Sunday, January 26, 2014

மீண்டும் இணைகிறதா வருத்தப்படாத வாலிபர் சங்கம் கூட்டணி..!



கடந்த ஆண்டின் ப்ளாக் பஸ்டர் படமான வருத்தப்படாத வாலிபர் சங்கத்தின் இயக்குனர் பொன்ராம் மற்றும் நடிகர் சிவகார்த்திகேயன் கூட்டணியில்
மீண்டும் ஒரு படம் தயாராகலாம் என்று கூறப்படுகிறது.

இயக்குனர் எம்.ராஜேஷின் முன்னாள் உதவி இயக்குனரான பொன்ராம் சிவகார்த்திகேயன், ஸ்ரீதிவ்யா நடித்த வருத்தப்படாத வாலிபர் சங்கம்
திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். அறிமுகப்படமே ப்ளாக் பஸ்டர் படமாக அமைந்தது. சென்ற ஆண்டு வெளியான திரைப்படங்களில் அதிக வசூலைக் குவித்த திரைப்படங்களில் இப்படமும் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது.

வருத்தப்படாத வாலிபர் சங்கத்தின் மூலம் அறிமுகமான நாயகியான ஸ்ரீதிவ்யா தற்பொழுது கோலிவுட்டின் மோஸ்ட் வாண்டட் ஹீரோயினாகப் பரிணமித்துவருகிறார்.

திருப்பதி பிரதர்ஸ் என்.லிங்குசாமி தயாரிக்கவிருக்கும் புதிய திரைப்படத்தில் இயக்குனர் பொன்ராம் மற்றும் சிவகார்த்திகேயன் கூட்டணியில்
ஒரு படம் தயாரிக்கப்படலாம் என்று கூறப்பட்டுவருகிறது. விரைவில் இப்படத்தினைப் பற்றிய அறிவிப்புகள் வெளியாகலாம்.

சிவகார்த்திகேயன் தற்பொழுது இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் கதை மற்றும் திரைக்கதையில், திருக்குமரன் இயக்கிவரும் மான்கராத்தே திரைப்படத்தில் நடித்துவருகிறார்.

அஜீத்தை வைத்து இயக்கவில்லை.. அடுத்த பட ஹீரோக்கள் ஆர்யா - கிருஷ்ணா..!



எனது அடுத்த படம் அஜீத்துடன் இல்லை.. ஆர்யாவையும் கிருஷ்ணாவையும் வைத்து இயக்குகிறேன், என்று இயக்குநர் விஷ்ணுவர்தன் கூறியுள்ளார்.

 ரஜினியின் பில்லா பட ரீமேக்கில் அஜீத்தை வைத்து இயக்கி வெற்றி கண்டார் விஷ்ணுவர்தன். பின்னர் ஆரம்பம் படத்தில் இருவரும் இணைந்தனர். இந்தப் படமும் வெற்றி பெற்றது.

இந்த நிலையில் மூன்றாவதாக அஜீத்தை வைத்து விஷ்ணுவர்தன் சொந்தமாக படம் தயாரித்து இயக்கப் போகிறார் என்று கூறப்பட்டது.

இதனை மறுத்துள்ளார் விஷ்ணுவர்தன். இதுகுறித்து அவர் கூறுகையில், "விஷ்ண்வர்தன் பிலிம்ஸ்' என்ற தயாரிப்பு நிறுவனத்தை புதிதாக ஆரம்பித்துள்ளது உண்மைதான்.

இந்த நிறுவனம் தயாரிக்கும் முதல் படத்தில் ஆர்யா மற்றும் கிருஷ்ணா நடிக்கிறார்கள். அஜீத்தை வைத்து இப்போது இயக்கும் திட்டம் எதுவும் இல்லை. எதிர்காலம் எப்படியோ.. பார்க்கலாம்,' என்றார்

அடுத்தடுத்த வெற்றிகள் குவிந்தும்...! சம்பளத்தை ஏற்றாத விஜய் சேதுபதி..!



சினிமாவில் அடுத்தடுத்து வெற்றிகள் கிடைத்தாலும் தனது சம்பளத்தை இன்னும் உயர்த்தாமல் உள்ளாராம் விஜய் சேதுபதி.

 தென்மேற்குப் பருவக்காற்று படம் மூலம் அறிமுகமானவர் விஜய் சேதுபதி. முதல் படத்திலேயே மிகப் பெரிய பாராட்டு கிடைத்தது. அதற்கு முன் சில படங்களில் துணை நடிகராக நடித்து போராடித்தான் ஹீரோவானார்.

அடுத்து சுந்தர பாண்டியன் படத்தில் நெகடிவ் பாத்திரத்தில் நடித்தார். அந்தப் படம் பெரிய வெற்றியைப் பெற்றது. அடுத்து வெளியான பீட்சாவில் அவர் ஹீரோ. படம் பிரமாத வெற்றி. அடுத்தடுத்து அவர் ஹீரோவாக நடித்த நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம், சூது கவ்வும் போன்ற படங்கள் பாக்ஸ் ஆபீஸில் பெரிய லாபம் பார்த்தன. இந்த நேரத்தில் அவர் சம்பளம் ரூ 2.5 கோடி என்று கூறப்படுகிறது.

 பொதுவாக இத்தனை வெற்றிப் படங்களை அடுத்தடுத்து கொடுக்கும் ஹீரோக்கள் சம்பளத்தை கணிசமாக ஏற்றிவிடுவார்கள். ஆனால் விஜய்சேதுபதி அமைதியாக அதே சம்பளம்தான் வாங்குகிறாராம்.

 இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா பற்றி எதிர்மறை விமர்சனங்கள் வந்தாலும் அந்தப் படம் நன்றாகவே ஓடி லாபம் சம்பாதித்தது. அடுத்து விஜய் சேதுபதியின் ரம்மி, பண்ணையாரும் பத்மினியும் போன்ற படங்கள் வெளியாக உள்ளன.

 இந்தப் படங்கள் வந்த பிறகே, தனது சம்பளத்தை உயர்த்தப் போகிறாராம் விஜய் சேதுபதி.

Saturday, January 25, 2014

செல்போன் வெடித்து சிறுவன் படுகாயம்..!



சார்ஜ் போட்டுக்கிட்டே கேம்ஸ் விளையாடியபோது செல்போன் வெடிப்பு:- சிறுவன் படுகாயம

மத்திய பிரதேசத்தில் செல்போனை சார்ஜில் போட்டுக் கொண்டே கேம்ஸ் விளையாடியபோது அது வெடித்ததில் 10 வயது சிறுவன் படுகாயம் அடைந்தார்.

மத்திய பிரதேச மாநிலம் தேவாஸ் மாவட்டத்தில் உள்ள உதய் நகர் கிராமத்தைச் சேர்ந்தவர் அரிஹந்த்(10). அவர் நேற்று இரவு செல்போனை சார்ஜில் போட்டுவிட்டு அதில் கேம்ஸ் விளையாடிக் கொண்டிருந்தார்.

அப்போது செல்போன் திடீர் என்று வெடித்ததில் அவரது முகம் மற்றும் கண்ணில் படுகாயம் ஏற்பட்டது. உடனே அவரை இந்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அவருக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவர் கூறுகையில்,

அரிஹந்த் அபாய கட்டத்தை தாண்டிவிட்டார். ஆனால் அவரது கையில் உள்ள விரல் ஒன்றில் ரத்த ஓட்டம் நின்றுவிட்டது. மீண்டும் ரத்த ஓட்டம் ஏற்படாவிட்டால் அவரது விரலை வெட்டி எடுக்க வேண்டி இருக்கும் என்றார்.