இது கதிர்வேலன் காதல் படத்தை தொடர்ந்து உதயநிதி அடுத்து நடிக்கும் படம் “நண்பேன் டா”. இப்படத்தை இயக்குபவர் ஏ.ஜெகதீஷ் இயக்குனர் ராஜேஷின் ஆஸ்தான சிஷ்யனும் கூட, சிவா மனசுல சக்தி, பாஸ் என்கிற பாஸ்கரன், ஒரு கல் ஒரு கண்ணாடி ஆகிய படங்களில் பணியாற்றியுள்ளார்.
ஜெகதீஷ் சொன்ன கதையில் இம்ப்ரெஸ் ஆகி உடனே ஓகே சொல்லியுள்ளார் உதய். இது கதிர் வேலன் காதல் படத்திலேயே உதய்- நயன்தார ஜோடி பொருத்தும் மிக அழகாக வந்து உள்ளதால் இப் படத்திலும் இதே ஜோடி தொடர்கிறது.
வழக்கம் போல் சந்தானமும் காமெடியில் கலக்க ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்க உள்ளார். படத்தை பற்றி இயக்குனர் கூறுகையில் இது ஒரு முற்றிலும் ஜனரஞ்சகமான பொழுதுபோக்கு படமாக இருக்கும் என கூறியுள்ளார் .