நல்ல நண்பர்கள் ?
இதோ எனக்கு
தெரிந்தவை நான் அறிந்தவை:-
நல்ல நண்பர்களே கிடைக்கவில்லை என்றால் பிழை நண்பர்களில் இல்லை. நம்மனதில்தான்இருக்கிறது.நீங்கள் அறிந்த வரையறை பிழையானதாக இருக்கும். நண்பன் என்பவன் ஆபத்தில் உதவும் மூன்றாவது மனிதனாக மட்டுமின்றி, நீங்கள் வீட்டிற்குள் செல்லும்; போது ஓடி வந்து கால்களைக் கட்டிக் கொள்ளும் உங்கள் ஜுனியராகவோ, கால்களுக்கிடையே இடையே சுற்றிவரும் பூனைக்குட்டியாகவோ, சொன்னதையே சொல்லிச் சொல்லி இன்பம் தரும் கிளியாகவோ, உங்கள் சந்தோசத்தின் போது வாலையாட்டியும், துக்கத்தின் போது தானும் சாப்பிடாமல் உங்கள் முகத்தையே பார்த்துக் கொண்டு நம் கவலையைப் பகிர்ந்து கொள்ளும் நாயாகவோ கூட இருக்கலாம். இவை எல்லாவற்றையும் விட புத்தகங்களை உங்களது நண்பனாக்கிக் கொண்டால் சிறந்த மனிதனாவீர்கள். உங்கள் உள்ளங்கள் பரந்த வெளியாக இருக்கும் போது உங்களைச் சுற்றி நண்பர்கள் மட்டுமே இருப்பர்கள்.
நண்பர்கள் செய்யும் காரியம் ஏற்புடையதென்றால் கைகளைத் தட்டி உற்சாகப்படுத்துங்கள். கைகளைத் தட்டுவதால் உங்கள் ரேகைகள் அழிந்து போய்விடாது. கைகளைத் தட்ட சோம்பல்படும் நண்பர்களிடம் சொல்லுங்கள் ; அமைதியாக வேடிக்கை பாருங்கள் – என்று. வேடிக்கை பார்த்துக் கொண்டே உங்களுக்குப் பள்ளம் வெட்டுபவர்களிடம் சொல்லுங்கள்,ஒரு நண்பனை
அழித்தால் அவன் போல இன்னும் நூறு நண்பன் கிடைப்பான் என்று

0 comments:
Post a Comment