எனது அடுத்த படம் அஜீத்துடன் இல்லை.. ஆர்யாவையும் கிருஷ்ணாவையும் வைத்து இயக்குகிறேன், என்று இயக்குநர் விஷ்ணுவர்தன் கூறியுள்ளார்.
ரஜினியின் பில்லா பட ரீமேக்கில் அஜீத்தை வைத்து இயக்கி வெற்றி கண்டார் விஷ்ணுவர்தன். பின்னர் ஆரம்பம் படத்தில் இருவரும் இணைந்தனர். இந்தப் படமும் வெற்றி பெற்றது.
இந்த நிலையில் மூன்றாவதாக அஜீத்தை வைத்து விஷ்ணுவர்தன் சொந்தமாக படம் தயாரித்து இயக்கப் போகிறார் என்று கூறப்பட்டது.
இதனை மறுத்துள்ளார் விஷ்ணுவர்தன். இதுகுறித்து அவர் கூறுகையில், "விஷ்ண்வர்தன் பிலிம்ஸ்' என்ற தயாரிப்பு நிறுவனத்தை புதிதாக ஆரம்பித்துள்ளது உண்மைதான்.
இந்த நிறுவனம் தயாரிக்கும் முதல் படத்தில் ஆர்யா மற்றும் கிருஷ்ணா நடிக்கிறார்கள். அஜீத்தை வைத்து இப்போது இயக்கும் திட்டம் எதுவும் இல்லை. எதிர்காலம் எப்படியோ.. பார்க்கலாம்,' என்றார்