Monday, January 6, 2014

விஜய் சேதுபதியின் ஆரஞ்சு மிட்டாய்..

ஆரஞ்சு மிட்டாய் என்ற புதிய படத்தை தயாரித்து நடிக்கிறார் விஜய் சேதுபதி. தமிழ் சினிமாவில் வெற்றி நாயகனாக வலம் வரும் விஜய் சேதுபதியின் பண்ணையாரும் பத்மினியும், ரம்மி ஆகிய படங்கள் முடிந்து ரிலீஸுக்கு தயாராக உள்ளன. பண்ணையாருக்கு பிப்ரவரி 7 ம் திகதி குறிக்கப்பட்டிருக்கிறது. இவை தவிர இடம் பொருள் ஏவல், புறம்போக்கு போன்ற படங்கள் கைவசம் இருக்க ஆரஞ்சு மிட்டாய் என்ற புதிய படமும் இவரது டைரியில் சேர்ந்துள்ளது. இதன் விசேஷ செய்தி என்னவென்றால் படத்தை விஜய்...

டுவிட்டரில் விளையாடிய விஜய் - தனுஷ்

டுவிட்டரில் ஜாலியாக விளையாண்டு விஜய் மற்றும் தனுஷ் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளனர். சமீபத்தில் தனுஷ் தனது சமூக வலைதளப் பக்கத்தில், இளையதளபதி விஜய்யுடன் தான் ஜாலியாக ஆடிப்பாடி பொழுது போக்குவதாகவும் கூடவே ‘ஐ லவ் யூ ப்ரோ’ என்றும் ஒரு ஸ்டேட்டஸை தட்டிவிட்டுள்ளார். இதைப்பார்த்த ரசிகர்கள் உடனே தனுஷிடம் அப்படியென்றால் விஜய்யை எங்களுக்கு ஒரு ‘ஹாய்’ சொல்லச்சொல்லுங்கள் என்று கோரிக்கை வைத்துள்ளனர். சில நிமிடங்களில் தன்னுடன் விஜய்யும் இணைந்து...

‘வா’ என மாறிய அருண் விஜய்யின் ‘டீல்’..!

அருண் விஜய் நடிக்கும் ‘டீல்’ படத்தின் தலைப்பு மாற்றப்பட்டுள்ளது. ‘தடையற தாக்க’ படத்திற்குப் பிறகு அருண் விஜய் நடிக்கும் படம் ’டீல்’. சிவஞானம் இயக்கும் இப்படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக கார்த்திகா நாயர் நடிக்கிறார். சுறுசுறுப்பாக நடந்து வந்த இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிந்து, இப்போது போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் நடந்து வருகின்றன. இந்நிலையில் 'டீல்' என்ற படத்தின் தலைப்பினை 'வா' என்று மாற்றிவைத்துள்ளனர். தலைப்பு தமிழில் இல்லை என்பதால் இத்தலைப்பினை...

தள்ளிப்போகும் 'வீரம்'...!

வீரம்’ தெலுங்கு வெளியீடு இரண்டு வாரங்கள் தள்ளிப்போட முடிவுசெய்யப்பட்டுள்ளது. ‘சிறுத்தை’ சிவா இயக்கத்தில் அஜித், தமன்னா உட்பட பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள வீரம் படம் ஜனவரி 10ம் திகதி வெளியாகவுள்ளது. இதே நாளில் ‘வீரம்’ படத்தின் தெலுங்கு பதிப்பையும் முதலில் வெளியிட திட்டமிட்டிருந்தனர். ஆனால் ஜனவரி 10ம் தேதி ஆந்திராவில் சங்கராந்தியை ஒட்டி மகேஷ்பாபுவின் ‘1’ படமும், ராம்சரண் தேஜாவின் ‘யவடு’ படமும் வெளியாகவிருப்பதால் திரையரங்கு கிடைப்பதில்...