Showing posts with label சமையல். Show all posts
Showing posts with label சமையல். Show all posts

Monday, January 27, 2014

எப்படி சாப்பிட வேண்டும் தெரியுமா..?

எப்படி  சாப்பிட வேண்டும் தெரியுமா..? உலகெங்கும் உள்ள பல்வேறு நாடுகளின் உணவு வகைகளை நாம் ஏற்றுக் கொண்டிருந்தாலும்கூட, "உணவே மருந்து" என்ற விஷயம் நமது உணவு முறையில் ஆழமாக வேர் ஊன்றியிருக்கிறது. இன்றைக்கு ஒரு சளியோ, காய்ச்சலோ வந்தால் உடனடியாக டாக்டரைத் தேடி ஓடுகிறோம் அல்லது அலோபதி மருந்துகளைச் சாப்பிடுகிறோம். அந்தக் காலத்தில் நமது வீட்டுப் பெரியவர்களோ மருந்துக்குப் பதிலாக உணவு மூலமாகவும், வீட்டு மருத்துவம் மூலமாகவும் ஆரோக்கியத்தைப் பாதுகாத்துக்...

Sunday, December 22, 2013

கொத்து பரோட்டா..

தேவையான பொருட்கள்:- பரோட்டா - 6 முட்டை - 4 வெங்காயம் - 1 தக்காளி - 2 கறிவேப்பிலை - ஒரு கொத்து கொத்தமல்லித்தழை - ஒரு கொத்து மிளகுத்தூள் - ஒரு தேக்கரண்டி பரோட்டா குருமா - 3 மேஜைக் கரண்டி எண்ணெய் - தேவையான அளவு உப்பு - தேவையான அளவு செய்முறை:- 1. வெங்காயம் தக்காளியை நன்கு கழுவி பொடியாக நறுக்கிக் கொள்ளவும். 2. அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி வெங்காயம் போட்டு நன்கு வதக்கவும். 3. பின்னர் தக்காளியைச் சேர்த்து நன்கு வதக்கவும். 4. அடுத்து பரோட்டாவை சிறுசிறு துண்டுகளாக பிய்த்துப் போட்டு லேசாக வதக்கவும். 5. பின்னர் முட்டைகளை உடைத்து ஊற்றி,...

Wednesday, December 4, 2013

தூதுவளை தோசை - சமையல்!

 தேவையானவை:  புழுங்கலரிசி - 1 கப், தூதுவளை இலை - 15, மிளகு - 10, சீரகம் - அரை டீஸ்பூன், பச்சை மிளகாய் - 2, உப்பு - தேவைக்கேற்ப, எண்ணெய் + நெய் - தேவையான அளவு. செய்முறை:  புழுங்கலரிசியை 3 மணி நேரம் ஊற வைத்து பின் மிக்ஸியிலோ, ஆட்டுக்கல்லிலோ பச்சை மிளகாய், மிளகு, சீரகம், தூதுவளை இலை, உப்பு சேர்த்து நன்றாக ஆட்டவும். பின்னர் தோசைக்கல்லில் இந்த மாவை மிக மெல்லிய ஊத்தப்பம் போல ஊற்றி நெய் + எண்ணெயைக் கலந்து அதை சுற்றிவர...

Tuesday, December 3, 2013

அறுசுவை உணவு...!

காரம்:  உடலுக்கு உஷ்ணத்தைக் கூட்டுவதுடன் உணர்ச்சிகளை கூட்டவும்,குறைக்கவும் செய்யும். கிடைக்கும் உணவுப் பொருட்கள்: வெங்காயம், மிளகாய், இஞ்சி, பூண்டு, மிளகு, கடுகு போன்றவற்றில் அதிகப்படியான காரச்சுவை அடங்கியுள்ளது. கசப்பு:  உடம்பிலுள்ள உதவாத கிருமிகளை அழித்து உடம்பிற்கு சக்திகூட்டும். சளியைக்கட்டுப்படுத்தும். கிடைக்கும் உணவுப் பொருட்கள்: பாகற்காய், சுண்டக்காய், கத்தரிக்காய், வெந்தயம், பூண்டு, எள், வேப்பம்பூ, ஓமம் போன்றவற்றில்...

கேழ்வரகு தோசை - சமையல்!

   தேவையானவை:  கேழ்வரகு மாவு - 1 கப், ஆட்டிய உளுத்தம்பருப்பு மாவு - அரை கப், உப்பு - தேவைக்கேற்ப, சின்ன வெங்காயம் - 15, பச்சை மிளகாய் - 2, சீரகம் - அரை டீஸ்பூன், எண்ணெய் - தேவையான அளவு. செய்முறை: கேழ்வரகு மாவு, ஆட்டிய உளுத்தம்பருப்பு மாவு, உப்பு ஆகியவற்றை ஒன்று சேர்த்து கலந்து மறுநாள் வரை பொங்க விடவும் (12 மணி நேரம்).  வெங்காயத்தை பொடியாகவும் பச்சை மிளகாயை சிறு வளையங்களாகவும் நறுக்கவும். மறுநாள் காலையில்...