இளசுகள் முதல் பெருசுகள் வரை அனைவரையும் தன் இசையால் கட்டிப்போட்டவர், இவரை எதிலுமே குறிப்பிட்டு சொல்ல முடியாமல் அனைத்திலும் கலந்து கட்டி அடித்தவர். தனது நடனம், இசை, புதுமை என்று அனைத்திலுமே சிறந்து விளங்கினார்.
பலரும் தொலைக்காட்சியில் பார்த்து இருப்பீர்கள் மைக்கேலின் பேய் தனமான ஆட்டத்தை ஒரு காட்சியாவது பார்க்காமல் இருப்பவர்கள் மிக சொற்பம், கராத்தே என்றால் எப்படி அனைவரும் இன்றுவரை கிராமம் முதல் கொண்டு ப்ரூஸ் லீ யை கூறுகிறார்களோ, நடனம் என்றால் அது மைக்கேல் ஜாக்சன் தான், இவர் எவ்வளோ தூரம் மக்களின் மனதில் குடி கொண்டு இருக்கிறார் என்பதற்கு நம்ம கவுண்டரின்...
Sunday, December 22, 2013
எளிய பயிற்சி....
எப்பவாச்சும் ரொம்ப மன அழுத்ததோட இருக்கும் போது அதிலிருந்து விடுபட ஒரு எளிய பயிற்சி
உங்களை தனிமை படுத்திக் கொள்ளுங்கள்
மீனவன் வலை வீசுவதைப் பாத்திருக்கீங்களா? "ஹூம்" என்றபடி இரு கைகளையும் பலம் கொண்ட மட்டும் அதைப் போல காற்றில் வீசுங்க (எது மேலயும் இடிச்சிடாம பாத்துக்கங்க கை கழன்டு போற மாதிரி இல்லாம ஒரளவு மிதமான வேகத்தோட வீசுங்க)
இப்படி வீசும் போது உங்களை விட்டு இரு விஷயங்கள் வெளியேறுவதாக கற்பனை செய்யுங்க. ஒன்னு ஈகோ என்னும் ஆணவம், இன்னொன்னு உங்க மன அழுத்தம். இப்படி மூனு-நாலு முறை செய்யுங்க
சரி இப்ப எல்லாம் உங்களை விட்டு மன அழுத்தமும்...
தன்னம்பிக்கை வளர வழி...!
தன்னம்பிக்கை வளர வழி...!
எனது குறிக்கோள் என்ன என்பதை நானே நிர்ணயித்துள்ளேன். ஆகவே அதை அடையத் தீவிரமாகவும், முழு முயற்சியுடனும் தொடர்ந்து ஈடுபடுவேன். வெற்றி பெறுவேன். எண்ணும் எண்ணங்களே உடலின் வெளித் தோற்றத்திலும் செய்கையிலும் மிளிரும் என்பதை அறிவேன். ஆகவே நான் வெற்றி அடைந்த தோற்றத்தை மனக்கண் முன்னால் தினமும் முடிந்தவரை பார்ப்பேன்.
வெற்றி பெறத் தேவைப்படும் அனைத்துக் குணங்களையும் மனதில் ஒரு பத்து நிமிடம் தினம்தோறும் நினைத்து அதை அடையப் பாடுபடுவேன். நியாயம், தர்மம் இவற்றின் அடிப்படையில் அல்லாது மற்ற வழியில் வரும் வெற்றி நிலைக்காது என்பதால் தன்னம்பிக்கையுடன்...
மின்னஞ்சலில் அரட்டையா? உஷார்!!!
மின்னஞ்சலில் நண்பர்களுடன் அரட்டை அடிப்பது என்பது எல்லோருக்குமே மிகப் பிடித்தமான விஷயம்தான். அதுவும் ஒரு குழுவாக அரட்டை அடிப்பதில் இருக்கும் மகிழ்ச்சியே தனிதான்.
நமக்குத் தெரிந்த, பழகிய நண்பர்களுடன் அரட்டை அடிப்பது என்பது ஒன்றும் பெரிய விஷயம் அல்ல. அதில் எந்த பிரச்சினையும் இல்லை. ஆனால் நாம் எல்லோரும் தெரிந்த நண்பர்களுடன் மட்டுமா அரட்டை அடிக்கின்றோம். இல்லையே...
சாட்டில் புதிதாக எத்தனை நண்பர்களை பிடிக்கின்றோம். அவர்களுடன் மணிக்கணக்காக அரட்டை அடிக்கின்றோம். அதையும் தாண்டி அவர்களை சந்திப்பது, அவர்களுடன் ஊர் சுற்றுவது,...
Subscribe to:
Posts (Atom)