Sunday, January 26, 2014

பட்டதாரிகளுக்கு பாங்க் ஆப் இந்தியாவில் பல்வேறு பணி வாய்ப்புகள்..!


பாங்க் ஆப் இந்தியாவில் காலியாக உள்ள Attendant, Office Asst, Counsellor & Faculty பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை: 09

துறைவாரியான காலியிடங்கள் விவரம்:

01. Member of faculty – 03

02. Office Assistant – 03

03. Attendant – 02

04. Counsellor (F.L.C.)- 01


வயது வரம்பு:

01 . Counsellor (F.L.C.) பணிக்கு 65க்குள் இருக்க வேண்டும்..

02 . மற்ற அனைத்து பணிகளுக்கும் 30க்குள் இருக்க வேண்டும்.

 

கல்வி தகுதி:

01.Member of Faculty பணிக்கு MSW/M.A. in Rural Development/ M.A.in Sociology/ Psychology/ B.Sc. (Ag.)/ B.A. with B.Ed. கற்பிக்கும் திறனுடன் கணினி அறிவும் பெற்றிருக்க வேண்டும்.

02. Office Attendant பணிக்கு BSW/ BA/ B.Com) ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். கணினி அறிவும் பெற்றிருக்க வேண்டும்.

03. Attendant பணிக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

04. Counsellor பணிக்கு வங்கி துறையின் கிராமப்புற கிளைகளில் கடன் துறை வங்கி அதிகாரியாக பணியாற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: 


நேர்முக செயல்திறன் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:

Bokaro Zonal Office, E-17,

First floor, City Centre,

Sector – 4, B.S. City, Bokaro,

Pin – 827004 (Jharkhand)

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 30-01-2014

நேர்காணல் நடைபெறும் தேதி: 08-02-2014

மேலும் விண்ணப்பிக்கும் முறை உள்ளிட்ட முழுமையான விவரங்கள் அறிய www.bankofindia.co.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

'' ஐ '' படத்தில் வில்லன் யார் தெரியுமா..?



சினிமாவை அதிகம் எட்டி பார்க்காத பிரபல நடிகரின் மகன் ஐ படத்தில் வில்லன்:-

விக்ரமை வைத்து ‘ஐ’ என்ற பெயரில் ஷங்கர் இயக்கி வரும் படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தில் உள்ளது.  மிகுந்த பிரம்மாண்ட பொருட் செலவில் எடுத்து வரும் இந்த படத்தில் சுரேஷ் கோபி, உப்பன் படேல் மற்றும் சினிமவை வெகு காலம் எட்டி பார்க்காத நடிகர் திலகத்தின் முத்த மகனான ராம்குமார் இன்னொரு முக்கிய வில்லனாக வலம் வருகிறார்.

இவர்களில் மூவரில் ராம்குமார்க்கு நடிப்பு அனுபவம் அதிகம் இல்லாதவர். பலவருடங்களுக்கு முன்பு அறுவடை நாள் என்ற படத்தில் தான் இவருடைய முதல் அறிமுகம், அதற்கு பிறகு நடிப்புக்கு முழுக்கு போட்டுவிட்டு அப்பாவுக்கு துணையாகவும் மற்றும் சிவாஜி புரோடக்க்ஷன்க்கு முக்கிய பொறுப்பாளர் பணியாற்றி வந்தார்.

ஷங்கர் அவர்கள் இது வரை காணாத ஒரு முகம் இந்த வில்லன் கதாபத்திரத்துக்கு வேண்டும் என யோசித்து வர சமிபத்தில் ராம்குமார் அவர்களை  ஒரு நிகழ்ச்சியில் பார்த்து இவர் கரெக்ட்டாக இருப்பர் என முடிவு செய்து இப்பொழுது நடித்தும் கொண்டு இருக்கிறார்.

சிவாஜி கணேசன் மகன் என்ற ஒரே காரணத்துக்காக புதுமுக நடிகர் போல் நடத்தாமல் இவருக்கு ஏக உபசரிப்பாம்.

விண்ணைத்தாண்டி வருவாயா வெற்றிபெறவில்லையா..?



கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் கடந்த 2010 ஆண்டு குடியரசு தினத்தில் வெளியான திரைப்படமான விண்ணைத் தாண்டி வருவாயா திரைப்படத்தின் இந்தி ரீமேக்கான ”ஏக் தீவானா தா” திரைப்படம் வணிக ரீதியாக வெற்றிபெறவில்லை என்று கூறப்பட்டுள்ளது.

ஆர்.எஸ்.இன்போடெயின்மெண்ட் மற்றும் எஸ்கேப் ஆர்டிஸ்ட் மோசன் பிக்சர்ஸ் இணைந்து தயாரித்த திரைப்படம் விண்ணைத் தாண்டி வருவாயா. லிட்டில் சூப்பர் ஸ்டார் சிம்பு மற்றும் திரிசா முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். தமிழில் இப்படம் பெரும்வெற்றியடைந்து பாக்ஸ் ஆபீஸ் ஹிட்டில் இணைந்தது.

தமிழில் இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இப்படம் ஹிந்தியிலும் ரீமேக் செய்யப்பட்டது. ஹிந்தியில் இப்படத்தினை பாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் தயாரித்திருந்தது.

தமிழில் இப்படம் வெற்றியடைந்திருந்த போதிலும், இதன் ஹிந்தி ரீமேக்கான “ஏக் தீவானா தா” திரைப்படம் வணிக ரீதியாக பெரும் தோல்வியைச்
சந்தித்ததாகக் கூறப்படுகிறது. இப்படத்தின் ஹிந்தி ரீமேக்கில் பிரதிக் பாபர் மற்றும் எமி ஜேக்சன் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர்.

விண்ணைத் தாண்டி வருவாயா படத்தின் இந்தி ரீமேக்கின் மூலம் கிடைத்த வருமானத்தைத் தன்னுடன் கௌதம் வாசுதேவ் மேனன் பங்கிட்டுக் கொள்ளாததால் அவரைக் கைது செய்யவேண்டும் என்று ஆர்.எஸ்.இன்போடெயின்மெண்ட் ஆர்.ஜெயராமன் வழக்குத் தொடர்ந்திருந்தார். இவ்வழக்கினை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட நீதிமன்றம், கௌதம் வாசுதேவ் மேனனை கைது செய்யக்கோரும் இவ்வழக்கினை வருகிற பிப்ரவரி 3 ஆம் தேதி வரை இடைக்காலத் தடைவிதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

உலக நாயகன் கமல்ஹாசன் பதம் விபூசன் விருதினைப் பெறவுள்ளார்..!



உலக நாயகன் பதம்ஸ்ரீ கமல்ஹாசன் இந்திய அரசின் இரண்டாவது மிக உயரிய விருதுகளில் ஒன்றான பதம் விபூசன் விருதினைப் பெறவுள்ளார்.

ஒவ்வொரு துறையிலும் மிகச் சிறந்த பங்களிப்புகளைச் செய்தவர்களைப் கௌரவிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினவிழாவினை ஒட்டி பத்ம விருதுகள் அறிவிக்கப்படும். அந்த வகையில் இவ்வாண்டிற்கான பத்மபூசன் மற்றும் பத்ம விபூசன் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இன்று மாலை பத்ம விருதுகளைப் பெறுவோர் குறித்த அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. இந்தியாவின் உயரிய விருதுகளில் இரண்டாவதாக மதிக்கப்படும் பதம் விபூசன் விருதினை உலக நாயகன் கமல்ஹாசன் பெறவுள்ளார்.

ஏற்கெனவே கடந்த 1990 ஆம் ஆண்டு உலக நாயகன் கமல்ஹாசனுக்கு பத்மஸ்ரீ விருது வழங்கிக் கௌரவித்தது இந்திய அரசு. பதம்ஸ்ரீ விருதுகள் இந்திய அரசின் உயரிய விருதுகளில் மூன்றாவது இடத்தையும், பத்ம விபூசன் விருதுகள் இரண்டாவது இடத்தையும், பாரத ரத்னா முதல் இடத்தையும் வகிப்பது குறிப்பிடத்தக்கது.