Sunday, January 26, 2014

மீண்டும் இணைகிறதா வருத்தப்படாத வாலிபர் சங்கம் கூட்டணி..!



கடந்த ஆண்டின் ப்ளாக் பஸ்டர் படமான வருத்தப்படாத வாலிபர் சங்கத்தின் இயக்குனர் பொன்ராம் மற்றும் நடிகர் சிவகார்த்திகேயன் கூட்டணியில்
மீண்டும் ஒரு படம் தயாராகலாம் என்று கூறப்படுகிறது.

இயக்குனர் எம்.ராஜேஷின் முன்னாள் உதவி இயக்குனரான பொன்ராம் சிவகார்த்திகேயன், ஸ்ரீதிவ்யா நடித்த வருத்தப்படாத வாலிபர் சங்கம்
திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். அறிமுகப்படமே ப்ளாக் பஸ்டர் படமாக அமைந்தது. சென்ற ஆண்டு வெளியான திரைப்படங்களில் அதிக வசூலைக் குவித்த திரைப்படங்களில் இப்படமும் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது.

வருத்தப்படாத வாலிபர் சங்கத்தின் மூலம் அறிமுகமான நாயகியான ஸ்ரீதிவ்யா தற்பொழுது கோலிவுட்டின் மோஸ்ட் வாண்டட் ஹீரோயினாகப் பரிணமித்துவருகிறார்.

திருப்பதி பிரதர்ஸ் என்.லிங்குசாமி தயாரிக்கவிருக்கும் புதிய திரைப்படத்தில் இயக்குனர் பொன்ராம் மற்றும் சிவகார்த்திகேயன் கூட்டணியில்
ஒரு படம் தயாரிக்கப்படலாம் என்று கூறப்பட்டுவருகிறது. விரைவில் இப்படத்தினைப் பற்றிய அறிவிப்புகள் வெளியாகலாம்.

சிவகார்த்திகேயன் தற்பொழுது இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் கதை மற்றும் திரைக்கதையில், திருக்குமரன் இயக்கிவரும் மான்கராத்தே திரைப்படத்தில் நடித்துவருகிறார்.

0 comments:

Post a Comment