Sunday, December 22, 2013

உறவுகள்….. உணர்வுகள்.....

“டீன் ஏஜ் பருவம்” ஒவ்வொருவரின் வாழ்விலும் மறக்கவே முடியாத மிக அழகான காலகட்டம்தான்.

துடிதுடிப்பு, பரப்பரப்பு, அலட்சியம், எந்த விஷயத்தையுமே மிகைப்படுத்துதல், ஆரவாரம், ஆர்ப்பாட்டம் என அமர்க்களமாயிருகும். அந்தப் பருவத்தில் அதற்கு எதிர்மாறான வலிகளும், ரணங்களும் தாக்குவது இயல்புதான்.

சுருக்கமாக சொல்லப்போனால் முரண்பாடுகளின் ஒட்டு மொத்த சங்கம்ம்தான் “டீன் ஏஜ்” பருவம்.

இந்தப் பருவத்தினரைக் கையாள்வது என்பது சாதார விஷயமல்ல. கம்பி மேல்நடப்பது போல் அதி ஜாக்கிரையுடன் இருக்க வேண்டியது அவசியம். டீன் ஏஜ் பருத்தினரின் மனநிலையை இந்த குட்டிக்கதை தெளிவாக விளக்கம் என நம்புகிறேன்.

ஒருவன் குரங்குகளை வளர்த்து வந்தான். தினமும் அவை சாப்பிட காலையில் நான்கு மாம்பழங்களையும் மாலையில் மூன்று மாம்பழங்களையும் கொடுத்து வாந்தான்.

ஒருநாள் அந்தக் குரங்குகளைப் பார்த்து “இனிமேல் உங்களுக்கு காலையில் மூன்று மாம்பழங்களும் மாலையில் நான்கு மாம்பழங்களும் தரலாம் என்றிருக்கிறேன்” என்றான்.

இப்படிச்சொன்னதுதான் தாமதம். “முடியாது. முடியவே முடியாது. இதற்கு நாங்கள் ஒரு போதும் ஒத்துக்கொள்ள முடியாது” என்று எல்லாக் குரங்களுகள் கத்த ஆரம்பித்துவிட்டன.

“கொஞ்சம் பொறுமையாகக்கேளுங்கள். காலையில் நான்கு மாலையில் மூன்று என்று வைத்துக் கொண்டாலும், காலையில் மொத்தம் உங்களுக்குக் கிடைக்கப் போவது ஏழு மாம்பழங்கள் தானே?

இதை ஏன் புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறீர்கள்… என்று எஜமான் விளக்கமளித்து முடிப்பதற்குள் அவை “வேண்டாம் வேண்டாம் எங்கள் முடிவை நாங்கள் மாற்றிக் கொள்வதாக இல்லை. முதலில் கொடுத்த முறைப்படியே கொடுங்கள்” என்று போராடி வெறி பெற்று, அந்த எஜமானரை சம்மதிக்க வைத்த பிறகு தான் ஓய்ந்தன.

இதே மனநிலைதான் டீன் ஏஜினருக்கும். முடிவைப் பற்றி அவர்களுக்கு அக்கறை இல்லை. அடுத்தவர் சொல்லும் கருத்தை ஆராய்ந்து அதில் இருக்கும் சாதக பாதகங்களைப் பிரித்துப் பார்க்கும் பக்குவம் இருப்பதில்லை. தான் பிடித்த முயலுக்கு மூன்றுகால் என்று பிடிவாதமா இருப்பார்கள்.

அடுத்தவர் சொல்லி விட்டார் என்பதற்காகவே, இவர் சொல்லி நாம் என்ன கேட்பது என்று நினைத்து வேண்டுமென்றே அதற்கு நேர்மாறாக செய்வார்கள்.

இவர்களை வலதுபக்கம் போகச் சொல்ல வேண்டும் என்றால் “இடது பக்கம் போ” என்று சொன்னால் போதும். காரியம் சரியாக நடந்துவிடும்.

அடுத்தது, இந்தக் குரங்குக்கூட்டத்தைப் போலவே ஒருவன் எதிர்க்க ஆரம்பித்தால் எல்லோரும் சேர்ந்து கொண்டுகூட்டத்தோடு கோவிந்தா போடுவது. இந்தக் குழு மனப்பான்மையின (Mass Mentality) எதிரொலிதான் கல்லூரிகளில் அடிக்கடி நடக்கும் ஸ்டிரைக், கலாட்டா போன்றவை.

இந்தக் கதையில் இன்னொரு உட்கருத்தும் பொதிந்துள்ளது. வாழ்க்கையின் முற்பகுதியில் கஷ்டப்பட்டுவிட்டு பிறகு சந்தோஷமாக வாழலாம் என்ற எண்ணம் மன முதிர்சி உடையவர்களுக்கு எழும். இப்போது கஷ்டப்படுவது பின்னால் கஷ்டப்படாமலிருப்பதற்குத்தான் என்ற பக்குவம் டீன் ஏஜ் பருவத்திற்குத் தோன்றாது.

இந்தக் குரங்குகள் எப்படி காலையிலேயே அதிகமா சாப்பிட்டு விடவேண்டும் என்று நினைகின்றனவோ அதே போல்தான் இப்போதே வாழ்க்கையின் எல்லா சந்தோஷங்களையும் அனுபவித்து விடவேண்டும் என்ற எண்ணம் இவர்கள் மனத்தில் ஆழப்பதிந்திருக்கும்.

“ஃபீயூச்சரைப் பத்தி யோசிச்சு பிரசன்ட் மறந்திராதே” என்று அதிமேதாவித்தனமாக தத்துவம் பேசுவார்கள். இதற்கு அத்தம் திருட்டுதம் அடிப்பது, பெண்களை கிண்டல் செய்வது, பெரியவர்களை எதிர்த்துப் பேசுவது தவறில்லை என்பதுதான்.

டீன் ஏஜினர் பேசும்போது கொஞ்சம் உற்றுக் கவனித்துப் பாருங்கள். ஒருவன் ஜோக்கடிப்பான் எல்லோரும் சிரிப்பார்கள். உடனே இன்னொருவனுக்குத் தன்னுடைய திறமையைக் காட்டி எல்லோரையும் தன் ஒரு கானா பாடலை எடுத்து விடுவான். உடனே எல்லோரும் கைதட்டுவார்கள்.

இது போராடித்து விட்டதா? அடுத்தகட்டம் சத்தமாய் சிரித்துப் பக்கத்தில் நடந்து போவோரை கதிகலங்கச் செய்வது, பஸ்சைத் தட்டி ஆர்ப்பாட்டம் செய்வது போன்ற நடவடிக்ககளின் மூலம் அடுத்தவரை திரும்பிப் பார்க்க வைத்து விடுவார்கள்.

நாய் குரைப்பது போல் சப்தம் எழுப்பும் ஹாரன்களை நம் பக்கதில் வந்து அடித்து பயமுறுத்துவார்கள். யாராவது “ஏம்பா ஒழுங்கா பார்த்துப் போகக்கூடாதா?” என்று நியாயமாய் கேள்வி எழுப்பினால் “ஏய், என்னா பெருசு, ஃபிலிம் காட்டற?” என்று எகிறுவார்கள்.

இதெல்லாம் தங்கள் ஈகோவை பூஸ்ட் அப் செய்து, உலகத்திலேயே நான் பெரிய ஆள், என்னை விட்டால் வேறு யாரும் கிடையாது என்று காட்டிக் கொள்ளத்தான்.

கூட்டத்திலிருக்கும் போது வீரம் காட்டுவார்கள். தனியாய் மாட்டிக் கொண்டால் அவ்வளவுதான்! பேய் முழி முழித்து “ஸாரி தலைவா” என்று ஜகா வாங்கி விடுவார்கள்.

இது போல் டீன் ஏஜினரின் சாகசங்களையும் குணநலன்களையும் அடுக்கிக் கொண்டே போகலாம். மேற்சொன்னதெல்லாம் சிறுதுளிதான். இவற்றையெல்லாம் நான் குற்றச் சாட்டுகளாக சொல்லவில்லை. இந்த சேஷ்டைகள் எல்லாம் இல்லையென்றால் ஏதோ கோளாறு என்று அர்த்தம்.

‘டீன் ஏஜினரின் குணங்களை நாம் தெளிவாகப் புரிந்து கொண்டால்தான், அவர்களை எப்படிக் கையாள்வது என்பதை உணர முடியும்.

குழந்தை வயிற்றில் இருக்கும்போதே, பிறந்த குழந்தை இரவில் அழும். நம்மைத் தூங்கவிடாமல் செய்யும் என்பதை தாய் புரிந்து கொண்டு, தூக்கத்தைக் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைத்துக் கொண்டு தயாரகிவிடுகிறாள்.

அதேபோல்தான் டீன் டீஜ் பருவத்தை அடையும்போது நம் குழந்தை இப்படி இப்படி நடந்து கொள்வான், அவன் மனநிலை இப்படித்தான் இருக்கும் என்பதை முதலிலேயே பெற்றோர் உணர்ந்து கொண்டு விட்டால், அந்த சமயத்தில் அவர்களை அழகாகக் கையாண்டு விடலாம்.

டீன் பருவத்தில் உங்கள் குழந்தையின் மனது கடல் போல பெருத்த ஆரவாரத்துடன் இருக்கும். அவர்கள் எப்போதும் சத்தம் போட்டுச் சிரிப்பது, ரேடியோவை, டீவியை சப்தம் அதிகமாய் வைப்பது போன்றவற்றிற்கெல்லாம இந்த மனநிலைதான் காரணம்.

தங்களின் மன இரைச்சலைத்தான் இதன் மூலம் வெளிப்படுத்துகிறார்கள். அது உங்களுக்கு எரிச்சல் மூட்டினாலும், பக்குவமாய் சொல்லித்தான் மாற்றி முயல வேண்டும்.

அதிக சத்தத்தினால் அக்கம்பக்கதிலுள்ள எவருக்கு எவ்வளவு தொந்தரவு, உன் காதிற்கு எவ்வளவு கேடு என்ற ரீதியில் பேசினால் நிச்சயமாய் இந்தப் பிரச்சனையைத் தீர்த்து விடலாம்.

நான் ஏற்கனவே சொன்னது போல இந்தப் பருவத்தினருக்கே உரிய குணம் ஈகோ, “நான்” “தன்னுடைய” என்ற நினைப்பு இவர்களுக்கு அதிகமாயிருக்கும். கத்தியை கொல்லவும் பயன்படுத்தலாம் என்பது போல் இவர்களுடைய ஈகோவை ஆக்கப்பூர்வமாகப் பயன்படுத்தலாம்.

அவர்களை அருகில் அமர வத்துப்பேசுங்கள். “உனக்கு என்ன வேண்டும்? உன்னை எல்லோரும் கவனிக்க வேண்டும் அவ்வளவு தானே இதற்கு ஏன் இப்படி பஸ்ஸைத் தட்டிக் கூச்சல் போடுகிறாய்? இதனால் மற்றவர்களின் எரிச்சலைத்தானே சம்பாதித்துக்கொள்கிறாய்? இந்த சக்தியைப் பயன்படுத்தி பாட்டு கற்றுக் கொள், மேடையில் கச்சேரி செய், புகழுக்குப் புகழ், பணித்திற்குப் பணம். என்ன…?” அப்படிப் பேசிப் பாருங்கள்.

நிச்சயமாய் ஏதாவது ஒரு துறையில் உங்கள் பிள்ளை சாதித்துக் காட்டுவான். ஆரம்பத்தில் தன்னை எல்லோரும் கவனிக்க வேண்டும். என்பதற்காகவே ஆரம்பித்தாலும் போகப் போக இந்த கலைகளே அவன் மனதிலிருக்கும் அகங்காரத்தைத் துடைத்துப் போடும்.

ஊரை அழிக்கும் பெரிய வெள்ளத்தை மடைதிருப்பி விட்டு பலருக்கும் பயனுள்ளதாக எவ்வளவு எளிதில் நீங்கள்மாற்றி விட்டீர்கள் பார்த்தீர்களா?

டீன் ஏஜ் பிள்ளைகளின் பெற்றோர் அடிக்கடி சொல்லும் “வார்த்தை வயித்தில நெருப்பைக் கட்டிக்கிட்டிருக்கேன்” என்பது தான். காரணம்? இந்த வயதில் வரும் இன்ஃபார்ச்சுவேஷன்.

0 comments:

Post a Comment