Thursday, January 23, 2014

உலகத்தின் அதி வேக இன்டர்னெட் டெஸ்ட் சக்ஸஸ்…!



நம்ம இன்னும் 256 கேபி / 512 கேபினு தரிகினத்தோம் போட்டு கிட்டு இருக்கோம்,இது பற்ரி போன வருஷம் நான் சொன்னேன் 1 ஜிபி இன்டர்னெட் கூகுள் அமெரிக்காவுல கனெக்ஷன் கொடுக்க ஆரம்பிச்சிட்டாங்கன்னு, அடுத்து கொஞ்ச நாள்ல சோனி ஜப்பான்ல 2ஜிபி ஸ்பீடு கொடுத்தையும் சொன்னேன், இப்ப லண்டன்ல நம்ம பழைய கம்பெனி பிரிட்டிஷ் டெலிகாம் நேத்து உலகத்தின் அதிவேக இன்டர்னெட்டை டெஸ்ட் பண்ணி சக்ஸஸ் ஆக்கிட்டாங்க.

அதாங்க கிலோபைட் போய் மெகாபிட்போய் ஜிகாபைட்டும் போய் கடைசியில டெராபைட்ல வந்து நிக்கிறோம். அதாவது 1.4 டெராபைட் டெஸ்டிங் சக்ஸஸ் இது 1,83,501 – ஒரு லட்சத்து 83 ஆயிரத்து ஐநூறு= ஒரு மெகாபைட் பெர் செகன்ட் ஸ்பீட் – சும்மா லத்திகா படத்தோட டவுன்லோட்டை தட்டின உடனே டவுன்லோட் கம்ப்ளீட்டட்னு முடிஞ்சிடுற ஸ்பீடு.

இதை நேத்து பிரிட்டிஷ் டெலிகாம் லண்டன் மெயின் டவர்ல இருந்து – ஐபி ஸ்விட்ச் என்னும் இடத்தின் இடைவெளியான 410 கிலோமீட்டர் தூரத்துக்கு டெஸ்ட் பண்ணியிருக்காங்க – ஹைடெஃபினீஷன் படத்தை ஸ்ட்ரீம் பண்ணி டெஸ்ட் பண்ணிருக்காங்க் டெஸ்ட் சக்ஸஸ் – ஆல்காடெல் – லூசன்ட் இதற்க்கான உபகரணங்களை செஞ்சிருக்கு – வெகு சீக்கிரம் ஒரு 50 வருஷத்துக்குள்ள நம்ம இந்தியாவுக்கு ஸ்பீடா வந்திரும்னு நம்புவோம்னு ஒரு பெருமூச்சோட பை பை.

0 comments:

Post a Comment