Friday, January 24, 2014

முத்தத்தால் விதார்த்தை கிரங்கடித்த மனிஷா..!



ஒரு பாடல் முழுக்க விதார்த்துக்கு முத்தம் கொடுத்துள்ளாராம் மனிஷா யாதவ்.

விதார்த், சூரி நடிப்பில் உருவாகியுள்ள புதிய படம் ‘பட்டையக் கௌப்பணும் பாண்டியா’.

இப்படத்தில் விதார்த்துக்கு ஜோடியாக மனிஷா யாதவ் நடித்துள்ளார். அருள் தேவ் இசையில் வெளிவந்துள்ள இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு நேற்று சென்னையில் நடந்தது.

இவ்விழாவில், இயக்குனர்கள் கே.எஸ்.ரவிக்குமார், விக்ரமன், தயாரிப்பாளர் கேயார், நடிகர்கள் ராதாரவி, விதார்த், சூரி, நடிகை மனிஷா ஜித் உள்ளிட்ட திரையுலக கலைஞர்கள் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியைத் தொடர்ந்து இப்படக்குழுவினர் பத்திரிகையாளர்களை சந்தித்தனர். இந்த சந்திப்பின்போது இயக்குனர் கூறுகையில், பட்டையக் கௌப்பணும் பாண்டியா’ படத்தில் விதார்த் ஓட்டுனராகவும், சூரி நடத்துனராகவும் வருகிறார்.

‘பாஸ் என்ற பாஸ்கரன்’ படத்தில் ஆர்யா-சந்தானம் ஜோடி போல், இந்த படத்திலும் விதார்த்-சூரி ஜோடி படம் முழுக்க வருகிறார்கள்.

முழுக்க முழுக்க கொமடி படமாக உருவாகியுள்ளது. இப்படத்தில் இடம்பெறும் ஒரு பாடல் முழுக்க நாயகி, நாயகனுக்கு முத்தம் கொடுப்பது போன்ற காட்சியை படமாக்கியுள்ளோம் என்றும் இந்த பாடலில் நடிக்க மனிஷா யாதவ் எந்தவித மறுப்பும் தெரிவிக்கவில்லை எனவும் கூறியுள்ளார்.

நடிகையின் கவர்ச்சிக்கா..! ரூ.80 லட்சம் செலவு..! எஸ்.ஜே.சூர்யா



எஸ்.ஜே.சூர்யா நீண்ட இடைவேளைக்கு பின்னர் ‘இசை‘ என்னும் படத்தை நடித்து இயக்கி வருகிறார். இந்த படத்தின் மூலம் அவர் இசையமைப்பாளராகவும் அறிமுகம் ஆகிறார்.

இந்த படத்தின் கதை இளையராஜா மற்றும் ஏ.ஆர்.ரஹ்மானை தழுவி எடுக்கப்படுவதாக கூறப்படுகிறது.

எஸ்.ஜே.சூர்யாவுடன் சாவித்திரி என்ற புதுமுக நடிகை அறிமுகம் ஆகிறார். சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு கொடைக்கானலில் நடந்தது. இதற்காக ரூ.80 லட்சம் செலவில் இதுவரை யாரும் படமாக்கப்படாத பகுதியில் ஒரு கிராமத்தையே உருவாக்கியுள்ளார் சூர்யா.

ஒரு சர்ச் மற்றும் 40 வீடுகள் அடங்கிய ஒரு குட்டி கிராமத்தையே செட் போட்டு உருவாக்கி அதில் படப்பிடிப்பு நடத்தி வருகிறார். மிகக்கவர்ச்சியான ரொமாண்டிக் காட்சியில் கொடைக்கானலில் படமாக்கப்பட்டதாம்.

நடிகை சாவித்திரி ஒரு புதுமுகம் போல இல்லாமல் படப்பிடிப்புக்கு அபார ஒத்துழைப்பு கொடுப்பதாக கூறும் எஸ்.ஜே.சூர்யா, இந்த படம் வெளிவந்தவுடன், சாவித்திரி, ஹன்சிகா, காஜல் அகர்வால், தமன்னா போன்ற நடிகைகளுக்கு கடும் நெருக்கடி கொடுப்பார் என கூறியுள்ளார்.

இந்த படம் வரும் பிப்ரவரி 14ல் ரிலீஸ் செய்ய முதலில் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் படப்பிடிப்பு பணிகள் தாமதம் ஆவதால் ஏப்ரலில் ரிலீஸ் ஆகும் என தெரிகிறது.

நடிக்க வந்துவிட்டார் இசைப்புயல்..!



நடிப்பதற்கு அவதாரம் எடுத்துள்ளார் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான்.

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், ஹைவே என்ற இந்தி படத்துக்கு இசையமைத்துள்ளார்.

அலியா பட், ரந்தீப் ஹூடா ஆகியோர் நடித்துள்ள இந்த படத்தில் படகா கட்டி என்ற ஒரு பாடலையும் பாடியுள்ளார்.

இந்த படத்தின் பாடல் கம்போசிங்கை, வீடியோ எடுத்து, படத்தை விளம்பரப்படுத்த திட்டமிட்டுள்ளார்.

இந்நிலையில் இயக்குனர் இம்தியாஸ் அலி, அதில் ரகுமானை பாடலுக்கு ஏற்ப நடிக்க வைத்து உள்ளாராம். இதை ரகுமானே இணையதளத்தில் தெரிவித்துள்ளார்.

கோலி சோடா திரை விமர்சனம்..!




தனக்கென எந்த அடையாளமும் இல்லாது… ஆசியாவின் மிகப்பெரிய காய்கனி அங்காடியான கோயம்பேடு மார்‌கெட்டில் மூட்டை தூக்கிபிழைக்கும் நான்கு சிறுவர்கள்.. தனக்கென ஏற்படுத்திக்கொண்ட அடையாளத்தையும், அந்த அடையாளம் அழிக்கப்படும் போது கோவப்பட்டு எழுவதையும் தன்னுடைய பாணியில் விஜய்மில்டன் எளிமையாக சொல்லியிருக்கும் படம்தான் கோலிசோடா…

‘பசங்க’ படத்தில் நடித்த ஸ்ரீராம், கிஷோர், பாண்டி, குட்டிமணி, யாமினி ஆகியோரே இந்தபடத்தில் நடித்திருக்கிறார்கள்….

கோயம்பேடு மார்கெட்டில் இரவு முழுவதும் மூட்டை தூக்கிபிழைத்து கொண்டு… தனக்கென்று எதுவும் இல்லாது.. தன்னுடைய பெயர்கூட என்னவென்று தெரியாத இந்த நான்கு சிறுவர்களும் (சிறுவர்களும் அல்ல பெரியவர்களும் அல்ல) எப்படியாவது.. நமக்கும் ஏதாவது அடையாளம் வேண்டும் என்று முடிவெடுக்கிறார்கள்…

இந்த மார்கெட்டிலே ஏதாவது செய்து தன்னுடைய சொந்தகாலில் நிற்க நினைக்கும் இவர்களை.. மார்க்கெட்டில் காய்கறி ஏஜென்டாக இருக்கும் ஆச்சி இவர்களுக்கு உறுதுணையாக நிற்கிறார்… (ஆச்சியாக பசங்க படத்தில் கிஷோருக்கு அம்மாவாக நடித்தவர்)… மேலும் மார்க்கெட்டை தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ரவுடி நாயுடை (வில்லன்) பார்த்து உதவிகேட்கிறார்கள்…

அவரும்‌ தன்னுடைய பயன்படாத குடோனை கொடுத்து உதவுகிறார்… என்ன தொழில் செய்வது என்று யோசித்து பின் ”ஆச்சி மெஸ்” என்ற உணவகத்தை திறக்கிறார்கள்…. நன்றாக செயல்பட்டு “ஆச்சி மெஸ்” என்ற அடையாளத்தை பெறுகிறார்கள்…

இதற்கிடையில் ரவுடி நாயுடுவின் ஆட்கள் ஹோட்டலில் தண்ணியடிப்பது, தவறான செய்கைகள் செய்வது என தொடர… அதை இந்த பசங்க கேட்க இருவர்களுக்கும் கைகலப்பு ஆகிவிடுகிறது….

தெருவில் அவமானப்பட்ட ரவுடிகள் தன்னுடைய ரவுடி என்ற அடையாளத்தை காட்ட இழந்த மானத்தை காப்பாற்ற அதே இடத்தில் அவர்களை அழித்து மக்களுக்கு தம்மீது உள்ள பயத்தை தக்கவைக்க நினைக்கிறார்கள்…

இந்த பசங்களும் எப்படியாவது தன்னுடைய ஆச்சி மெஸ் என்ற அடையாளத்தை விட்டுவிடக்கூடாது என்று அந்த ரவுடிகளுடன் போராடுகிறார்கள்… ஒரு கட்டத்தில் நான்குபேரையும் அ‌டித்து உதைத்து திரும்பி வராதமாதிரி இந்தியாவின் நான்கு மூளைகளில் விட்டுவிடுகிறார்கள்…

நம்முடைய அடையாளம் போய்விட்டதே என்று குமுரும் இவர்கள் மீண்டும் ஒன்று சேர்ந்து தம்முடைய அடையாளம் எங்கு பறிபோனதோ மீண்டும் அங்கேதான் அதை பெற வேண்டும் என்று மீண்டும் கோயம்பேடு ஆச்சி மெஸ் வருகிறார்கள்…

ரவுடிகளுடன் சண்டையிட்டு அந்த இடத்தை பிடித்தார்களா… தன்னுடைய அடையாளத்தை பெற இவர்கள் என்ன செய்கிறார்கள்… அவமானம் பட்ட ரவுடி கும்பல் ரவுடிஸம் என்ற தன்னுடைய அடையாளத்தை பெற என்ன வில்லத்தனம் செய்கிறார்கள்.. இறுதியில் யார் யார் தன்னுடைய அடையாளங்களை தக்க வைத்துக்கொண்டார்கள் என்று நல்லதொரு கிளைமேக்ஸில் சொல்லி கைதட்டலோடு முடித்திருக்கிறார் விஜய் மில்டன்….

பசங்க படத்தில் நடித்த அந்த நான்குபேரும் கதைக்கு எற்றார்போல் பொருந்தியிருக்கிறார்கள்… முதல்பாதியில் காதல், கலாட்டா, என துருதுருவென்று குறும்போடு திரியும் இவர்கள்… பிற்பாதியில் ரவுடிகளோடு போராட்டம் என ஒவ்வொறு காட்சிகள் நெகிழவைக்கிறது…

இந்த நால்வரோடு நம்ம அண்ணாச்சி இமான் நடித்திருக்கிறார்… நகைச்சுகைக்கும் பையன்களோடு செய்யும் சேட்டைக்கும் சபாஷ் பெறுகிறார்..

படம் முழுக்க முழுக்க கோயம்பேடு மார்கெட்டில் படமாக்கியிருக்கிறார்கள்… கேமராவை மறைத்துவைத்து யதார்த்தமாக எடுத்ததாக சில தகவல்கள் வந்தது.. உண்மையில் அப்படித்தான் சில காட்சிகள் எடுத்திருக்கிறார்கள்… பாராட்டலாம்…

பாடல்கள் என்று தனியாக மொக்கை போடாமல் கதையோடு கலந்து ஒருசில கானாக்கள் வருகிறது…. ஒரு பாடலுக்கு நம்ம பவர்ஸ்டாரையும், சாம் ஆண்டர்சனையும் ஆடவைத்திருப்பது சூப்பர்…

சில படங்களை ஒளிப்பதிவு செய்ததின் மூலம் தனித்து விளங்கிய விஜய்மில்டன் இந்தபடத்தின் மூலம் இயக்கத்திலும் வித்தியாச இயக்குனர் வ‌ரிசையில் இடம் பிடிப்பார் என்று நம்புகிறேன்…

செண்டிமெனட் வசனங்கள், (சில வசனங்கள் உண்மையில் கைதட்டவைக்கிறது.. கண்ணீரை வரவைக்கிறது) யதார்த்தமான சண்டைக்காட்சிகள், பசங்க செய்யும் குறும்புள், கூடசேரும் இரண்டு பள்ளி மாணவிகள்… பசங்களுக்கு பரிதாபப்பட்டு உதவும் போலீஸ் என படம்முழுக்க ரசிக்கும்படி இருக்கிறது…

கோடிகோடியாய் கொட்டி படம் எடுத்து… அதை நல்லப்படம் என்று மக்களை நம்பவைத்து.. தேவையில்லாத விளம்பரங்களை தேடி அப்படியும் ஊத்திக்கொண்டுப்போதும் படங்களுக்கு மத்தியில்.. குறைந்த முதலீட்டில் எளிமையான கதையின் மூலம் ஜெயித்துவிட்டது இந்த கோலி சோடா.

எல்லாருக்கும் இங்கு அடையாளங்கள் இருக்கிறது. அந்த அடையாளங்களை அழிக்க நினைத்தால் அவர்களுக்குள் இருந்து ஒரு எழுச்சி பொங்கிவரும் அப்படி பொங்கி வந்தால் என்னாவாகும் என்று… கோலி சோடாவை மேற்கோள்காட்டி 2 மணிநேர கதையில் சொல்லியிருக்கிறார்கள்….!

பாடாய் படுத்தும் பல்வலி பற்றிய அதிர்ச்சி தகவல் ..!



”நாட்டிலேயே பல் மருத்துவமனையில் அதிகமாக புறநோயாளிகள் வருவது தமிழ்நாடு அரசு பல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில்தான். தினமும் 800 முதல் 1500 புறநோயாளிகள் வரை மருத்துவமனைக்கு வந்து செல்கின்றனர். 2007-ஆம் ஆண்டில் ஆண்டுக்கு 2.85 லட்சமாக இருந்த புறநோயாளிகள் எண்ணிக்கை, 2013-ஆம் ஆண்டில் 3.53 லட்சமாக அதிகரித்துள்ளது. மருத்துவக் கல்லூரிக்கென்று புதிய கட்டடங்கள் திறந்த பின்பு புறநோயாளிகளின் எண்ணிக்கை ஆண்டுக்கு 50 ஆயிரம் அதிகரித்துள்ளது.” என்று தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

பல் வலி, ஈறு வீக்கம், பல் கூச்சம், பல் பலமிழந்து ஆடுதல், கடினமான பொருட்களை மென்று சாப்பிட முடியாமை, பல்லடிச் சீழ் போன்றவை பல் வலி, சொத்தைப் பல் வலி ஏற்படுவதற்கான அறிகுறிகள் ஆகும். வாயில் ஏற்படும் தொற்று நோய்கள் மற்றும் உடலில் ஏற்படும் வேறு பல நோய்களின் காரணமாகவும் பல் வலி உருவாகலாம்.

மேலும் ஆரம்பகால சொத்தை பற்களை கவனிக்காமல் விட்டால் அது அந்த பற்களின் நரம்பு வரை சென்று நமக்கு வலி கொடுக்கிறது. அதனால் ஆரம்ப கால சொத்தையை அலட்சியப்படுத்தாமல், உடனே அதை டாக்டரிடம் சென்று அடைத்துக் கொள்ளலாம். அப்படி ஆரம்பத்திலேயே அடைத்து சரி செய்து கொண்டால் அந்த சொத்தை மேற்கொண்டு பரவுவதை தவிர்க்கலாம்.

* சரி இப்போது நரம்பு வரை பரவி வலி கொடுக்கிறது என்ன செய்யலாம்?

ஆரம்பகாலத்தில் வலி என்றாலே பற்களை பிடுங்கி விடுவார்கள். ஆனால் இப்போது அதற்கு அவசியம் இல்லை. சொத்தை நரம்பு வரை பரவினால்தான் வலி ஏற்படும் அப்படி பரவிய சொத்தையும் வேர் சிகிச்சை செய்து அந்த பல்லை காப்பாற்றிக் கொள்ளலாம் தயவு செய்து பற்களை எக்காரணத்தைக் கொண்டும் எடுத்துவிடாதீர்கள் அப்படியும் எடுக்க நேர்ந்தால் எடுத்த பற்களை 15 நாட்களிளோ அல்லது ஒரு மாதத்திலோ புதிய பல் கட்டி விட வேண்டும். இல்லையென்றால், மேல் பல் எடுத்து கட்டாவிட்டால் கீழ் பல் மேலே ஏறி அது இருக்கும் இடத்தை விட்டு நகர்ந்து அதுவும் உபாதைகளை ஏற்படுத்தும். அதே போல் கீழ் பல் எடுத்து கட்டாமல் விட்டால் மேல் பல் கீழே இற்ங்கி விடும்.

*சொத்தை இல்லாமலும் வலி ஏற்படுவதற்கு காரணம் என்ன?


சிலருக்கு சொத்தை இருக்காது. ஆனால் இந்த பல் மட்டும் வலி கொடுக்கிறது என்று சொல்வார்கள். அதற்கு காரணம் நிறைய நேரம் பல் துலக்குவதாலும், மிகவும் கடினமான பிரஷ்ஷை உபயோகிப்பதாலும் பற்கள் தேய்ந்து எனாமல் என்னும் வெளிப்புறப் பகுதியை எடுத்து விடுவார்கள். இது உள்ளே இருக்கும் குழாய் போல் பகுதியை திறந்து விடும். இதனால் அப்பற்கள் மிகவும் கூச்சத்தை ஏற்படுத்தி, பின்னர் வலி உண்டாக்கும். இப்படி இருக்கும் பற்களை அடைத்தோ அல்லது வேர் சிகிச்சை செய்து சரி செய்யலாம். பிரஷ் மிகவும் மென்மையாக இருக்க வேண்டும். மேலும் கீழுமாக பல் துலக்க வேண்டும். நீண்ட நேரம் துலக்க வேண்டாம். ஒன்றிலிருந்து இரண்டு நிமிடங்கள் தேய்த்தால் போதும், இதைக் கண்டிப்பாக நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

* ஈர்களில் தொந்தரவு இருந்தாலும் வலி வருமா?

நம் ஈர்களில் கேல்குலஸ் என்னும் சுண்ணாம்புப் போல் துகள்கள் சேர்ந்து விடும். இது மிகவும் கடினமாக இருக்கும் இதை பிரஷ் வைத்து தேய்த்தாலும் சுத்தப்படுத்த முடியாது இது அனைவருக்கும் ஏற்படும். இதை ஆறு மாதங்களுக்கு ஒறுமுறை பல் டாக்டரிடம் சென்று சுத்தப்படுத்திக்கொள்ள வேண்டும் அப்படி சுத்தப்படுத்தாமல் விட்டால் அவை ஈர்களை அரித்து எலும்புவரைச் சென்று பற்களில் வலி ஏற்படுத்தி, பின்னர் பற்கள் ஆடி தானாகவே விழுந்து விடும் அல்லது எடுக்கும்படி ஆகிவிடும். நீண்ட நாள் புண் இருந்தால் கண்டிப்பாக கவனிக்க வேண்டும்.

* 19 வயதிலிருந்து 25 வயதிற்குள் மூன்றாவது கடாபல் முளைக்கும். அது வலி தருமா?
19 வயதில் மூன்றாவது கடாபல் முளைக்கும் போது அந்த பல் வருவதற்கான போதுமான இடம் இல்லாததாலும் மிகவும் கஷ்டப்பட்டு முளைப்பதாலும் அந்த இடமே வீங்கி வலி ஏற்படும். அதை டாக்டரிடம் காண்பித்து அந்த பல் சரியான திசையில் இருக்கிறதா என்று எக்ஸ்ரே மூலம் பார்த்து தெரிந்துக் கொள்ளலாம். சரியாக இருக்கிறது பல் வந்து விடும் என்றால் அதற்கு மாத்திரைகள் சாப்பிட்டால் போதும். அப்படி சரியாக முளைக்கவில்லை எக்ஸ்ரேவில் பல் சாய்ந்தோ, படுத்தோ இருந்தால் அதை ஒரு சின்ன அறுவை சிகிச்சை மூலமாகத்தான் அந்த பல்லை எடுக்க வேண்டும்.

* ஈரில் கட்டிகள் ஏற்படுவதால் வலி வருமா?

ஈரில் கட்டிகள் ஏற்பட்டு வீங்கி வலி தரும். இது பல்வேறு காரணங்களால் கட்டி வருகிறது முக்கியமான காரணம் முற்பற்கள் எந்த காரணத்தாலோ சிறுவயதில் அடிப்பட்டிருந்தால் அதை கவனிக்காமல் விட்டு விட்டால் பல் வேர்களை சுற்றி இருக்கும் நார் போன்ற தசைகள் கிழிந்து அதன் மூலம் வீக்கம் வலி ஈர்களில் கட்டி வேர் நுனியில் கட்டி ஏற்படும் இதையும் வேர் சிகிச்சை மூலமாக சரி செய்யலாம்.

கைப்பக்குவ மருந்தாக வெந்நீரில் உப்பு போட்டு வாய் கொப்பளிக்கலாம். ஓரிரு கற்பூரவல்லி இலைகளையும், துளசியையும் நன்றாக மென்று வலியுள்ள இடத்தில் வைத்து அழுத்திக் கொள்ளலாம். சித்த மருத்துவ மருந்தாக இரண்டு துளி கிராம்பு தைலத்தை பஞ்சில் தோய்த்து பல் வலி உள்ள இடத்தில் வைத்துக் கொள்ளலாம். 3 முதல் 5 துளி சுக்கு தைலத்தை பஞ்சில் தோய்த்து பிழிந்து பல் வலி உள்ள இடத்தில் வைத்துக் கொள்ளலாம். ஒரு தம்ளர் வெந்நீரில் 10 துளி சுக்கு தைலத்தை கலந்து வாய் கொப்பளிக்கச் செய்ய வேண்டும். தினமும் கல்நார் பற்பொடி கொண்டு பல் துலக்கலாம்.

பற்கள் அதிகமாக அரிக்கப்பட்டு இருந்தால் பல் டாக்டரை அணுகி உரிய சிகிச்சை பெற வேண்டும். பல் வலி ஏற்பட்டால் குளிர்பானங்கள், ஐஸ்கிரீம், இனிப்புப் பண்டங்கள் சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது. தினமும் 2 வேளை பல் துலக்கி ஈறுகளை விரல் கொண்டு தேய்த்து விடுவதும், ஒவ்வொருமுறையும் சாப்பிட்ட பின்பு வாய் கொப்பளிப்பதும் மருத்துவ அறிவுரை ஆகும். பல் துலக்குவதற்கு ஆலமரம், அரசு, வேம்பு மரங்களின் குச்சிகளை பயன்படுத்துவது சிறந்தது.

உதயநிதியுடன் மீண்டும் இணையும் நயன்தாரா..!



இது கதிர்வேலன் காதல் படத்தை தொடர்ந்து உதயநிதி அடுத்து நடிக்கும்  படம் “நண்பேன் டா”. இப்படத்தை இயக்குபவர் ஏ.ஜெகதீஷ் இயக்குனர் ராஜேஷின் ஆஸ்தான சிஷ்யனும் கூட, சிவா மனசுல சக்தி, பாஸ் என்கிற பாஸ்கரன், ஒரு கல் ஒரு கண்ணாடி ஆகிய படங்களில் பணியாற்றியுள்ளார்.

ஜெகதீஷ் சொன்ன கதையில் இம்ப்ரெஸ் ஆகி உடனே ஓகே சொல்லியுள்ளார் உதய். இது கதிர் வேலன் காதல் படத்திலேயே உதய்- நயன்தார ஜோடி பொருத்தும் மிக அழகாக வந்து உள்ளதால் இப் படத்திலும் இதே ஜோடி தொடர்கிறது.

வழக்கம் போல் சந்தானமும் காமெடியில் கலக்க ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்க உள்ளார். படத்தை பற்றி இயக்குனர் கூறுகையில் இது ஒரு முற்றிலும் ஜனரஞ்சகமான  பொழுதுபோக்கு படமாக இருக்கும் என கூறியுள்ளார் .

லட்சுமி விலாஸ் வங்கியில் மார்கெட்டிங் அதிகாரி பணி..!




தமிழகத்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டும் வரும் லட்சுமி விலாஸ் வங்கியில் காலியாக உள்ள மார்க்கெட்டிங் அதிகாரி பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: சந்தையியல் மேலாளர்

கல்வித்தகுதி: சந்தையியல் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றிருக்க                  வேண்டும்.

வயதுவரம்பு: 35-க்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 31.01.2014

மேலும் விண்ணப்பிக்கும் முறை, சம்பளம், தேர்வு செய்யப்படும் முறை உள்ளிட்ட முழுமையான விவரங்கள் அறிய www.lvbank.com என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

தமன்னா அடுத்த ரவுண்டுக்கு ரெடி..!



இன்றைய தமிழ் சினிமாவில் வெற்றி மட்டுமே ஒருவரின் நிலையை நிலைநிறுத்தாவும் அல்லது தூக்கி விசவும் செய்கிறது. இந்த நிலை கதாநாயகிக்கு தவிர மற்ற எல்லா கலைஞர்களுக்கும் பொருந்தும்

கதாநாயகிகளுக்கு வெற்றி காற்று இங்கு வீசவில்லை என்றதும் மற்ற மொழி படங்களில் காத்து வாங்க செல்வது வழக்கம் . அது போல் தமன்னாவின் கடைசி சில படங்கள் இங்கு பெட்டியை காலி செய்ய மற்ற மொழி படங்களில் காற்று வாங்க சென்று விட்டார் .

அவரின் போறதா காலம் அங்கும் சில சறுக்கல்கள் சந்தித்தார். என்ன செய்வது என்று திணறிய தமன்னாவுக்கு சிவாவின் அழைப்பு ஒரு வரப்பிரசாதமாக அமைந்தது. ஏற்கனவே சிறுத்தை படத்தில் ஒன்றாக பணிபுரிந்ததால் தமன்னா இதில் பொருத்தமாக இருப்பர் என்று எண்ணி தலையிடம் சிபாரிசு செய்தார்கள். அவரும் ஓகே சொல்ல ஏக குஷியனர் தமன்னா.

வீரம் படத்தின் வெற்றி அவரோடைய அடுத்த ரவுண்டுக்கு பிள்ளையார் சுழி போட்டு உள்ளது என்று சொல்ல வேண்டும். அதுவும் வீரம் படத்தில் கதாநாயகி சுற்றிய கதை அமைக்க பட்டதால் அவரோடைய நடிப்புக்கு பலத்த வரவேற்பு கிடைத்த உள்ளது.

சிவா அடுத்து இயக்கவிருக்கும் கார்த்தி படத்திலும் தமன்னா தான் ஜோடியாம். சிறுத்தைக்கு பிறகு கார்த்தியின் சினிமா வாழ்க்கை கொஞ்சம் தடுமாற்றம் தடம் போரள ஆரம்பித்தது. இதனால் வெறுப்பு அடைந்த நம்ம ஹீரோ இதே கூட்டணி மறுபடியும்  சேர வேண்டும் என்று சிவாவிடம் சொல்லியுள்ளார்.

ஆகவே தமன்னாவிக்கு  அதிஷ்ட காற்று புயலாய்  விச ஆரம்பித்த உள்ளது..