சினிமாவில் அடுத்தடுத்து வெற்றிகள் கிடைத்தாலும் தனது சம்பளத்தை இன்னும் உயர்த்தாமல் உள்ளாராம் விஜய் சேதுபதி.
தென்மேற்குப் பருவக்காற்று படம் மூலம் அறிமுகமானவர் விஜய் சேதுபதி. முதல் படத்திலேயே மிகப் பெரிய பாராட்டு கிடைத்தது. அதற்கு முன் சில படங்களில் துணை நடிகராக நடித்து போராடித்தான் ஹீரோவானார்.
அடுத்து சுந்தர பாண்டியன் படத்தில் நெகடிவ் பாத்திரத்தில் நடித்தார். அந்தப் படம் பெரிய வெற்றியைப் பெற்றது. அடுத்து வெளியான பீட்சாவில் அவர் ஹீரோ. படம் பிரமாத வெற்றி. அடுத்தடுத்து அவர் ஹீரோவாக நடித்த நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம், சூது கவ்வும் போன்ற படங்கள் பாக்ஸ் ஆபீஸில் பெரிய லாபம் பார்த்தன. இந்த நேரத்தில் அவர் சம்பளம் ரூ 2.5 கோடி என்று கூறப்படுகிறது.
பொதுவாக இத்தனை வெற்றிப் படங்களை அடுத்தடுத்து கொடுக்கும் ஹீரோக்கள் சம்பளத்தை கணிசமாக ஏற்றிவிடுவார்கள். ஆனால் விஜய்சேதுபதி அமைதியாக அதே சம்பளம்தான் வாங்குகிறாராம்.
இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா பற்றி எதிர்மறை விமர்சனங்கள் வந்தாலும் அந்தப் படம் நன்றாகவே ஓடி லாபம் சம்பாதித்தது. அடுத்து விஜய் சேதுபதியின் ரம்மி, பண்ணையாரும் பத்மினியும் போன்ற படங்கள் வெளியாக உள்ளன.
இந்தப் படங்கள் வந்த பிறகே, தனது சம்பளத்தை உயர்த்தப் போகிறாராம் விஜய் சேதுபதி.
0 comments:
Post a Comment