Monday, January 6, 2014

அழகு குறிப்புகள்:மெலிந்த உடல் குண்டாக…



அழகு விஷயத்தில் பிரச்சினை இல்லாதவர்களே இல்லை. அதற்காக விலை உயர்ந்த அழகு சாதனங்களை முகத்தில்… உடலில் வைத்து தேய்க்க வேண்டிய அவசியமில்லை. முதலில் அழகு என்பது மனசை பொறுத்ததுதான் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

மனசு நன்றாக இருந்தால் புன்னகை முகமாக… எல்லோரையும் வசீகரிக்கும் முகமாக… அழகாக மாறிவிடும். அழகுக்கு எதிராக இருப்பது மன அழுத்தம் மட்டுமே… மன அழுத்தம் ஏற்படாமல் தவிர்க்க வேண்டும். எப்போதுமே மனதும், உடலும் குளிர்ச்சியாகும் விதத்தில் நன்றாக குளிப்பது நல்லது.

உடம்பில் எண்ணை தேய்த்து குளித்தாலும் உடலும், மனதும் குளிர்ச்சியடையும். தினமும் எண்ணை தேய்த்து குளிப்பது இளநரையை தடுக்கும். மேலும் வாத நோய்களை போக்கும். உடம்புக்கும் புத்துணர்வு கிடைக்கும். சருமத்துக்கும் மெருகு கூடும். உடலுக்கு ஆரோக்கியமும் ஏற்படும்.

அதுமட்டுமின்றி நமது உடம்பில் சேரும் விஷத் தன்மைகளையும் நீக்கும். ஒவ்வொருவரின் உடல்வாகுக்கு தகுந்தாற்போல் எந்த எண்ணையை தேய்த்து குளிக்கலாம் என்பதை ஆயுர்வேதம் கூறுகிறது. அதை அறிந்து உங்களுக்கேற்ற எண்ணையை தேய்த்துக் குளிக்கலாம்.

இன்றைக்கு சோப்பு போட்டு குளிக்காத மனிதர்களே இல்லை என்று சொல்லலாம். சோப்பு இல்லை என்றாலும் அந்த தன்மை உடைய ஷாம்புவோ அல்லது பவுடரோ தேய்த்தும் குளிக்கின்றனர். அதற்கு பதிலாக தேன், பால், கற்றாழைச்சாறு கலந்த கலவையை உடலில் தேய்த்துக் குளிக்கலாம்.

இது அழகு தருவதோடு… உடம்பில் உள்ள அழுக்கையும் நீக்கிவிடும். இந்த கலவையை பயன்படுத்த முடியாதவர்கள், சிறுபயறு, கடலை மாவு, தேன் பயன்படுத்தியும் குளித்தால் சருமம் மெருகேறும். அழகு என்றால் அதில் தலைமுடிதான் மிக முக்கியமாக கருதப்படுகிறது. அதற்காக இப்போதெல்லாம் டை அடிக்கின்றனர் பலர்.

டை அடிப்பதற்கு பதிலாக 100 கிராம் மருதாணி தூள், 20 கிராம் நெல்லிக்காய் தூள் ஆகியவற்றுடன் சிறிதளவு தண்­ர் சேர்த்து ஊற வைக்கவும். காலையில் முடியில் தேய்த்து அரை மணி நேரம் கழித்து கழுவினால் அல்லது குளித்தால் நரையை போக்க இது உதவும்.

கண்ணுக்குத் தெரியாத உயிருள்ள பொருள்தான் பொடுகுக்கு காரணம். சீப்பு, டவல் ஆகியவற்றை அடிக்கடி சுடுநீரில் கழுவி பயன்படுத்தவும். அடிக்கடி எண்ணை தேய்த்து தலைமுடியை அலசவும். ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடவும்.

இன்றைக்கு நடுத்தர வயதுள்ளவர்களில் பெரும்பாலும் டை அடிக்க ஆரம்பித்துள்ளனர். இதனால் சீக்கிரத்தில் அவர்களுடைய தலைமுடி நரைத்து பஞ்சு மாதிரி ஆகிவிடும். இதற்கு காரணம் அமோனியா சேர்த்த டை தான் காரணம். கறுப்பு நிறம் கொடுக்கும் டைகளில் தீமைகள் அதிகம். புதிய முடிகள் ஆரோக்கியமாக வளர்வதை இது தடுக்கும். டைக்கு பதில் கண் மையை பயன்படுத்தி முடியை கறுப்பாக்கலாம்.

நிறைய காய்கறிகள் சாப்பிடுவோருக்கு சருமம் பளபளப்பாக இருக்கும். இதனால் அவர்கள் எப்போதும் அழகாக இருப்பார்கள். கேரட், கருணைக்கிழங்கு, வெங்காயம், கீரை, புடலங்காய் இதெல்லாம் சாப்பிட்டால் உடல் வனப்பு கூடும்.

உடல் மெலிந்தவர்கள் குண்டாக மாறுவதற்கு பல முயற்சிகளை எடுப்பதற்கு பதில்… 101 நாளில் எளிதாக குண்டாகலாம்.

50 கிராம் வெந்தயத்தை வேக வைத்து… அதனுடன் ஒரு மேசைக்கரண்டி நெய், வெல்லம் சேர்த்து…. 101 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடலில் ஈஸ்ட்ரோஜென் அதிகரித்து உடம்பு குண்டாகிவிடும். ஈஸ்ட்ரோஜென்னை அதிகரிக்கும் சக்தி வெந்தயத்துக்கு உண்டு.

குண்டான உடம்புடன் கஷ்டப்படுபவர்கள், உடல் மெலிய… 50 கிராம் கொள்ளை வறுத்து… பொடியாக்கி தினமும் சாப்பிடவும். இது உடலில் உள்ள தண்ணீ­ரை நீக்கி உடல் எடையை குறைத்துவிடும். உங்களுடைய உடல் சரியான நிலைக்கு வந்தவுடன் கொள்ளு சாப்பிடுவதை நிறுத்திக் கொள்ளலாம். அல்லது தொடர்ந்து சாப்பிட்டாலும் உடலுக்கு நல்லதே.

விஜய் சேதுபதியின் ஆரஞ்சு மிட்டாய்..



ஆரஞ்சு மிட்டாய் என்ற புதிய படத்தை தயாரித்து நடிக்கிறார் விஜய் சேதுபதி.

தமிழ் சினிமாவில் வெற்றி நாயகனாக வலம் வரும் விஜய் சேதுபதியின் பண்ணையாரும் பத்மினியும், ரம்மி ஆகிய படங்கள் முடிந்து ரிலீஸுக்கு தயாராக உள்ளன.

பண்ணையாருக்கு பிப்ரவரி 7 ம் திகதி குறிக்கப்பட்டிருக்கிறது.

இவை தவிர இடம் பொருள் ஏவல், புறம்போக்கு போன்ற படங்கள் கைவசம் இருக்க ஆரஞ்சு மிட்டாய் என்ற புதிய படமும் இவரது டைரியில் சேர்ந்துள்ளது.

இதன் விசேஷ செய்தி என்னவென்றால் படத்தை விஜய் சேதுபதியே தயாரிக்கிறார்.

டுவிட்டரில் விளையாடிய விஜய் - தனுஷ்



டுவிட்டரில் ஜாலியாக விளையாண்டு விஜய் மற்றும் தனுஷ் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளனர்.

சமீபத்தில் தனுஷ் தனது சமூக வலைதளப் பக்கத்தில், இளையதளபதி விஜய்யுடன் தான் ஜாலியாக ஆடிப்பாடி பொழுது போக்குவதாகவும் கூடவே ‘ஐ லவ் யூ ப்ரோ’ என்றும் ஒரு ஸ்டேட்டஸை தட்டிவிட்டுள்ளார்.

இதைப்பார்த்த ரசிகர்கள் உடனே தனுஷிடம் அப்படியென்றால் விஜய்யை எங்களுக்கு ஒரு ‘ஹாய்’ சொல்லச்சொல்லுங்கள் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.

சில நிமிடங்களில் தன்னுடன் விஜய்யும் இணைந்து நிற்கும் படத்தை வெளியிட்டுள்ளார் தனுஷ்.

அதில் தனுஷின் பின்பக்கம் நிற்கும் விஜய், ரசிகர்களுக்கு ஹாய் சொல்வது மாதிரி இருந்தது. அதன் கீழே, உங்களைப்போல பல ரசிகர்கள் கேட்டதற்கு இணங்க இளையதளபதி இப்போது உங்களுக்கு லைவ் ஆக ஹாய் சொல்கிறார் என ஸ்டேட்டஸும் போட்டுள்ளார் தனுஷ்.

‘வா’ என மாறிய அருண் விஜய்யின் ‘டீல்’..!



அருண் விஜய் நடிக்கும் ‘டீல்’ படத்தின் தலைப்பு மாற்றப்பட்டுள்ளது.

‘தடையற தாக்க’ படத்திற்குப் பிறகு அருண் விஜய் நடிக்கும் படம் ’டீல்’.
சிவஞானம் இயக்கும் இப்படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக கார்த்திகா நாயர் நடிக்கிறார்.

சுறுசுறுப்பாக நடந்து வந்த இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிந்து, இப்போது போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் நடந்து வருகின்றன.

இந்நிலையில் 'டீல்' என்ற படத்தின் தலைப்பினை 'வா' என்று மாற்றிவைத்துள்ளனர்.
தலைப்பு தமிழில் இல்லை என்பதால் இத்தலைப்பினை மாற்றியுள்ளதாக தயாரிப்பாளர் தரப்பில் கூறியுள்ளனர்.

தமன் இசையமைத்திருக்கும் இப்படம் விரைவில் வெளியாகவிருக்கிறது.