்கள்.”

ஆஸ்கர் விருது எப்போது..?


“இந்த ஊர்ல வியாபாரம் பண்றவங்களுக்கு ஐ.எஸ்.ஐ தான் முக்கியம், யு.எஸ்.ஐ எதற்கு? அந்த ஊர்ல வேலை செய்யும்போது யு.எஸ்.ஐ பார்த்துக் கொள்ளலாம். அந்த ஊருக்கு வியாபாரத்திற்கு போகும்போது கண்டிப்பாக அது பெரிய பெயராக இருக்கும். அவங்களுக்கும், எனக்கும் தேவைப்பட்டால் போவேன்.”

எப்போதுதான் மனநிறைவு பெறுவீர்கள்..?

“நிறைவு என்பதே எனக்கு கிடையாது. எனக்கு பசி மாதிரிதான். இன்றைக்கு நிறையுற மாதிரியிருக்கும், நாளைக்கு பசிக்கும். என்னோட தேடல் எல்லாம் பசி. சினிமா நுட்பம் அதிவேகமாக வளர்ந்துகொண்டிருக்கும் காலத்தில் ‘போதும்’ என்றால் எப்படி?”

இந்தத் தருணத்தில் உங்களது ரசிகர்களுக்கு நீங்கள் கூற விரும்புவது..?


“இந்த விருது, இனிமேல் நான் செய்யப் போகும் வேலைக்கான பாராட்டு. வேலை செய்ததிற்கான பாராட்டு என்று நீங்களும் நினைக்க கூடாது, நானும் நினைக்கவில்லை. என்னை ஊன்றுக்கோளாக வைத்து அவர்கள் உயர்வதற்கும் நான் பயன்பட்டுக் கொண்டிருக்கின்றேன். அவர்கள் பொதுப்பணி செய்வதற்கும் நான் ஒரு ஊக்கியாக இருக்கிறேன். எனக்குக் கிடைக்கும் ஊக்கம் எல்லாம் அவர்களுக்கு கிடைக்கும் ஊக்கமாகத்தான் பார்க்கிறேன்.”

கடந்தாண்டு இதே நேரத்தில் விஸ்வரூபம் பிரச்சினை. இந்தாண்டு பத்ம பூஷண் விருது. அதற்கான மருந்தாக நினைக்கிறீர்களா?

“அப்படி நான் எடுத்துக் கொண்டால் அது கொடுக்கல் வாங்கலாகிடும். அது அல்ல என்று நான் நினைக்கிறேன்.”

விஸ்வரூபம் தடை செய்யப்பட்டபோது இதே இடத்தில் தான் பேசினீர்கள். விருதுக் கிடைத்தவுடனும் இதே இடத்தில் தான் பேசுகிறீர்கள். உங்களது மனநிலை இப்போது எப்படியிருக்கிறது?

“ஒரே மனநிலைதான். இதே இடத்துலதான் நான் சின்ன பிள்ளையா நடிகனா வருவேனா மாட்டேனா என்று நினைத்துக் கொண்டிருந்தேன். இதே இடத்துலதான் பாலசந்தர் சார் கூப்பிடுறாருன்னு சொன்னப்போது இங்க உட்காந்துதான் யோசிச்சிட்டு இருந்தேன். பல விஷயங்கள் இந்த இடத்துல நடந்துருக்கு. ஒரு பக்குவான மனநிலைக்கு என்னை கொண்டு வந்துவிட்டார்கள். எனக்கு எல்லாமே படிக்கட்டுதான்.”

நீங்கள் நடித்த படங்களில் உங்களுக்குப் பிடித்த படம் எது..?

“ஒரு படத்தைப் பற்றி தனியாக கூற முடியாது. சிவாஜி சாரை எடுத்துக் கொண்டால் ஒரு படத்தைப் பற்றி கூற முடியாது. கப்பலோட்டிய தமிழன், பராசக்தி, பாசமலர் இப்படி எல்லாமே சேர்ந்துதான் சிவாஜி சார் படங்கள் பற்றி பேசும்போது வரும். நான் ஒரு படம் முடிச்சுட்டு அடுத்த படம் போகும் போது எனக்கு அதுதான் முக்கியமான படமாக தோன்றும். வாழ்க்கையின் முக்கியமான படமாகவும் மாறிவிடும்.”

மருதநாயகம் பணிகள் எப்போது தொடங்க இருக்கிறீர்கள்..?


மருதநாயகம் செய்யணும். காசு கொடுங்க பண்ணிடுறேன்.

அரசியலில் ஈடுபடும் எண்ணம் இருக்கிறதா..?

“எல்லாருமே அரசியல்வாதிகள்தான். 5 வருஷத்திற்கு ஒரு தடவை கைல கறையை போட்டுக் கொள்கிறோம். விரல்ல வைக்குற அந்தக் கறை போதும் கைப்பூறம் எதற்கு.”

இன்று 65-வது குடியரசு தினம். இதையொட்டி நீங்கள் சொல்லும் செய்தி..?

“இதுவரைக்கும் அடையவில்லை என்பதற்கான எல்லாச் சான்றும் இருக்கிறது. அடைந்து விட்டோம் என்பதற்கான அடையாளங்களும் இருக்கிறது. மேலை நாடுகளில் எல்லாம் சாய்ச்சுக்கிட்டு வந்துட்டோம்னு சொல்றாங்களே அது இன்னும் இந்தியாவில் அடையவில்லை. இன்னும் பிளவுகள், சாதி ஒழிந்த பாடில்லை. அப்படியிருக்கும் போது நாம் எப்படி பெருமைப்பட்டு கொண்டிருக்க முடியும்..?

பாரதியார் பாடின பாப்பாக்களுக்கு எல்லாம் கொள்ளுப் பேத்திகள் பிறந்து விட்டார்கள். ஆனால் இன்னும் அந்த சாதியை விட்டபாடில்லை. சாதிக்காக இன்னும் ரத்தம் சிந்திக்கொண்டே இருக்கின்றோம். இன்னும் போக வேண்டிய தூரம் இருக்கிறது. 65 ஆண்டுகள் எல்லாம் வேண்டாம். 6.5 என்று வேண்டுமானால் வைத்துக் கொள்ளலாம்.”

உங்களோடு இணைந்து கவிஞர் வைரமுத்துவும் விருது வாங்க இருக்கிறாரே. பேசினீர்களா..?

“நேற்றே அவருக்கிட்ட சொல்லிட்டேன். அவருக்கு கிடைக்கும் எல்லா புகழும் எனக்கு கிடைத்த மாதிரி. ஞான பீடம் விருது மாதிரி என்ன விருது வாங்கினாலும், எனக்கு கிடைத்த சந்தோஷம் வருகிறது. அவ்வளவு நெருங்கிய நட்பு எங்களுடையது. நிறைய விஷயங்கள் அவரிடமிருந்து நான் கற்றுக் கொள்வதும், என்னை பல விஷயங்களுக்காக அவர் தனிமையில் வந்து பாராட்டுவதும் இப்படி பல நிகழ்வுகள் எங்களுக்குள் நடந்திருக்கின்றன. பெரிய சந்தோஷம் என்னென்னா, அவருடன் சேர்ந்து விருது வாங்க போறேன் என்பது தான்.”

விஸ்வரூபம் 2 படப் பணிகள் எந்தளவில் இருக்கிறது..?

“வேலைகள் முடிந்துவிட்டது. இறுதிக்கட்டப் பணிகள் இசை, கிராபிக்ஸ் பணிகள் இருக்கிறது.”

சுயசரிதை எழுதும் எண்ணம் இருக்கிறதா..?


“நான் சுயசரிதை என்ற விஷயத்திற்கு எதிரானவன். பேட்டிகள் என்றால் ஆர்வத்தோடு இருப்பேன். நிறைய சுயசரிதைகள் பொய்யானவை தான். சுயசரிதையை எழுத மாட்டேன். நிஜம் பேசணும். நிஜம் பேசணும் அப்படிங்கிற வீராப்புல பல பேரை புண்படுத்திற கூடாது. என்னைப் பற்றி எல்லா விஷயங்களையும் சொல்லிட முடியுமானு எனக்கு தெரியல. பேட்டி வேண்டுமானால் கொடுத்துக் கொள்ளலாம். உங்களுக்கு என் மீதிருக்கும் எல்லா சந்தேகங்களும் அப்படியே இருக்கட்டும், அமையட்டும்.”

விண்ணைத்தாண்டி வருவாயா வெற்றிபெறவில்லையா..?



கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் கடந்த 2010 ஆண்டு குடியரசு தினத்தில் வெளியான திரைப்படமான விண்ணைத் தாண்டி வருவாயா திரைப்படத்தின் இந்தி ரீமேக்கான ”ஏக் தீவானா தா” திரைப்படம் வணிக ரீதியாக வெற்றிபெறவில்லை என்று கூறப்பட்டுள்ளது.

ஆர்.எஸ்.இன்போடெயின்மெண்ட் மற்றும் எஸ்கேப் ஆர்டிஸ்ட் மோசன் பிக்சர்ஸ் இணைந்து தயாரித்த திரைப்படம் விண்ணைத் தாண்டி வருவாயா. லிட்டில் சூப்பர் ஸ்டார் சிம்பு மற்றும் திரிசா முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். தமிழில் இப்படம் பெரும்வெற்றியடைந்து பாக்ஸ் ஆபீஸ் ஹிட்டில் இணைந்தது.

தமிழில் இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இப்படம் ஹிந்தியிலும் ரீமேக் செய்யப்பட்டது. ஹிந்தியில் இப்படத்தினை பாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் தயாரித்திருந்தது.

தமிழில் இப்படம் வெற்றியடைந்திருந்த போதிலும், இதன் ஹிந்தி ரீமேக்கான “ஏக் தீவானா தா” திரைப்படம் வணிக ரீதியாக பெரும் தோல்வியைச்
சந்தித்ததாகக் கூறப்படுகிறது. இப்படத்தின் ஹிந்தி ரீமேக்கில் பிரதிக் பாபர் மற்றும் எமி ஜேக்சன் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர்.

விண்ணைத் தாண்டி வருவாயா படத்தின் இந்தி ரீமேக்கின் மூலம் கிடைத்த வருமானத்தைத் தன்னுடன் கௌதம் வாசுதேவ் மேனன் பங்கிட்டுக் கொள்ளாததால் அவரைக் கைது செய்யவேண்டும் என்று ஆர்.எஸ்.இன்போடெயின்மெண்ட் ஆர்.ஜெயராமன் வழக்குத் தொடர்ந்திருந்தார். இவ்வழக்கினை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட நீதிமன்றம், கௌதம் வாசுதேவ் மேனனை கைது செய்யக்கோரும் இவ்வழக்கினை வருகிற பிப்ரவரி 3 ஆம் தேதி வரை இடைக்காலத் தடைவிதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

உலக நாயகன் கமல்ஹாசன் பதம் விபூசன் விருதினைப் பெறவுள்ளார்..!



உலக நாயகன் பதம்ஸ்ரீ கமல்ஹாசன் இந்திய அரசின் இரண்டாவது மிக உயரிய விருதுகளில் ஒன்றான பதம் விபூசன் விருதினைப் பெறவுள்ளார்.

ஒவ்வொரு துறையிலும் மிகச் சிறந்த பங்களிப்புகளைச் செய்தவர்களைப் கௌரவிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினவிழாவினை ஒட்டி பத்ம விருதுகள் அறிவிக்கப்படும். அந்த வகையில் இவ்வாண்டிற்கான பத்மபூசன் மற்றும் பத்ம விபூசன் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இன்று மாலை பத்ம விருதுகளைப் பெறுவோர் குறித்த அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. இந்தியாவின் உயரிய விருதுகளில் இரண்டாவதாக மதிக்கப்படும் பதம் விபூசன் விருதினை உலக நாயகன் கமல்ஹாசன் பெறவுள்ளார்.

ஏற்கெனவே கடந்த 1990 ஆம் ஆண்டு உலக நாயகன் கமல்ஹாசனுக்கு பத்மஸ்ரீ விருது வழங்கிக் கௌரவித்தது இந்திய அரசு. பதம்ஸ்ரீ விருதுகள் இந்திய அரசின் உயரிய விருதுகளில் மூன்றாவது இடத்தையும், பத்ம விபூசன் விருதுகள் இரண்டாவது இடத்தையும், பாரத ரத்னா முதல் இடத்தையும் வகிப்பது குறிப்பிடத்தக்கது.

மீண்டும் இணைகிறதா வருத்தப்படாத வாலிபர் சங்கம் கூட்டணி..!



கடந்த ஆண்டின் ப்ளாக் பஸ்டர் படமான வருத்தப்படாத வாலிபர் சங்கத்தின் இயக்குனர் பொன்ராம் மற்றும் நடிகர் சிவகார்த்திகேயன் கூட்டணியில்
மீண்டும் ஒரு படம் தயாராகலாம் என்று கூறப்படுகிறது.

இயக்குனர் எம்.ராஜேஷின் முன்னாள் உதவி இயக்குனரான பொன்ராம் சிவகார்த்திகேயன், ஸ்ரீதிவ்யா நடித்த வருத்தப்படாத வாலிபர் சங்கம்
திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். அறிமுகப்படமே ப்ளாக் பஸ்டர் படமாக அமைந்தது. சென்ற ஆண்டு வெளியான திரைப்படங்களில் அதிக வசூலைக் குவித்த திரைப்படங்களில் இப்படமும் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது.

வருத்தப்படாத வாலிபர் சங்கத்தின் மூலம் அறிமுகமான நாயகியான ஸ்ரீதிவ்யா தற்பொழுது கோலிவுட்டின் மோஸ்ட் வாண்டட் ஹீரோயினாகப் பரிணமித்துவருகிறார்.

திருப்பதி பிரதர்ஸ் என்.லிங்குசாமி தயாரிக்கவிருக்கும் புதிய திரைப்படத்தில் இயக்குனர் பொன்ராம் மற்றும் சிவகார்த்திகேயன் கூட்டணியில்
ஒரு படம் தயாரிக்கப்படலாம் என்று கூறப்பட்டுவருகிறது. விரைவில் இப்படத்தினைப் பற்றிய அறிவிப்புகள் வெளியாகலாம்.

சிவகார்த்திகேயன் தற்பொழுது இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் கதை மற்றும் திரைக்கதையில், திருக்குமரன் இயக்கிவரும் மான்கராத்தே திரைப்படத்தில் நடித்துவருகிறார்.

அஜீத்தை வைத்து இயக்கவில்லை.. அடுத்த பட ஹீரோக்கள் ஆர்யா - கிருஷ்ணா..!



எனது அடுத்த படம் அஜீத்துடன் இல்லை.. ஆர்யாவையும் கிருஷ்ணாவையும் வைத்து இயக்குகிறேன், என்று இயக்குநர் விஷ்ணுவர்தன் கூறியுள்ளார்.

 ரஜினியின் பில்லா பட ரீமேக்கில் அஜீத்தை வைத்து இயக்கி வெற்றி கண்டார் விஷ்ணுவர்தன். பின்னர் ஆரம்பம் படத்தில் இருவரும் இணைந்தனர். இந்தப் படமும் வெற்றி பெற்றது.

இந்த நிலையில் மூன்றாவதாக அஜீத்தை வைத்து விஷ்ணுவர்தன் சொந்தமாக படம் தயாரித்து இயக்கப் போகிறார் என்று கூறப்பட்டது.

இதனை மறுத்துள்ளார் விஷ்ணுவர்தன். இதுகுறித்து அவர் கூறுகையில், "விஷ்ண்வர்தன் பிலிம்ஸ்' என்ற தயாரிப்பு நிறுவனத்தை புதிதாக ஆரம்பித்துள்ளது உண்மைதான்.

இந்த நிறுவனம் தயாரிக்கும் முதல் படத்தில் ஆர்யா மற்றும் கிருஷ்ணா நடிக்கிறார்கள். அஜீத்தை வைத்து இப்போது இயக்கும் திட்டம் எதுவும் இல்லை. எதிர்காலம் எப்படியோ.. பார்க்கலாம்,' என்றார்

அடுத்தடுத்த வெற்றிகள் குவிந்தும்...! சம்பளத்தை ஏற்றாத விஜய் சேதுபதி..!



சினிமாவில் அடுத்தடுத்து வெற்றிகள் கிடைத்தாலும் தனது சம்பளத்தை இன்னும் உயர்த்தாமல் உள்ளாராம் விஜய் சேதுபதி.

 தென்மேற்குப் பருவக்காற்று படம் மூலம் அறிமுகமானவர் விஜய் சேதுபதி. முதல் படத்திலேயே மிகப் பெரிய பாராட்டு கிடைத்தது. அதற்கு முன் சில படங்களில் துணை நடிகராக நடித்து போராடித்தான் ஹீரோவானார்.

அடுத்து சுந்தர பாண்டியன் படத்தில் நெகடிவ் பாத்திரத்தில் நடித்தார். அந்தப் படம் பெரிய வெற்றியைப் பெற்றது. அடுத்து வெளியான பீட்சாவில் அவர் ஹீரோ. படம் பிரமாத வெற்றி. அடுத்தடுத்து அவர் ஹீரோவாக நடித்த நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம், சூது கவ்வும் போன்ற படங்கள் பாக்ஸ் ஆபீஸில் பெரிய லாபம் பார்த்தன. இந்த நேரத்தில் அவர் சம்பளம் ரூ 2.5 கோடி என்று கூறப்படுகிறது.

 பொதுவாக இத்தனை வெற்றிப் படங்களை அடுத்தடுத்து கொடுக்கும் ஹீரோக்கள் சம்பளத்தை கணிசமாக ஏற்றிவிடுவார்கள். ஆனால் விஜய்சேதுபதி அமைதியாக அதே சம்பளம்தான் வாங்குகிறாராம்.

 இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா பற்றி எதிர்மறை விமர்சனங்கள் வந்தாலும் அந்தப் படம் நன்றாகவே ஓடி லாபம் சம்பாதித்தது. அடுத்து விஜய் சேதுபதியின் ரம்மி, பண்ணையாரும் பத்மினியும் போன்ற படங்கள் வெளியாக உள்ளன.

 இந்தப் படங்கள் வந்த பிறகே, தனது சம்பளத்தை உயர்த்தப் போகிறாராம் விஜய் சேதுபதி.

Saturday, January 25, 2014

எஸ்.ஜே.சூர்யாவின் அஜித் ராசி..!



அஜித்தின் பிறந்த நாள் அன்று ‘இசை’ படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளாராம் எஸ்.ஜே.சூர்யா.

நீண்ட நாட்களுக்குப் பிறகு எஸ்.ஜே. சூர்யா இயக்கி, நடித்து வரும் படம் 'இசை'.
கிட்டத்தட்ட படப்பிடிப்பு முடிந்த இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யாவுக்கு ஜோடியாக சாவித்திரி நடித்திருக்கிறார்.

இந்தப் படத்திற்கு எஸ்.ஜே.சூர்யாவே இசை அமைக்கிறார். படத்தினை வருகிற மே 1ம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளாராம் எஸ்.ஜே.சூர்யா.

மே 1-க்கும், எஸ்.ஜே.சூர்யாவுக்கும் ஒரு ராசி உண்டு. எஸ்.ஜே. சூர்யா, அஜித்தை வைத்து முதன் முதலாக இயக்கிய ‘வாலி’ படம் 1999ம் ஆண்டு மே 1ம் தேதி ரிலீசாகி தான் மாபெரும் வெற்றி பெற்றது.

அந்த சென்டிமென்ட்டில் தான் ‘இசை’யை மே 1ம் தேதிரிலீஸ் செய்கிறார் எஸ்.ஜே.சூர்யா.

பிலிம்பேர் விருதுகள் - சிறந்த அறிமுக நாயகன் விருது பெற்ற தனுஷ்..!




பாலிவுட் திரையுலகில் சிறந்த திரைப்படங்களுக்கு ஆண்டுதோறும் விருதுகள் வழங்கப்படுகின்றன. பொதுமக்களின் வாக்கெடுப்பு, நிபுணர்கள் குழு அளிக்கும் பரிந்துரை ஆகியவற்றின் அடிப்படையில் விருதுக்கான படங்கள் மற்றும் நட்சத்திரங்கள் தேர்வு செய்யப்படுகின்றன.

அந்த வகையில் 59-வது பிலிம்பேர் விருதுகளுக்கான படங்கள் மற்றும் நட்சத்திரங்கள் தேர்வு செய்யப்பட்டு இன்று அறிவிக்கப்பட்டன. முன்னணி நட்சத்திரமான தீபிகா படுகோனே, கடந்த ஆண்டு 4 படங்களில் நடித்துள்ளார். இந்த படங்கள் நல்ல வரவேற்பை பெறாத போதிலும், ராம் லீலாவில் அவரது சிறந்த நடிப்பு மற்றும் ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவுடன் பிலிம்பேர் விருதுக்கான சிறந்த நடிகையாக தீபிகா படுகோனே தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இதேபோல், சிறந்த நடிகராக பர்கான் அக்தர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். பாக் மில்கா பாக் படத்திற்காக இந்த விருது அவருக்கு வழங்கப்படுகிறது. இதேபேல் சிறந்த படமாக பாக் மில்கா பாக் படம் தேர்வு பெற்றுள்ளது. சிறந்த அறிமுக நாயகனாக தமிழ் நடிகர் தனுஷ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ராஞ்சனா படத்தில் சிறப்பாக நடித்ததற்காக இந்த விருது அவருக்கு வழங்கப்படுகிறது.



 
பிலிம்பேர் விருதுகள் வருமாறு:

  • சிறந்த நடிகர்- பர்கான் அக்தர் (பாக் மில்கா பாக்)
  • சிறந்த நடிகை- தீபிகா படுகோனே (ராம் லீலா)
  • சிறந்த இயக்குனர்- ராகேஷ் ஓம் பிரகாஷ் மெஹ்ரா (பாக் மில்கா பாக்)
  • சிறந்த படம் – பாக் மில்கா பாக்
  • சிறந்த அறிமுக இயக்குனர் – ரித்தேஷ் பத்ரா (தி லஞ்ச்பாக்ஸ்)
  • சிறந்த அறிமுக நாயகன் – தனுஷ் (ராஞ்சனா)
  • சிறந்த அறிமுக நாயகி – வாணி கபூர் (ஷுத்த தேசி ரொமான்ஸ்)
  • சிறந்த கதை-சுபாஷ் கபூர் (ஜோலி எல்எல்பி)
  • வாழ்நாள் சாதனையாளர் விருது – தனுஜா
  • சிறந்த இசை – ஜீத் கங்குலி, மிதூன் மற்றும் அங்கிட் திவாரி (ஆஷிக்கி-2)
  • சிறந்த பாடல் – பிரசூன் ஜோஷி (ஜிந்தா)
  • சிறந்த பின்னணி பாடகர் – ஆரிஜித் சிங் (தும் ஹி ஹோ, ஆஷிக்கி)
  • சிறந்த பின்னணி பாடகி – மோனாலி தாக்கூர் (சவார் லூன், லூத்தேரா)

Friday, January 24, 2014

முத்தத்தால் விதார்த்தை கிரங்கடித்த மனிஷா..!



ஒரு பாடல் முழுக்க விதார்த்துக்கு முத்தம் கொடுத்துள்ளாராம் மனிஷா யாதவ்.

விதார்த், சூரி நடிப்பில் உருவாகியுள்ள புதிய படம் ‘பட்டையக் கௌப்பணும் பாண்டியா’.

இப்படத்தில் விதார்த்துக்கு ஜோடியாக மனிஷா யாதவ் நடித்துள்ளார். அருள் தேவ் இசையில் வெளிவந்துள்ள இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு நேற்று சென்னையில் நடந்தது.

இவ்விழாவில், இயக்குனர்கள் கே.எஸ்.ரவிக்குமார், விக்ரமன், தயாரிப்பாளர் கேயார், நடிகர்கள் ராதாரவி, விதார்த், சூரி, நடிகை மனிஷா ஜித் உள்ளிட்ட திரையுலக கலைஞர்கள் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியைத் தொடர்ந்து இப்படக்குழுவினர் பத்திரிகையாளர்களை சந்தித்தனர். இந்த சந்திப்பின்போது இயக்குனர் கூறுகையில், பட்டையக் கௌப்பணும் பாண்டியா’ படத்தில் விதார்த் ஓட்டுனராகவும், சூரி நடத்துனராகவும் வருகிறார்.

‘பாஸ் என்ற பாஸ்கரன்’ படத்தில் ஆர்யா-சந்தானம் ஜோடி போல், இந்த படத்திலும் விதார்த்-சூரி ஜோடி படம் முழுக்க வருகிறார்கள்.

முழுக்க முழுக்க கொமடி படமாக உருவாகியுள்ளது. இப்படத்தில் இடம்பெறும் ஒரு பாடல் முழுக்க நாயகி, நாயகனுக்கு முத்தம் கொடுப்பது போன்ற காட்சியை படமாக்கியுள்ளோம் என்றும் இந்த பாடலில் நடிக்க மனிஷா யாதவ் எந்தவித மறுப்பும் தெரிவிக்கவில்லை எனவும் கூறியுள்ளார்.

நடிகையின் கவர்ச்சிக்கா..! ரூ.80 லட்சம் செலவு..! எஸ்.ஜே.சூர்யா



எஸ்.ஜே.சூர்யா நீண்ட இடைவேளைக்கு பின்னர் ‘இசை‘ என்னும் படத்தை நடித்து இயக்கி வருகிறார். இந்த படத்தின் மூலம் அவர் இசையமைப்பாளராகவும் அறிமுகம் ஆகிறார்.

இந்த படத்தின் கதை இளையராஜா மற்றும் ஏ.ஆர்.ரஹ்மானை தழுவி எடுக்கப்படுவதாக கூறப்படுகிறது.

எஸ்.ஜே.சூர்யாவுடன் சாவித்திரி என்ற புதுமுக நடிகை அறிமுகம் ஆகிறார். சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு கொடைக்கானலில் நடந்தது. இதற்காக ரூ.80 லட்சம் செலவில் இதுவரை யாரும் படமாக்கப்படாத பகுதியில் ஒரு கிராமத்தையே உருவாக்கியுள்ளார் சூர்யா.

ஒரு சர்ச் மற்றும் 40 வீடுகள் அடங்கிய ஒரு குட்டி கிராமத்தையே செட் போட்டு உருவாக்கி அதில் படப்பிடிப்பு நடத்தி வருகிறார். மிகக்கவர்ச்சியான ரொமாண்டிக் காட்சியில் கொடைக்கானலில் படமாக்கப்பட்டதாம்.

நடிகை சாவித்திரி ஒரு புதுமுகம் போல இல்லாமல் படப்பிடிப்புக்கு அபார ஒத்துழைப்பு கொடுப்பதாக கூறும் எஸ்.ஜே.சூர்யா, இந்த படம் வெளிவந்தவுடன், சாவித்திரி, ஹன்சிகா, காஜல் அகர்வால், தமன்னா போன்ற நடிகைகளுக்கு கடும் நெருக்கடி கொடுப்பார் என கூறியுள்ளார்.

இந்த படம் வரும் பிப்ரவரி 14ல் ரிலீஸ் செய்ய முதலில் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் படப்பிடிப்பு பணிகள் தாமதம் ஆவதால் ஏப்ரலில் ரிலீஸ் ஆகும் என தெரிகிறது.

நடிக்க வந்துவிட்டார் இசைப்புயல்..!



நடிப்பதற்கு அவதாரம் எடுத்துள்ளார் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான்.

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், ஹைவே என்ற இந்தி படத்துக்கு இசையமைத்துள்ளார்.

அலியா பட், ரந்தீப் ஹூடா ஆகியோர் நடித்துள்ள இந்த படத்தில் படகா கட்டி என்ற ஒரு பாடலையும் பாடியுள்ளார்.

இந்த படத்தின் பாடல் கம்போசிங்கை, வீடியோ எடுத்து, படத்தை விளம்பரப்படுத்த திட்டமிட்டுள்ளார்.

இந்நிலையில் இயக்குனர் இம்தியாஸ் அலி, அதில் ரகுமானை பாடலுக்கு ஏற்ப நடிக்க வைத்து உள்ளாராம். இதை ரகுமானே இணையதளத்தில் தெரிவித்துள்ளார்.

கோலி சோடா திரை விமர்சனம்..!




தனக்கென எந்த அடையாளமும் இல்லாது… ஆசியாவின் மிகப்பெரிய காய்கனி அங்காடியான கோயம்பேடு மார்‌கெட்டில் மூட்டை தூக்கிபிழைக்கும் நான்கு சிறுவர்கள்.. தனக்கென ஏற்படுத்திக்கொண்ட அடையாளத்தையும், அந்த அடையாளம் அழிக்கப்படும் போது கோவப்பட்டு எழுவதையும் தன்னுடைய பாணியில் விஜய்மில்டன் எளிமையாக சொல்லியிருக்கும் படம்தான் கோலிசோடா…

‘பசங்க’ படத்தில் நடித்த ஸ்ரீராம், கிஷோர், பாண்டி, குட்டிமணி, யாமினி ஆகியோரே இந்தபடத்தில் நடித்திருக்கிறார்கள்….

கோயம்பேடு மார்கெட்டில் இரவு முழுவதும் மூட்டை தூக்கிபிழைத்து கொண்டு… தனக்கென்று எதுவும் இல்லாது.. தன்னுடைய பெயர்கூட என்னவென்று தெரியாத இந்த நான்கு சிறுவர்களும் (சிறுவர்களும் அல்ல பெரியவர்களும் அல்ல) எப்படியாவது.. நமக்கும் ஏதாவது அடையாளம் வேண்டும் என்று முடிவெடுக்கிறார்கள்…

இந்த மார்கெட்டிலே ஏதாவது செய்து தன்னுடைய சொந்தகாலில் நிற்க நினைக்கும் இவர்களை.. மார்க்கெட்டில் காய்கறி ஏஜென்டாக இருக்கும் ஆச்சி இவர்களுக்கு உறுதுணையாக நிற்கிறார்… (ஆச்சியாக பசங்க படத்தில் கிஷோருக்கு அம்மாவாக நடித்தவர்)… மேலும் மார்க்கெட்டை தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ரவுடி நாயுடை (வில்லன்) பார்த்து உதவிகேட்கிறார்கள்…

அவரும்‌ தன்னுடைய பயன்படாத குடோனை கொடுத்து உதவுகிறார்… என்ன தொழில் செய்வது என்று யோசித்து பின் ”ஆச்சி மெஸ்” என்ற உணவகத்தை திறக்கிறார்கள்…. நன்றாக செயல்பட்டு “ஆச்சி மெஸ்” என்ற அடையாளத்தை பெறுகிறார்கள்…

இதற்கிடையில் ரவுடி நாயுடுவின் ஆட்கள் ஹோட்டலில் தண்ணியடிப்பது, தவறான செய்கைகள் செய்வது என தொடர… அதை இந்த பசங்க கேட்க இருவர்களுக்கும் கைகலப்பு ஆகிவிடுகிறது….

தெருவில் அவமானப்பட்ட ரவுடிகள் தன்னுடைய ரவுடி என்ற அடையாளத்தை காட்ட இழந்த மானத்தை காப்பாற்ற அதே இடத்தில் அவர்களை அழித்து மக்களுக்கு தம்மீது உள்ள பயத்தை தக்கவைக்க நினைக்கிறார்கள்…

இந்த பசங்களும் எப்படியாவது தன்னுடைய ஆச்சி மெஸ் என்ற அடையாளத்தை விட்டுவிடக்கூடாது என்று அந்த ரவுடிகளுடன் போராடுகிறார்கள்… ஒரு கட்டத்தில் நான்குபேரையும் அ‌டித்து உதைத்து திரும்பி வராதமாதிரி இந்தியாவின் நான்கு மூளைகளில் விட்டுவிடுகிறார்கள்…

நம்முடைய அடையாளம் போய்விட்டதே என்று குமுரும் இவர்கள் மீண்டும் ஒன்று சேர்ந்து தம்முடைய அடையாளம் எங்கு பறிபோனதோ மீண்டும் அங்கேதான் அதை பெற வேண்டும் என்று மீண்டும் கோயம்பேடு ஆச்சி மெஸ் வருகிறார்கள்…

ரவுடிகளுடன் சண்டையிட்டு அந்த இடத்தை பிடித்தார்களா… தன்னுடைய அடையாளத்தை பெற இவர்கள் என்ன செய்கிறார்கள்… அவமானம் பட்ட ரவுடி கும்பல் ரவுடிஸம் என்ற தன்னுடைய அடையாளத்தை பெற என்ன வில்லத்தனம் செய்கிறார்கள்.. இறுதியில் யார் யார் தன்னுடைய அடையாளங்களை தக்க வைத்துக்கொண்டார்கள் என்று நல்லதொரு கிளைமேக்ஸில் சொல்லி கைதட்டலோடு முடித்திருக்கிறார் விஜய் மில்டன்….

பசங்க படத்தில் நடித்த அந்த நான்குபேரும் கதைக்கு எற்றார்போல் பொருந்தியிருக்கிறார்கள்… முதல்பாதியில் காதல், கலாட்டா, என துருதுருவென்று குறும்போடு திரியும் இவர்கள்… பிற்பாதியில் ரவுடிகளோடு போராட்டம் என ஒவ்வொறு காட்சிகள் நெகிழவைக்கிறது…

இந்த நால்வரோடு நம்ம அண்ணாச்சி இமான் நடித்திருக்கிறார்… நகைச்சுகைக்கும் பையன்களோடு செய்யும் சேட்டைக்கும் சபாஷ் பெறுகிறார்..

படம் முழுக்க முழுக்க கோயம்பேடு மார்கெட்டில் படமாக்கியிருக்கிறார்கள்… கேமராவை மறைத்துவைத்து யதார்த்தமாக எடுத்ததாக சில தகவல்கள் வந்தது.. உண்மையில் அப்படித்தான் சில காட்சிகள் எடுத்திருக்கிறார்கள்… பாராட்டலாம்…

பாடல்கள் என்று தனியாக மொக்கை போடாமல் கதையோடு கலந்து ஒருசில கானாக்கள் வருகிறது…. ஒரு பாடலுக்கு நம்ம பவர்ஸ்டாரையும், சாம் ஆண்டர்சனையும் ஆடவைத்திருப்பது சூப்பர்…

சில படங்களை ஒளிப்பதிவு செய்ததின் மூலம் தனித்து விளங்கிய விஜய்மில்டன் இந்தபடத்தின் மூலம் இயக்கத்திலும் வித்தியாச இயக்குனர் வ‌ரிசையில் இடம் பிடிப்பார் என்று நம்புகிறேன்…

செண்டிமெனட் வசனங்கள், (சில வசனங்கள் உண்மையில் கைதட்டவைக்கிறது.. கண்ணீரை வரவைக்கிறது) யதார்த்தமான சண்டைக்காட்சிகள், பசங்க செய்யும் குறும்புள், கூடசேரும் இரண்டு பள்ளி மாணவிகள்… பசங்களுக்கு பரிதாபப்பட்டு உதவும் போலீஸ் என படம்முழுக்க ரசிக்கும்படி இருக்கிறது…

கோடிகோடியாய் கொட்டி படம் எடுத்து… அதை நல்லப்படம் என்று மக்களை நம்பவைத்து.. தேவையில்லாத விளம்பரங்களை தேடி அப்படியும் ஊத்திக்கொண்டுப்போதும் படங்களுக்கு மத்தியில்.. குறைந்த முதலீட்டில் எளிமையான கதையின் மூலம் ஜெயித்துவிட்டது இந்த கோலி சோடா.

எல்லாருக்கும் இங்கு அடையாளங்கள் இருக்கிறது. அந்த அடையாளங்களை அழிக்க நினைத்தால் அவர்களுக்குள் இருந்து ஒரு எழுச்சி பொங்கிவரும் அப்படி பொங்கி வந்தால் என்னாவாகும் என்று… கோலி சோடாவை மேற்கோள்காட்டி 2 மணிநேர கதையில் சொல்லியிருக்கிறார்கள்….!

உதயநிதியுடன் மீண்டும் இணையும் நயன்தாரா..!



இது கதிர்வேலன் காதல் படத்தை தொடர்ந்து உதயநிதி அடுத்து நடிக்கும்  படம் “நண்பேன் டா”. இப்படத்தை இயக்குபவர் ஏ.ஜெகதீஷ் இயக்குனர் ராஜேஷின் ஆஸ்தான சிஷ்யனும் கூட, சிவா மனசுல சக்தி, பாஸ் என்கிற பாஸ்கரன், ஒரு கல் ஒரு கண்ணாடி ஆகிய படங்களில் பணியாற்றியுள்ளார்.

ஜெகதீஷ் சொன்ன கதையில் இம்ப்ரெஸ் ஆகி உடனே ஓகே சொல்லியுள்ளார் உதய். இது கதிர் வேலன் காதல் படத்திலேயே உதய்- நயன்தார ஜோடி பொருத்தும் மிக அழகாக வந்து உள்ளதால் இப் படத்திலும் இதே ஜோடி தொடர்கிறது.

வழக்கம் போல் சந்தானமும் காமெடியில் கலக்க ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்க உள்ளார். படத்தை பற்றி இயக்குனர் கூறுகையில் இது ஒரு முற்றிலும் ஜனரஞ்சகமான  பொழுதுபோக்கு படமாக இருக்கும் என கூறியுள்ளார் .

தமன்னா அடுத்த ரவுண்டுக்கு ரெடி..!



இன்றைய தமிழ் சினிமாவில் வெற்றி மட்டுமே ஒருவரின் நிலையை நிலைநிறுத்தாவும் அல்லது தூக்கி விசவும் செய்கிறது. இந்த நிலை கதாநாயகிக்கு தவிர மற்ற எல்லா கலைஞர்களுக்கும் பொருந்தும்

கதாநாயகிகளுக்கு வெற்றி காற்று இங்கு வீசவில்லை என்றதும் மற்ற மொழி படங்களில் காத்து வாங்க செல்வது வழக்கம் . அது போல் தமன்னாவின் கடைசி சில படங்கள் இங்கு பெட்டியை காலி செய்ய மற்ற மொழி படங்களில் காற்று வாங்க சென்று விட்டார் .

அவரின் போறதா காலம் அங்கும் சில சறுக்கல்கள் சந்தித்தார். என்ன செய்வது என்று திணறிய தமன்னாவுக்கு சிவாவின் அழைப்பு ஒரு வரப்பிரசாதமாக அமைந்தது. ஏற்கனவே சிறுத்தை படத்தில் ஒன்றாக பணிபுரிந்ததால் தமன்னா இதில் பொருத்தமாக இருப்பர் என்று எண்ணி தலையிடம் சிபாரிசு செய்தார்கள். அவரும் ஓகே சொல்ல ஏக குஷியனர் தமன்னா.

வீரம் படத்தின் வெற்றி அவரோடைய அடுத்த ரவுண்டுக்கு பிள்ளையார் சுழி போட்டு உள்ளது என்று சொல்ல வேண்டும். அதுவும் வீரம் படத்தில் கதாநாயகி சுற்றிய கதை அமைக்க பட்டதால் அவரோடைய நடிப்புக்கு பலத்த வரவேற்பு கிடைத்த உள்ளது.

சிவா அடுத்து இயக்கவிருக்கும் கார்த்தி படத்திலும் தமன்னா தான் ஜோடியாம். சிறுத்தைக்கு பிறகு கார்த்தியின் சினிமா வாழ்க்கை கொஞ்சம் தடுமாற்றம் தடம் போரள ஆரம்பித்தது. இதனால் வெறுப்பு அடைந்த நம்ம ஹீரோ இதே கூட்டணி மறுபடியும்  சேர வேண்டும் என்று சிவாவிடம் சொல்லியுள்ளார்.

ஆகவே தமன்னாவிக்கு  அதிஷ்ட காற்று புயலாய்  விச ஆரம்பித்த உள்ளது..

Thursday, January 23, 2014

விஜய்யின் 58வது லிஸ்டில் இயக்குனர் சிம்புதேவன்..!



ஜில்லாவின் வசூல் வெற்றி விஜய்யின் அடுத்து படத்துக்கான எதிர்பார்ப்பு பல மடங்கு அதிகரித்து உள்ளது. தற்போது நடிக்கவிருக்கும் முருகதாஸ் படத்தின் வேலைகள் மும்முரமாக நடைபெற்று கொண்டு இருக்க அவரது 58வது படத்துக்கான இயக்குனர் யாரு என்று கேள்வி கோடம்பாக்கத்தில் ஹாட் டாபிக் .

விஜய்யின் 58 படத்தை P.T செல்வகுமார் தயாரிக்க போகிறார் என்பது தெரிந்த விஷயமாக இருந்தாலும் படத்துக்கான இயக்குனர் தேர்வும் ஒரு புறம் நடைபெற்று கொண்டே தான் இருந்தது.

நாள்தோறும் இவர் இயக்க போகிறார் அவர் போகிறார் என பலரோடைய பெயர்கள் அடிபட்டன. கடைசியில் ஷங்கர் ரின் சிஷ்யன் சிம்பு தேவன் இயக்க போகிறார் என்கிறது தயாரிப்பு நிறுவனம்.

சமிபத்தில் இவர் சொன்ன கதை விஜய்க்கு பிடித்து போக உடனே தயாரிப்பாளரிடம் முன்பணம் வாங்கியுள்ளார் சிம்பு தேவன்.

இந்த வருடத்தின் இறுதியில் படப்பிடிப்பு தொடங்கிறது எனவும் இது ஒரு பக்கா பொழுதுபோக்கு படமாக இருக்கும் என்று தெரிவித்து உள்ளனர்

விக்ரமனின் நினைத்தது யாரோ..!



தமிழ் சினிமாவில் அழகான குடும்பக் கதைகள் எடுப்பதில் கைதேர்ந்தவரான விக்ரமனின் நினைத்தது யாரோ திரைப்படம் வருகிற ஜனவரி 31ல் வெளியாகும் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.

விக்ரமனின் படங்கள் பெரும்பாலும் அமைதியும், பண்பும் நிறைந்த பாத்திரங்களால் சூழப்பட்டிருக்கும். மேலும் பெரும்பாலும் அவரது
பாத்திரங்கள் அனைத்துமே நல்லவர்களாகவே படைக்கப்பட்டிருப்பார்கள்.

இளைய தளபதி விஜயின் மெஹா ஹிட் படமான பூவே உனக்காக, சுப்ரீம் ஸ்டார் சரத்குமாரின் சூர்ய வம்சம், கேப்டன் விஜயகாந்தின் வானத்தைப் போல, சூர்யாவின் உன்னை நினைத்து என தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களின் வெற்றிப் படங்களை இயக்கியவர் விகரன்.

அதிரடி ஹிட் படங்களைக் கொடுத்துவந்த விக்ரமன் சமீபக் காலங்களில் அதிகப் படங்களை இயக்கவில்லை. அவரது இயக்கத்தில் கடந்த 2009ல் மரியாதை திரைப்படம் வெளியானது. அதற்குப் பிறகு அவரது இயக்கத்தில் உருவாகிவரும் திரைப்படமான நினைத்தது யாரோ திரைப்படம் வருகிற ஜனவரி 31ல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இம்முறையும் விக்ரம் ஹிட்டடிப்பாரா என்று பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

Wednesday, January 22, 2014

ரூ.100 கோடி குவித்த ‘ஜில்லா’..!



ஜில்லா படம் 7 நாட்களில் ரூ 100 கோடியைக் குவித்துவிட்டதாக, அந்தப் படத்துக்கான அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளனர்.

பொங்கலை முன்னிட்டு விஜய்யின் ஜில்லா, அஜித்தின் வீரம் ஆகிய இரு படங்களும் வெளியாகின.

இரண்டு படங்களுக்குமே ரசிகர்களின் ஆதரவு அமோகமாக இருந்ததால், இரண்டும் வெற்றிப் படங்களாக அறிவிக்கப்பட்டுவிட்டன.

இதுவரை ஜில்லாவுக்கு ரூ 40 கோடிக்கு மேலும், வீரத்துக்கு அதைவிட ஓரிரு கோடிகள் குறைவாகவும் வசூலாகியுள்ளதாக தெரிய வருகிறது.

சில இணைய தளங்களில் ஜில்லா 70 கோடி குவித்துவிட்டதாகவும், வீரம் ரூ 58 கோடி குவித்துள்ளதாககவும் செய்தி வெளியிட்டுள்ளனர்.

இதற்கெல்லாம் சிகரம் வைத்த மாதிரி ஜில்லாவின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில், அந்தப் படம் ரூ 100 கோடியை வெறும் 7 நாட்களில் குவித்துவிட்டதாக ஒரு படத்தை டிசைன் செய்து செய்தி வெளியிட்டுள்ளனர்.