Sunday, December 22, 2013

‘தூம் 3’ தூள் பரக்கிறது..!

சிகாகோவில் ஜாக்கி ஷெராப் சர்க்கஸ் நிகழ்ச்சியை வங்கி மூலம் லோன் வாங்கி நடத்தி வருகிறார். அவருடைய மகன் ஆமிர்கான். ஒரு கட்டத்தில் வாங்கிய லோனை திருப்பி தர முடியாத நிலையில் வங்கியில் இருந்து சர்க்கஸை நடத்துவதை நிறுத்தி விடுகிறார்கள். இதனால் தன் மகன் கண்முன் ஷெராப் தற்கொலை செய்து கொள்கிறார். இதனால் அந்த வங்கி மீது கோபம் கொள்கிறார் ஆமிர்கான். இந்த கோபத்தால் ஆமிர்கான் பெரியவனாக வளர்ந்த பிறகு, அந்த வங்கியின் கிளைகளில் உள்ள பணத்தை கொள்ளையடிக்கிறார். அந்த...

பெண்கள் வாயாடிகள் ஆவது நல்லது

பெண்களுக்கு ஒரு விசேஷ குணம் உண்டு. ஏதேனும் சக தோழியைக் கண்டால் உற்சாகமான உரையாடலை சட்டென ஆரம்பித்து விடுகிறார்கள். கடைவீதி, அலுவலகம், ஆலயம் ஏன் சுட்டெரிக்கும் தார் ரோடு என்றால் கூட இந்த உரையாடல் தடைபடுவதில்லை. நலமா எனத் தொடங்கும் உரையாடல் குழந்தைகள், வீடு, வேலை, மாமியார், நண்பர்கள் என கிளை விட்டுப் பரந்து விரிந்து பொழுது போவதை அறியாமல் பேசிக்கொண்டே இருப்பார்கள். பெண்களின் உரையாடல் பெரும்பாலும் வறட்டு உரையாடலாய் இருப்பதில்லை. சிரிப்பும், கேலியும், கிண்டலும், உற்சாகமும் என உலகத்தின் மிக முக்கியமான பணி உரையாடல் என்பது போல அவர்கள் அதில் ஒன்றி விடுவார்கள். ஆண்கள்...

இலங்கைத்தமிழரின் திருமணம்..!

  இலங்கைத் தமிழர்களிடையே காணப்படும் திருமண முறை பல்வேறு அம்சங்களை உள்ளடக்கி உள்ளது. தமிழ்ப் பண்பாட்டில் திருமணம் என்பது நிரந்தரமானது. அது ஆயிரங்காலத்துப் பயிர் என்று கூறப்பட்டு திருமணத்தின் முன் பல்வேறு விஷயங்கள் நுணுக்கமாக ஆராயப் படுகின்றன. திருமணம் பேசுவதற்கு முன் சாதி, சமயம், அந்தஸ்து ஆகியன ஒன்றாகவுள்ளனவா என்பது பார்க்கப்படும். ஏனெனில் ஒரே சூழலில் வாழ்ந்தவர்களுக்கு ஒருவருடன் ஒருவர் ஒத்துப் போவது எளிது என்று கருதப்படுகிறது. இதனால் இவற்றில்...

நல்ல நண்பர்கள் ?

நல்ல நண்பர்கள் ? இதோ எனக்கு   தெரிந்தவை நான் அறிந்தவை:-  நல்ல நண்பர்களே கிடைக்கவில்லை என்றால் பிழை நண்பர்களில் இல்லை. நம்மனதில்தான்இருக்கிறது.நீங்கள் அறிந்த வரையறை பிழையானதாக இருக்கும். நண்பன் என்பவன் ஆபத்தில் உதவும் மூன்றாவது மனிதனாக மட்டுமின்றி, நீங்கள் வீட்டிற்குள் செல்லும்; போது ஓடி வந்து கால்களைக் கட்டிக் கொள்ளும் உங்கள் ஜுனியராகவோ, கால்களுக்கிடையே இடையே சுற்றிவரும் பூனைக்குட்டியாகவோ, சொன்னதையே சொல்லிச் சொல்லி இன்பம் தரும் கிளியாகவோ, உங்கள் சந்தோசத்தின் போது வாலையாட்டியும், துக்கத்தின் போது தானும் சாப்பிடாமல் உங்கள் முகத்தையே...

சிக்கனமாய் இருப்பவரா நீங்கள்?

இந்த பொருளாதார நெருக்கடியில் மில்லியன்களில் புழங்கும் பன்னாட்டு நிறுவனங்களே தள்ளாடுகின்றன...மாத சம்பளத்தை வைத்து குடும்பம் நடத்துபவர்கள் பாடு திண்டாட்டம்தான்...பணக்காரனாய் இருந்தாலும் சரி, அன்றாடங்காய்ச்சியாய் இருந்தாலும் சரி, அனாவசிய செலவுகளை,ஆடம்பர செலவுகளை குறைத்தால் நிம்மதியாய் வாழலாம். முதலாவதாக அடிக்கடி கடைகளுக்குச் செல்வதை குறைத்துக் கொள்ளுங்கள். மளிகை சாமான், குழந்தைகளுக்குத் தேவையான பொருட்கள் இப்படி என்னவாக இருந்தாலும் மாதம் ஒரு முறை திட்டமிட்டு ஒரே நாளில் உங்கள் ஷாப்பிங்கை முடியுங்கள்.. அதற்காக முழு கடையையும் உங்கள் வீட்டுக்கே தூக்கிச்...

அப்பா - என் ஒவ்வொரு வயதிலும்..!

ஒவ்வொரு மகன், மகளுக்கு தகப்பன் வெவ்வேறு காலகட்டங்களில் எப்படி தெரிவார்? என் 4 வயதில் : எங்கப்பா ரொம்பப் பெரிய ஆள்!  என் 5 வயதில் : என் அப்பா எல்லாம் அறிந்தவர்! என் 10 வயதில் : நல்லவர்தான், ஆனால் சிடுமூஞ்சிக்காரர்! என் 12 வயதில் : நான் சின்னப்பிள்ளையாக இருந்தபோது அப்பா ரொம்ப நல்லவர்! என் 14 வயதில் : எப்பவும் எதிலும் குறை கண்டுபிடிக்கும் ஆசாமி! என் 15 வயதில் : கால நடப்பிலும் புரிந்துகொள்ளாதவர்! என் 18 வயதில் : சரியான எடக்கு மடக்கு...

தமிழர் கல்யாணத்தில் தாலிக்கொடி!

தாலி என்பது திருமணத்தின் போது ஆண் பெண்ணுக்கு கட்டும் ஒருவகை கழுத்து சங்கிலி ஆகும். தாலி அணிந்த பெண் திருமணமானவள் என்பது தாலியின் முக்கிய குறியீடு. தாலி கட்டும் வழக்கம் இந்து திராவிட மக்களிடம் காணப்படுகிறது. மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தின் தமிழ்த்துறைத் தலைவர் பேரா.தொ.பரமசிவன் எழுதிய ”பண்பாட்டு அசைவுகள்” என்ற புத்தகத்தில் இருந்து சில குறிப்புகள்:     *       1. தாலி – என்ற சொல்லின் வேர்ச்சொல்லை இனங்காண முடியவில்லை.  ...

சுனாமி..!

சுனாமி என்பது ஜப்பானிய மொழியில் உள்ள வார்த்தை. சு + னாமி தான் சுனாமி. சு என்றால் துறைமுகம், னாமி என்றால் பேரலை என்று பெயர். சுனாமி என்பது துறைமுக பேரலை. சில நிமிடங்கள் முதல் சில நாட்கள் வரை கூட, அதுவும் பல்லாயிரக்கணக்கான ராட்சத அலைகளை உருவாக்கக்கூடியது தான் சுனாமி. சுனாமி எப்படி உருவாகிறது? பூகம்பத்தால் ஏற்படுகிறது. அதாவது, பூகம்பம் என் பது நிலப்பகுதியில், கடல் பகுதியில், மலைப்பகுதியில் ஏற்படும். நிலைப்பகுதியில் வந்தால் நிலத்தில் உள்ளவை அதிர்ந்து...

பிறந்தநாள் விழா - தோன்றியது எப்படி?

பிறந்தநாள் விழா - தோன்றியது எப்படி? பிறந்தநாள் அப்படீனு காதுல விழுந்தாலே அது சீமைல இருந்து வந்த வழக்கம். மேற்கத்திய நாடுகள்ள அவங்க கொண்டாட நாம அதை பழக்கத்துல எடுத்துக்கிட்டோம் அப்படீனு எல்லாம் நினைப்போம். எங்க பாட்டி சொன்னாங்க, 'அது அப்படி இல்லடா பேராண்டினு'. கிழவி ரொம்ப விவரமாவே சொல்லுச்சு. சரி, விசயத்த மேல பாப்போம். அதாவது வந்துங்க, இந்த தீய சக்திகள் காத்து கருப்பு, இதுக்கெல்லாம் குழந்தை பிறப்பு, குழந்தைக பிறந்த நாள் இப்படி ஒரு சில விசயங்கள சுத்தமா பிடிக்காதாம். அந்த மாதிரி நேரங்கள்ல சம்பந்தபட்டவங்கள எப்படியாவது தொந்தரவு பண்ணனும், தீத்து...

மெல்போர்ன் - மழை..வெயில்..குளிர்...

மெல்போர்ன் - மழை..வெயில்..குளிர்... மழை..வெயில்..குளிர்... மெல்போர்ன் என்றாலே இம்மூன்றும் நினைவுக்கு வந்து ஒரு விதமான சுகத்தையும், சூட்டையும் உண்டுபண்ணும். இங்கு வாழ்ந்தவர்களுக்கும்,வாழ்பவர்களுக்கும் அதன் அர்த்தம் புரியும். பொதுவாக மெல்போர்ன் காலநிலை எப்போதும் ஒரு சீராக இருப்பதில்லை..ஒரு நாளில் ஆறு வானிலைகள் தோற்றம் காட்டும் ஒரு காலத்துப்பூங்கா..இப்பொது தண்ணீரை அரசியலும் இயற்கைத்தாயும் சரி பாதி பங்கெடுத்து தர முயற்ச்சிக்கின்றனவாம்...இயற்கைத்தாய் சரி..அரசியல்? காலையில் அடிக்கும் வெயில்,சரி இன்று குளிர்சட்டை தேவையில்லைபோல என்று இங்கு(மெல்போர்ன்)...

யாரிடத்தும் எதையும் எதிர்ப்பார்க்காதே - சிந்தனைத்துளி

சுதந்திரமானவனாக இரு. எவரிடத்திருந்தும் எதையும் எதிர்பார்க்காதே. நான் உறுதியாகச் சொல்வேன் உனது கடந்தகால வாழ்க்கை நீ பின்னனோக்கித் திரும்பிப் பார்ப்பாயானால், நீ வீணாக எப்போதும் மற்றவர்களிடமிருந்து உதவியைப் பெற முயற்சி செய்த்தையும் அப்படி எதுவும் வராமல் போனதையும் தான்காண்பாய். வந்த உதவிகள் எல்லாம் உனக்குள் இருந்து வந்தவையாகத்தான் இருக்கும். - விவேகானந்தர். நட்புக்கொள்ள விரும்பினாலும் நண்பர்கள் கிடைக்காத ஏழைகளுக்கும் நண்பனாவேன். -கவிஞர் ஷெல்லி. “எளிமையாகவும் தெளிவாகவும் இரு, புரியாத புதிராக இராதே. - வால்ட் விட்மல் ஒரு கொள்கையை எடுத்துக்கொள்....

உறவுகள்….. உணர்வுகள்.....

“டீன் ஏஜ் பருவம்” ஒவ்வொருவரின் வாழ்விலும் மறக்கவே முடியாத மிக அழகான காலகட்டம்தான். துடிதுடிப்பு, பரப்பரப்பு, அலட்சியம், எந்த விஷயத்தையுமே மிகைப்படுத்துதல், ஆரவாரம், ஆர்ப்பாட்டம் என அமர்க்களமாயிருகும். அந்தப் பருவத்தில் அதற்கு எதிர்மாறான வலிகளும், ரணங்களும் தாக்குவது இயல்புதான். சுருக்கமாக சொல்லப்போனால் முரண்பாடுகளின் ஒட்டு மொத்த சங்கம்ம்தான் “டீன் ஏஜ்” பருவம். இந்தப் பருவத்தினரைக் கையாள்வது என்பது சாதார விஷயமல்ல. கம்பி மேல்நடப்பது போல் அதி ஜாக்கிரையுடன் இருக்க வேண்டியது அவசியம். டீன் ஏஜ் பருத்தினரின் மனநிலையை இந்த குட்டிக்கதை தெளிவாக விளக்கம்...

கனி ஜோதிடம் தெரியுமா...........

கிளி ஜோதிடம் தெரியும் அது என்ன கனி ஜோதிடம் என்கிறீர்களா? மேலை நாட்டில் இப்பொழுது பரபரப்பாக உலவி வருவது கனி ஜோதிடம். நாம் ஒருவரின் ராசி நட்சத்திரத்தைக் கொண்டு ஒருவரைப் பற்றிக் கணிப்பது போல் உங்களுக்குப் பிடித்தமான கனியைக் கொண்டு உங்கள் குணத்தைக் கணிப்பதுதான் இந்த ஜோதிடம். கீழே பல்வேறு கனிவகைகளும் அவற்றை விரும்புபவர்களின் பொதுவான தன்மைகளும் கொடுக்கப்பட்டுள்ளன. உங்களுக்குப் பிடித்த பழம் என்ன பலன் பொருந்துகிறதா என்று பார்த்துக்கொள்ளுங்களேன்!! மாம்பழப்பிரியரா நீங்கள்? அப்படியானால்....நீங்கள் கொஞ்சம் தீவிரமான ஆசாமி. உங்களுக்கு என்றுள்ள விருப்பு வெறுப்புகளை...

பலனுள்ள பன்னிரண்டு

நாம் மற்றவர்களிடம் பழகும் போது எப்படி நடந்து கொள்கிறோம், நமது உடல் பாஷைகள், பேசும் விதம் ஆகியவற்றைக்கொண்டே அவர்கள் நம்மை மதிப்பீடு செய்கிறார்கள். குறிப்பாக நாம் ஒரு வேலைக்குச் செல்லுமிடத்தில் உயர் அதிகாரிகளிடம் பேசும்போது நமது நடை உடை பாவனைகள் எப்படி அமைகின்றன என்பதைப் பொறுத்துத்தான் நமது வெற்றியும் தோல்வியும் அமையும். இது நாம் நடைபயில முயற்சிப்பது போலத்தான். உங்களைப் பின்பக்கமாக நடந்து போகச் சொன்னால் எவ்வளவு கடினமாக இருக்கும்? அது போலத்தான் மற்றவர்களுடன் பழகும்போது எப்படி அவர்களுடன் உறவாட வேண்டும் என்பதான பயிற்சியும். எப்படி நடந்துகொள்ள வேண்டும்...

தசாவதாரம்

உயிரியல் கொள்கையாக விளங்கும் டார்வின் கோட்பாடு பலருக்கு தெரிந்திருக்கலாம். லூயி பாஸ்டர் என்ற விஞ்ஞானிதான் முதன்முதலாக மாற்று சிந்தனையைத் தூண்டினார். ‘‘ஒவ்வொரு வகையான உயிரினமும் திடீர் திடீரென படைக்கப்பட்டன என்பது நம்புகிறமாதிரி இல்லை. அற்ப உயிரியான பாக்டீரியாகூட அப்பா, அம்மா இல்லாமல் பிறக்காது. எல்லா உயிரினங்களின் தலைமுறைகளும் பெருகும் விதம் இதான்! அப்படி பார்க்கப் போனால், மனித இனத்த உருவாக்கிய முதல் அப்பா, அம்மா யார்? ஒவ்வொரு இனத்தின் முதல் தலைமுறை யாராக இருக்கும்? இதை நாம் கண்டறிய வேண்டாமா?’’ என்று கேள்வி எழுப்பினார். இதன்பிறகு பலர் மனதிலும்...

மீசையும்... ஆசையும்...!

மீசையும்... ஆசையும்...! ஆண்களுக்கு உதட்டின் கிரீடமாக உட்கார்ந்திருப்பதாலேயே மீசை தனி மரியாதை பெறுகிறது. நம் நாட்டில் மட்டுமல்ல, உலகில் பல நாடுகளில் மீசைக்கு உயர் அந்தஸ்து உண்டு. மீசை விஷயத்தில் `டாப் 10' நாடுகள் எவையெவை என்று பார்க்கலாமா... 1. இந்தியா தென்னிந்தியாவில் 80 சதவீதம் பேர் மீசை வைத்திருக்கின்றனர். இதனால் இந்தியா உலகத்திலேயே `நம்பர் 1' ஆகிவிடுகிறது. இந்தியக் கலாசாரத்தில் நீண்ட காலமாகவே மீசை ஒரு முக்கிய இடத்தைப் பெற்றிருக்கிறது. இது ஆண்மையின் அடையாளமாக நம் நாட்டில் கருதப்படுகிறது. உலகத்திலேயே நீளமான மீசைக்குச் சொந்தக்காரர் ஓர் இந்தியர்தான்....

எழுதுவது ஏன்?

1) எழுதுவதற்கான அவசியத்தையும் உந்துதலையும் உணர்வதால் தனக்குள்ளிருந்து தன்னை யாரோ எழுதும்படியாக வற்புறுத்துவது போல ஒருவன் அடையும் நிலையில் தான் இந்த வகை எழுத்து உருவாகிறது. மிதமிஞ்சிய வேதனையை. தனிமையை பகிர்ந்து கொள்வதற்கு யாருமற்ற நிலையில் கதையோ, கவிதையோ எழுதுவது உருவாகிறது. பெரும்பான்மையான எழுத்தாளர்கள் இந்த வகையில் தான் துவங்குகிறார்கள். 2) தன்னையும் மற்றவர்களையும் மகிழ்விக்க. மிகச்சிறந்த இலக்கியவாதிகள் இந்த வகையைச் சேர்ந்தவர்களே. அவர்கள் தொழில்முறை எழுத்தாளர்கள் அல்ல. வாழ்வின் ஞானமும், சரளத்தன்மையும், அன்பையும் வெளிப்படுத்தவே அவர்கள் எழுதுகிறார்கள்....

மர்லின் மன்றோ

1926 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 1 ஆம் தேதி அமெரிக்காவின் லாஸ்ஏஞ்சல்ஸ் நகரில் பிறந்தவர் மர்லின் மன்றோ. உலக இளைஞர்களின் காமத்தின் குறியீடாக கட்டமைக்கப்பட்ட மர்லினின் பிம்பம், இன்றுவரை அதன் மெருகு குலையாமல் அப்படியே உள்ளது. மர்லினின் அபிரிதமான அழகும், பார்த்த கணம் கலங்கடிக்கும் கவர்ச்சியும், 36 வயதில் தற்கொலை செய்துகொள்ள நேர்ந்த அவரின் மன நெருக்கடியை, ஆழமான சோகத்தை மறைக்கும் கடினமான திரைச்சீலையாகவே இன்றும் உள்ளது. மர்லின் மன்றோ பிறக்கும்போது அவரது தாயார் கிளாடிஸ் மன்றோ பேக்கர் தனது முதல் கணவர் ஜாஸ்பர் பேக்கரை பிரிந்து எட்வர்ட் மார்டின்சன் என்பவருடன் வாழ்ந்து...

மனிதப் பண்பு ( தெய்வம் நீ என்று உணர் )

தெய்வம் நீ என்று உணர் இன்றைய உலகம் அறிவியல் உலகம். எதையும் ஆராய்ந்து கண்டு தெரியும். விருப்பங்கொண்டோர் நிறைந்த உலகம். நேரில் கண்டால் ஒழிய மற்றவற்றை நம்ப மறுக்கின்ற உலகம். பொறுமை இல்லை ‘சந்திர மண்டலத்திற்குச் சென்று வருவது இயலும்’ என்பதைக் கற்பனை என்று ஒதுக்கித் தள்ளியதும் இந்த உலகந்தான். ஆனால் அதுவே உண்மையான போது, அதனை ஒத்துக்கொண்டதும் இந்த உலகந்தான். ஆதலின் காட்சி அளவில் கண்டால் ஒழிய மற்றவற்றை நம்ப இயலாத நிலை உலகில் நாளும் வளர்ந்து வருகின்றது. அதேபோல் அறிவியல் வளர்ச்சியால் கற்பனை என்று கொண்டவற்றுள் சில உண்மையானதாகவும் உண்மை என்று கொண்டவற்றுள்...

வாழ்க்கைப் பிரச்சனைகள் – தீர்வுகள்

வாழ்க்கைப் பிரச்சனைகள் – தீர்வுகள் மனித உறவுப் பிரச்சனைகள் (Human Relations Problems) மன நிம்மதியைப் போக்கிவிடுகின்றன. வாழ்க்கையில் பிடிப்பினைத் தளர்த்துகின்றன. செயலூக்கத்தினைக் குறைக்கின்றன. சிந்தனைத்திறன், அறிவு (Creativity) ஆகியவற்றைப் பாதிக்கின்றன. இவற்றிற்குக் காரணங்கள் யாவை? தீர்வுகள் யாவை என்பதைப் பார்ப்போம். காரணங்கள் தன்னைப் புரிதல், மற்றவர்களைப் புரிதல், வாழ்வினைப் பற்றிய தெளிவான நோக்கு- இவைகள் இல்லாத பட்சத்தில் பிரச்சனைகள் உருவாகின்றன. தீர்வுகள் 1. உயர்வு மனப்பான்மை (Superiorty Complex) & தாழ்வு மனப்பான்மை (Inferiority complex)...

புத்தகங்களை ஏன் படிக்கவேண்டும்

புத்தகங்களை ஏன் படிக்கவேண்டும் எதைச் செய்தாலும் ஏன்? எதற்கு? என்றும், அதனால் நமக்கு என்ன பயன் என்றும், தெளிவுபடுத்திக் கொண்டால் அந்தச் செயலை சிறப்பாக செய்ய முடியும். செயல் செய்வதற்கும் ஆர்வமும் ஈடுபாடும் உண்டாகும். அந்த வகையில் நூல்களை ஏன் படிக்கவேண்டும்? என்பது பற்றி சில விளக்கங்களைப் பார்ப்போம். நூல் படிப்பதறகும் தொலைக்காட்சி பார்ப்பதற்கும் உள்ள வித்தியாசம் ஒரு உதாரணத்திறகு ‘ஒரு அரசன் குதிரையில் வேகமாக ஒரு அடர்ந்த காட்டுப்பகுதியில் சென்று கொண்டிருக்கின்றான். அப்பொழுது- மேற்கண்டதைப் படிக்கும்போது ஒரு அரசனையும், ஒரு குதிரையையும், ஒரு காட்டையும்...

சீரியலால் தீ :-

சீரியலால் தீ :- சீரியல் சுயமாய் சிந்திக்கும் ஆற்றலை தடை செய்கிறதாம் .ஒரு பெண் ஒரு நாளைக்கு பார்க்கும்  மொத்த சீரியல் அளவு அதாவது நேரம் சும்மார் நான்கு மணி நேரம். இந்த சீரியல் பற்றி யோசிக்கவும் அடுத்து என்ன நடக்குமோ என்ற அச்சமும்.  அடுத்த சீரியலை எப்படி நேரம் ஒதுக்கி பார்ப்பது என்பதிலுமே இந்த சீரியல் பார்க்கும் பெண்கள் தமது நேரத்தை செலவிடுகிறார்கள். இதனால் இவர்கள் குடும்பத்தின் மீது காட்டும் அக்கறை குறைகிறது. தமது குழந்தை மீதும் பற்று குறைகிறது. தமது வேலைகளை சரியாக திட்டமிட்டு செயல் படுத்த தவறி விடுகின்றனர் .அனவசியமாஹா  மின் இயதிரங்களை...

சிகரட் எனும் நல்ல பழக்கம்...!!!

எனக்கு சிகரட் குடிக்கும் நல்ல பழக்கம் சிறு வயதில் இருந்தே இல்லாமல் போய்விட்டது. எல்லோரும் சிகரட் பிடிப்பதை ஆச்சர்யமாக பார்த்திருக்கிறேன். என்றாவது ஒரு நாள் சிகரட் பிடிக்க முயற்சிக்க வேண்டும் என நினைத்துக்கொண்டிருந்தேன். நான் கல்லூரி படிக்கையில் நானும் என் நண்பனும் ஒரு பந்தயம் வைத்தோம். என்னவென்றால், யார் மூன்று வருடமும் சிகரட் பிடிக்காமல் இருக்கிறார்கள் என்று. "நான் அப்படி இருந்து காட்டுகிறேன்" என்றேன். என் நண்பனும் சிகரட் பிடிக்காமல் இருந்து காட்டுகிறேன் என்றான். ஆனால், அவன் சொன்ன ஒரு விசயம் வேடிக்கையாக இருந்தது. என்னவென்றால், அவன் அப்படி சிகரட்...

பணம் மட்டும் தான் வாழ்கையா ???

பொதுவாக எனக்கும் எனது நண்பர்களுக்கும் பணம் பற்றி பெரிய விவாதமே அவ்வபோது எழுவது உண்டு .பணத்தை பற்றி எனது எண்ணம் " பணம் என்பது வாழ்க்கைக்கு தேவையான ஒன்று . ஆனால் பணத்தால் எல்லாவற்றையும் பெற முடியாது . உதாரணத்துக்கு உண்மையான அன்பு , கனிவான உபசரிப்பு மற்றும் பல " . ஆனால் என் நண்பர்கள் சொல்லுவது " பணம் தான் முக்கியம் . பணத்தால் எது வேண்டுமானாலும் செய்யலாம் . பணம் இல்லை என்றால் நம்மை விட்டு நண்பர்கள் உறவினர்கள் கூட பிரிந்து விடுவார்கள் "இப்படிப்பட்ட நண்பர்கள் , உறவினர்கள் நம்முடன் இருப்பதை விட நம்மை விட்டு பிரிந்து போவது நல்லது . அவர்களுக்காக நாம்...

அப்பா அம்மாவுக்கு !!!

குழந்தைகள் பிறக்கும் போது கள்ளங் கபடமில்லாமல்தான் பிறக்கின்றனர். ஒரு சூதுவாதும் தெரிவதில்லை. வளர வளர சூழலிலிருந்து புதிது புதிதாய்க் கற்றுக் கொள்கின்றனர். எனவே, மழலைகளுக்கு ஐம்புலன்களுக்கும் தகுந்த ஆரோக்கியமான விருந்து அளிப்பது ஒவ்வொரு பெற்றோரின் கடமையாகும். நாம் பல சமயம் நம் தவற்றை உணராமல் குழந்தையின் மேல் அவற்றைத் திணிக்கிறோம். குழந்தைகள் தவறு செய்வதற்கு நாம் தான் பொறுப்பு என்று தெரிந்து கொள்ள வேண்டும். சிலர் ஆரம்பத்திலிருந்தே கொஞ்சுவதற்குக்கூட சில வேண்டாத அமங்கலச் சொற்களை உபயோகிப்பார்கள். ஆரம்பத்திலிருந்தே மங்கலமான சொற்களையும் மரியாதையுடன்...

தூய தமிழ் சொற்களும்... பேச்சு வழக்கு சொற்களும்...

அ - தமிழ் மொழியின் முதல் எழுத்து : அழகு: அகிலம் - உலகம் அகம் - உள்ளே அருகே - பக்கத்தில் அடுத்த - வேற அரசர் - மன்னர் அதிகாரி - வேலைப் பார்ப்பவர் அதிகம் - நிறைய அறிவிப்பு - சொல்லுதல் அசைவு - நகருதல் அபிப்ராயம் - தன் விருப்பத்தை கூறுதல் அமருதல் - உட்காருதல் அவசரம் - மிக வேகமாக அடிப்படை - அத்தியாவசியமான அஞ்சுதல் - பயப்படுதல் அங்கீகாரம் - உரிமை அழைத்தல் - கூப்பிடுதல் அதிர்ச்சி - வியப்பு அருள்வாக்கு - தெய்வவாக்கு அலுவலகம் - வேலை பார்க்கும் இடம் அனுப்புதல் - கொடுத்தல் அழகு - பெண் அமைப்பு - நிறுவனம் அறிஞர் - திறமையானவர் அஆ - வியப்பைக் குறிக்கும்...

சிரித்த முகம்; சிடுமூஞ்சி – இதற்கும் ஜோதிடம்

பொதுவாக சனி/செவ்வாய்/ராகு/கேது ஆகியவற்றில் ஏதாவது ஒன்று லக்னத்தில் இருந்தால் அவரது முகத்தில் சிடுசிடுப்பு காணப்படும். குறிப்பாக செவ்வாய் லக்னத்தில் இருந்தால் மூக்கிற்கு மேல் கோபப்படுபவராக இருப்பார். லக்னத்தில் சூரியன் இருந்தாலும் அவரது கோபம் சுட்டெரிக்கும் வகையில் இருக்கும். ஆனால் நியாயமான விடயத்திற்கு மட்டுமே கோபம் வரும். லக்னத்தில் சனி இருந்தால் அவருக்கு அசட்டுத்தனமான கோபம் இருக்கும். ஆனால் அவரது மனதில் என்ன நினைக்கிறார்கள் என்பதை முக பாவனையில் இருந்து அறிய முடியாது. லக்னத்தில் சுக்கிரன், குரு, புதன், வளர்பிறை சந்திரன் அமர்ந்திருந்தால் அவர்கள்...

நான் கேக்கிற கேள்விக்கு பதில் தெரிந்தால்..!!!

1- யாரையாவது பிடிக்க போகும் போது வீட்டின் கதவை உடைத்துக்கொண்டு பொலிஸ் போகிறதே அதற்குப் பின் கதவை சரி செய்து கொடுப்பாங்களா 2-எல்லா டிவி சானல்லையும் ஏன் மிமிக்கிரி ஆர்ட்டிஸ்ட் கோர்ட் போட்டுருக்காங்க (பெரிய கொடுமை என்னன்னா ஆபிசில  எங்க மேனேஜர்ஜ  பார்த்த எனக்கு ரோபோ சங்கர்  ஞாபகம் வந்து பலமா சிரிக்கிறேன்..)3-டெலிபோண்ல நம்பர்கள் மேலருந்து கீழ இருக்கு..,கால்குலேடர்ல மட்டும் ஏன் கீழ்ழிருந்து மேல இருக்கு4-மூக்குலயும் ...