Sunday, December 22, 2013

உலகை அதிர வைத்த "மைக்கேல்" ஒரு சகாப்தம்


இளசுகள் முதல் பெருசுகள் வரை அனைவரையும் தன் இசையால் கட்டிப்போட்டவர், இவரை எதிலுமே குறிப்பிட்டு சொல்ல முடியாமல் அனைத்திலும் கலந்து கட்டி அடித்தவர். தனது நடனம், இசை, புதுமை என்று அனைத்திலுமே சிறந்து விளங்கினார்.

பலரும் தொலைக்காட்சியில் பார்த்து இருப்பீர்கள் மைக்கேலின் பேய் தனமான ஆட்டத்தை ஒரு காட்சியாவது பார்க்காமல் இருப்பவர்கள் மிக சொற்பம், கராத்தே என்றால் எப்படி அனைவரும் இன்றுவரை கிராமம் முதல் கொண்டு ப்ரூஸ் லீ யை கூறுகிறார்களோ, நடனம் என்றால் அது மைக்கேல் ஜாக்சன் தான், இவர் எவ்வளோ தூரம் மக்களின் மனதில் குடி கொண்டு இருக்கிறார் என்பதற்கு நம்ம கவுண்டரின் வசனமான ஜப்பான்ல ஜாக்கி சான் கூப்பிட்டாக, அமெரிக்கால மைக்கேல் ஜாக்சன் கூப்பிட்டாக என்று சாதாரண வசனம் ஒன்றே போதும் கிராமம் உட்பட அவர் எந்தளவு அனைவரையும் கவர்ந்து இருக்கிறார் என்று.

நமது பிரபு தேவா முதல் கொண்டு உலகம் முழுவதும் உள்ள நடன கலைஞர்களின் ரோல் மாடல் இவர் என்றால் மிகையல்ல, பலரும் இவரை மனதில் வைத்தே தங்கள் நடன ஆசையை வளர்த்துக்கொள்கிறார்கள். இத்தனை பேரை தனது ரசிகர்களாக, ரோல் மாடலாக மாற்ற வைப்பது என்பது சாதாரணமான விஷயம் இல்லை. இன்று இவர் நடனத்தின் பாதிப்பு இல்லாமல் நடனம் ஆடுவது என்பதே ரொம்ப சிரமம்.

தனது 9 வயதிலேயே ஆட்டத்தை துவங்கியவர், சிறு வயதிலேயே பலரை புருவம் உயர்த்த வைத்தவர். வெள்ளையர்களுக்கு கறுப்பர்கள் என்றாலே மட்டமான நினைப்பு தான், தற்போது குறைந்து விட்டது என்றாலும் இன்னும் இருக்கிறது. அப்போது இது உச்சத்தில் இருந்த போது தன் திறமையால் அவர்களையே தனக்கு வெறிப்பிடித்த ரசிகர்களாக மாற்றி காட்டியவர். நான் வெறிப்பிடித்த என்று கூறியது மிகைப்படுத்த பட்ட வார்த்தை அல்ல, சொல்ல போனால் அதை விட மிக குறைவான வீச்சை தரும் வார்த்தையே.

மைக்கேல் அரங்கில் வந்தால் ஆர்வம் தாங்காமல் தங்களை கட்டுப்படுத்த முடியாமல் கதறி அழும் ரசிகர்கள் கோடிக்கணக்கானவர்கள், மிகைப்படுத்தவில்லை. அவர் அரங்கில் ஆடும் போது முதலில் மெதுவாக ஒவ்வொரு ஸ்டெப் ஆக வைப்பார் ஆனால் அது வரை கூட தாங்க முடியாத ரசிகர்கள் அவரை ஆடக்கூறி கதறி அழுவார்கள், இதை நம்மில் பலர் பார்த்து இருக்கலாம் ஒரு சிலர் இதை போல காட்சிகளை பார்க்க வாய்ப்பு கிடைக்காமல் போய் இருக்கலாம்


எடுத்துக்காட்டிற்கு மைக்கேல் தனது ரசிகரிடம் நீ இவனை கொன்று விடு என்று கூறினால் பதில் கேள்வி கேட்காமல் செய்யக்கூடிய அளவிற்கு காட்டுத்தனமான ரசிகர்கள். ஒருவரை இந்த அளவிற்கு கட்டுப்படுத்த முடியும் என்றால் மைக்கேல் எத்தனை பெரிய திறமைசாலியாக மக்களை கவருபவராக இருந்து இருக்க வேண்டும். இதில் வெள்ளையர்கள் கறுப்பர்கள் என்று எந்த பாகுபாடும் இல்லை. அனைவரையும் தனது இசையால் நடனத்தால் கட்டிப்போட்டவர். இவருக்கு தாறுமாறான பெண் ரசிகர்கள், இவர் பெண்கள் கூட்டத்தில் சிக்கினால் தனி தனியாக பிய்த்து விடுவார்கள், இவர் மேல் பைத்தியமாக இருப்பவர்கள். இவரின் ஒரு அசைவிற்காக கண்ணீருடன் காத்து இருப்பவர்கள், இவரின் ஆட்டத்தை பார்த்து உணர்ச்சிவசப்பட்டு மயக்கமடைந்து விடுமளவிற்கு வெறித்தனமானவர்கள்

அவருடைய த்ரில்லர்(1982) ஆல்பம் வெளிவந்த போது அடைந்த சாதனைகள் (41 மில்லியன்) கொஞ்சநஞ்சம் அல்ல, இது உலக சாதனை அடைந்தது என்பதில் எந்த ஆச்சரியமும் இல்லை. பாப் இசையில் புதிய பரிமாணத்தையே கொண்டு வந்தவர், இவருடைய பல நடனங்கள் குறிப்பாக காற்றில் கை வைத்து ஆடுவது, கயிறு இல்லாமலே கயிற்றை இழுப்பது, ஓடிய படியே நடப்பது (மிதப்பது), தொப்பி அணிந்து கண்களை மறைத்து ஆடுவது போன்றவை எவராலும் மறக்க முடியாது. நம் ஊர் மேடையில் ஆடுபவர்கள் கூட இதை போல செய்வதை பலரும் கவனித்து இருப்பீர்கள், இவை மட்டுமல்லாது தனது உடைகளில் பெரும் மாற்றத்தை கொண்டு வந்தார், ராணுவ உடை, வெள்ளை கருப்பு உடை (உடன் க்ளவுஸ்), கற்கள் பதித்த உடை, ஜிகினா உடை என்று புதிய ஸ்டைல்களை அறிமுகப்படுத்தினார். இவர் ஆல்பங்கள் எடுத்த விதம் மிகவும் வித்யாசமாக இருக்கும், இதுவரை எவரும் பயன்படுத்தி இருந்திராத முறையில் கலக்கலான கிராபிக்ஸ் ல் இருக்கும்.

இவர் இரு முறை திருமணம் செய்து கொண்டார், இரண்டாவது மனைவிக்கு இரண்டு குழந்தைகளும் வாடகை தாய் மூலம் ஒரு குழந்தையும் பெற்றுக்கொண்டார். இவரது மகன்களின் பெயர் வித்யாசமாக இருக்கும் மைக்கேல் பிரின்ஸ், மைக்கேல் பிரின்ஸ் 1 மற்றும் மைக்கேல் பிரின்ஸ் 2.

பிரபலம் என்றாலே பிரச்சனை தான் என்பது போல இவருக்கு பிரச்சனை வேறு ரூபத்தில் வந்தது. பெப்சி விளம்பர நிகழ்ச்சிக்காக ஆடிய போது தீ விபத்து ஏற்பட்டு காயங்கள் ஆனது, இதற்க்கு பெரும் நஷ்ட ஈடு பெற்றார் ஆனால் அனைத்தையும் நன்கொடை செய்து விட்டார், அதன் பிறகு தான் தன் கருப்பு தோலை வெள்ளையாக மாற்ற காஸ்மெடிக் அறுவை சிகிச்சை செய்துகொண்டு வெள்ளைக்காரனாக! மாறினார். பணம் இருந்தால் என்ன வேண்டும் என்றாலும் செய்யலாம் என்பதற்கும், இயற்கையை மீறினால் என்றுமே ஆபத்து தான் என்பதற்கும் இவரே சிறந்த உதாரணம் இதனால் அவர் பல பிரச்சனைகளை சந்தித்தார். இவர் இந்த நிலைக்கு காரணமே இந்த தோலை மாற்றியதும் என்று என்று அனைவரும் கூறுகிறார்கள்.

அதன் பிறகு சிறுவனுடன் ஓரின சேர்க்கை பிரச்சனையில் மாட்டிக்கொண்டார், இதற்க்கு பல மில்லியன் டாலர்களை நஷ்டஈடாக கொடுத்தார், இதை போல செலவுகள் அவரை பெரும் சிக்கலில் தள்ளியது. சவுதியில் ஒரு நிகழ்ச்சி செய்ய பணம் வாங்கி விட்டு அவர் அதை செய்யாததால் அதிலும் பல சிக்கல்கள், பிறகு உலகையே அதிர்ச்சி அல்லது ஆச்சர்யம் அடையும் வைக்கும் விதமாக முஸ்லிம் மதத்திற்கு மாறினார், உலகில் உள்ள பிரபலமான செலிபிரிட்டி ஒருவர் மதம் மாறியது பலரையும் திரும்பி பார்க்க வைத்தது. அவர் பெயர் உட்பட தன்னை மாற்றிக்கொண்டாலும் அவர் இறந்த பின்னும் உலகம் அவரை மைக்கேலாகவே நினைத்தது, இசைக்கும் நடனத்திற்கும் மதம் ஒரு தடையில்லை என்பதை நிரூபித்தார், அவர் என்னாவாக மாறினாலும் அவரது ரசிகர்கள் அவர் மீதுள்ள அன்பில் கொஞ்சமும் மாறமாட்டார்கள் என்பதற்கு பல உதாரணங்களை கூறலாம்.

தற்போது கூட "இறுதித் திரை" என்று நிகழ்ச்சியை நடத்துவதாக இருந்தார், இதற்காக அனைவரும் ஒத்திகை பார்த்துக்கொண்டு இருந்தார்கள், ஆனால் இறுதி திரை செல்லாமலே இறுதி பயணத்தில் கலந்து கொண்டு விட்டார் என்பது பலரையும் கண்ணீரில் ஆழ்த்திய நிகழ்ச்சி. கலந்து கொண்டு இருந்தால் உலகம் இருக்கும் வரை நினைவு கூறும் ஒரு நிகழ்ச்சியாக இது இருந்து இருக்கும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.

எளிய பயிற்சி‏....


    எப்பவாச்சும் ரொம்ப மன அழுத்ததோட இருக்கும் போது அதிலிருந்து விடுபட ஒரு எளிய பயிற்சி

உங்களை தனிமை படுத்திக் கொள்ளுங்கள்

மீனவன் வலை வீசுவதைப் பாத்திருக்கீங்களா? "ஹூம்" என்றபடி இரு கைகளையும் பலம் கொண்ட மட்டும் அதைப் போல காற்றில் வீசுங்க (எது மேலயும் இடிச்சிடாம பாத்துக்கங்க கை கழன்டு போற மாதிரி இல்லாம ஒரளவு மிதமான வேகத்தோட வீசுங்க)

இப்படி வீசும் போது உங்களை விட்டு இரு விஷயங்கள் வெளியேறுவதாக கற்பனை செய்யுங்க. ஒன்னு ஈகோ என்னும் ஆணவம், இன்னொன்னு உங்க மன அழுத்தம். இப்படி மூனு-நாலு முறை செய்யுங்க

சரி இப்ப எல்லாம் உங்களை விட்டு மன அழுத்தமும் ஈகோவும் போயிடுச்சி இல்லயா? ஈகோ இல்லாம எல்லாரோடவும் போய் பழகுங்க

என்ன நம்பமுடியலையா? செஞ்சி பாருங்க!

தன்னம்பிக்கை வளர வழி...!


தன்னம்பிக்கை வளர வழி...!

எனது குறிக்கோள் என்ன என்பதை நானே நிர்ணயித்துள்ளேன். ஆகவே அதை அடையத் தீவிரமாகவும், முழு முயற்சியுடனும் தொடர்ந்து ஈடுபடுவேன். வெற்றி பெறுவேன். எண்ணும் எண்ணங்களே உடலின் வெளித் தோற்றத்திலும் செய்கையிலும் மிளிரும் என்பதை அறிவேன். ஆகவே நான் வெற்றி அடைந்த தோற்றத்தை மனக்கண் முன்னால் தினமும் முடிந்தவரை பார்ப்பேன்.

வெற்றி பெறத் தேவைப்படும் அனைத்துக் குணங்களையும் மனதில் ஒரு பத்து நிமிடம் தினம்தோறும் நினைத்து அதை அடையப் பாடுபடுவேன். நியாயம், தர்மம் இவற்றின் அடிப்படையில் அல்லாது மற்ற வழியில் வரும் வெற்றி நிலைக்காது என்பதால் தன்னம்பிக்கையுடன் நேர்மையான வழியிலேயே நிச்சயம் வெற்றியைப் பெறுவேன். வெற்றி நிச்சயம் என்பது எனக்கேயாகும் இந்தத் தன்னம்பிக்கைச் சிந்தனையை விடாது காலை எழுந்தவுடன் மனதிற்குள் கூறிக் கொள்ளுங்கள்.

வெற்றியை அடைய இரண்டாவது படி இதுவே!

மின்னஞ்சலில் அரட்டையா? உஷார்!!!



          மின்னஞ்சலில் நண்பர்களுடன் அரட்டை அடிப்பது என்பது எல்லோருக்குமே மிகப் பிடித்தமான விஷயம்தான். அதுவும் ஒரு குழுவாக அரட்டை அடிப்பதில் இருக்கும் மகிழ்ச்சியே தனிதான்.

நமக்குத் தெரிந்த, பழகிய நண்பர்களுடன் அரட்டை அடிப்பது என்பது ஒன்றும் பெரிய விஷயம் அல்ல. அதில் எந்த பிரச்சினையும் இல்லை. ஆனால் நாம் எல்லோரும் தெரிந்த நண்பர்களுடன் மட்டுமா அரட்டை அடிக்கின்றோம். இல்லையே...

சாட்டில் புதிதாக எத்தனை நண்பர்களை பிடிக்கின்றோம். அவர்களுடன் மணிக்கணக்காக அரட்டை அடிக்கின்றோம். அதையும் தாண்டி அவர்களை சந்திப்பது, அவர்களுடன் ஊர் சுற்றுவது, டேட்டிங் என எங்கெங்கோ போய்க் கொண்டிருக்கிறது உலகம்.

சரி இதெல்லாம் நல்ல நண்பர்கள், நல்ல நபர்களுடன் பழகும்போது சரி.... ஏதாவது ஓரிடத்தில் சரியில்லாமல் போகும்போது என்னென்ன பிரச்சினைகள் ஏற்படுகின்றன. அதையெல்லாம் தவிர்க்க வேண்டாமா? அது நம் கையில்தான் இருக்கிறது.

அதற்கு என்னென்ன தேவை.... எவ்வாறு எச்சரிக்கையாக இருப்பது என்பதெல்லாம் எல்லோருக்கும் தெரியும். ஆனால் ஒரு சிலருக்கு தெரியாதல்லவா அதற்காக....

இதோ ஒரு சில டிப்ஸ்.....


யாரிடமும் முதலில் அறிமுகம் ஆகும் போது, நீங்கள் அவரை நேரில் பார்க்கவில்லை. அவரைப் பற்றி எதுவும் தெரியாது. எனவே மிக நிதானமாக உங்களது அறிவைப் பயன்படுத்தி அவரிடம் மெல்ல மெல்ல பழக வேண்டும். எதிலும் அவசரம் கூடாது.


மின்னஞ்சலில் சாட் செய்யும் அனைவரும் நேர்மையாக நடந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்க இயலாது. நீங்கள் உங்களால் முடிந்தவரை நேர்மையாக இருங்கள். மற்றவரிடம் அதையே எதிர்பாருங்கள். ஆனால் அவ்வாறே இருப்பார் என்று எப்போதும் நினைக்காதீர்கள்.

இன்னுமொரு விஷயம் என்னவென்றால்.... இளைய தலைமுறையினர் தங்களது வாழ்க்கைத் துணையைத் தேடும் ஒரு முக்கிய இடமாகவும் இந்த அரட்டை அமைந்துள்ளது. இதில் தவறில்லை. ஆனால் எப்போதுமே அது சரியாகவும் இருப்பதில்லை. இதற்காக ஒன்றைக் குறிப்பிட்டே ஆக வேண்டும். அதாவது மின்னஞ்சல் அரட்டையில் ஈடுபடுவோரில் 15 விழுக்காட்டினர் திருமணமானவர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள். (உடனே திருமணம் ஆனவர்கள் அரட்டை அடிக்கக் கூடாதா என்று கேட்காதீர்கள்.)

பல இணையதளங்கள் தற்போது அரட்டை அடிப்பவர்களின் விவரங்களை சுய பரிசோதனைக்குட்படுத்துதல், ஒப்புதல் பத்திரம் வாங்குதல் போன்றவையுடன், குற்றவாளிகளின் பட்டியலையும் உடன் வெளியிடுகிறது.

நீங்கள் அரட்டை அடிப்பவர் தன்னைப் பற்றி அளிக்கும் தகவல்களுக்கு குறைந்தபட்ச மதிப்பையே அளியுங்கள். ஏனெனில் அவர் அளிப்பதில் எந்த அளவிற்கு உண்மை இருக்கும் என்பதை அறிய இயலாது.

நீங்கள் அரட்டை அடிக்கும் நபரைப் பற்றிய உண்மையான நிலை தெரிந்துகொள்ளாமல் உங்கள் முழுப் பெயரையோ, முகவரி, தொலைபேசி எண், பணியிடம் போன்ற எதையும் அளிக்க வேண்டாம்.

பொதுவாக மின்னஞ்சலுக்கும் சரி, அரட்டைக்கும் சரி நீங்கள் உங்கள் பெயரை பயன்படுத்தாமல் ஏதாவது செல்லப் பெயரை வைத்துக் கொள்வது அதிக பயனளிக்கும்.

ஒருவரைப் பார்த்தே ஓரளவிற்கு அவரைப் பற்றி அறிந்து கொள்ள இயலும். எனவே நீங்கள் தொடர்பு கொள்ளும் நபரின் புகைப்படத்தைக் கேட்கலாம்.

புகைப்படத்தை அனுப்ப ஏதேனும் சாக்குப்போக்கு சொன்னாலோ, அனுப்பாமல் இருந்தாலோ அவருடனான தொடர்பை குறைத்தோ அல்லது நிறுத்திக் கொள்வதோ நல்லது. அப்படியே அந்த புகைப்படத்தை அனுப்பினாலும் அது தற்போதைய புகைப்படம் அல்லது அவருடையதுதான் என்பதில் எந்த ஆதாரமும் இல்லையே.

கணினியின் திரையில் உங்களுடன் உரையாடும் நபரின் அரட்டைப் பேச்சும் அவரது குணநலனும் ஒன்றுபோல இருக்கும் என்று நினைத்து ஏமாறாதீர்கள்.

பார்க்க ஸ்மார்ட்டாக இருப்பது போலவும், பெரிய நிறுவனத்தில் பணியாற்றுவதாகவும், திருமணமாகாதவர் என்றும் கூறுபவர்கள் பயங்கர குண்டாகவும், வேலையில்லாமல் சுற்றித் திரிபவராகவும், கல்யாணமாகி பல குழந்தைகள் பெற்றெடுத்தவராகவும் இருக்கலாம்.

அப்பப்பா......... இவ்வளவு பிரச்சினைகளா? என்று பெருமூச்சு விடாதீர்கள். நீங்கள் தெளிவாகவும், நிதானமாகவும், புத்திசாலித்தனமாகவும் மின்னஞ்சலில் அரட்டை அடித்து நல்ல நல்ல நண்பர்களையும் பெறலாம். அவர்களை ஆயுள் வரை நண்பர்களாகவும் தொடரலாம்.