Tuesday, December 3, 2013

ஷூ அளவை அறிய ஒரு செயலி!

  ஷூ அளவை கண்டறிந்து சொல்வதற்காக என்றே புதிய செயலி அறிமுகமாகி இருக்கிறது.  நம் ஷூ அளவு நமக்கு தெரியாதா?  இதற்கெல்லாம் ஒரு செயலியா ?  என்று கேட்பதற்கு முன் இணையம் மூலம் ஷூ வாங்கவோ அல்லது வெளிநாட்டுக்கு சென்றிருக்கும் போது ஷூ வாங்கவோ முற்படும் நிலையை கற்பனை செய்து பாருங்கள்.  உள்ளூரிலேயே ஷூக்களின் அளவு நிறுவனத்திற்கு நிறுவனம் மாறுபடுகிறது. அப்படி இருக்க வெளிநாடுகளில் சொல்லவா வேண்டும்.  ஒவ்வொரு நாட்டிலும்...

காவல்துறையினரிடம் ஆவணம் இன்றி சிக்கினால் இனி ஒரு எஸ்எம்எஸ் போதும்!

காவல்துறையினரிடம் ஆவணம் இன்றி சிக்கும்போது எஸ்எம்எஸ் மூலம் இனி இன்சூரன்ஸ் பற்றிய முழு தகவலையும் பெறலாம். எல்லா வாகனங்களுக்கும் இன்சூரன்ஸ் மிக அவசியம். சில சமயங்களில் சர்வீஸ் விடும்போது, வண்டியை கழுவும்போது, ஜெராக்ஸ் எடுக்க மறந்துவிடும்போது வாகனங்களில் இன்சூரன்ஸ் பேப்பரை மீண்டும் எடுத்து வைக்க மறந்துவிடுகிறோம். இதுபோன்ற சமயங்களில் சாலைகளில் போக்குவரத்து காவல்துறையினரிடம் சிக்கினால், தர்மசங்கடமான நிலை ஏற்படும். இந்த பிரச்சனையை தீர்ப்பதற்காக இன்சூரன்ஸ் ஒழுங்குமுறை ஆணையம் (ஐஆர்டிஏ) அதிரடி திட்டத்தை கொண்டு வந்துள்ளது. இதுகுறித்து அதன் வாகனங்கள்...

கேழ்வரகு தோசை - சமையல்!

   தேவையானவை:  கேழ்வரகு மாவு - 1 கப், ஆட்டிய உளுத்தம்பருப்பு மாவு - அரை கப், உப்பு - தேவைக்கேற்ப, சின்ன வெங்காயம் - 15, பச்சை மிளகாய் - 2, சீரகம் - அரை டீஸ்பூன், எண்ணெய் - தேவையான அளவு. செய்முறை: கேழ்வரகு மாவு, ஆட்டிய உளுத்தம்பருப்பு மாவு, உப்பு ஆகியவற்றை ஒன்று சேர்த்து கலந்து மறுநாள் வரை பொங்க விடவும் (12 மணி நேரம்).  வெங்காயத்தை பொடியாகவும் பச்சை மிளகாயை சிறு வளையங்களாகவும் நறுக்கவும். மறுநாள் காலையில்...

முதல்ல தம்பி.. அப்புறம் அண்ணன்?

  'பிரியாணி' படத்தில் கார்த்தியை இயக்கிய வெங்கட்பிரபு, தனது அடுத்த படத்தில் சூர்யாவை இயக்கவிருக்கிறாராம். கார்த்தி, ஹன்சிகா, பிரேம்ஜி, ராம்கி உள்ளிட்ட பலர் நடிக்கும் 'பிரியாணி' படத்தினை இயக்கினார் வெங்கட்பிரபு. யுவன் இசையமைக்க, ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்திருக்கிறது. இப்படம் டிசம்பர் 20ம் தேதி வெளிவரவிருக்கிறது. ஏற்கனவே படத்தின் பணிகள் முழுவதும் முடிவடைந்து விட்டதால், தனது அடுத்த படத்திற்கான கதை விவாதத்தில் ஈடுபட்டு இருக்கிறார்...