Tuesday, December 3, 2013

ஷூ அளவை அறிய ஒரு செயலி!

 

ஷூ அளவை கண்டறிந்து சொல்வதற்காக என்றே புதிய செயலி அறிமுகமாகி இருக்கிறது.

 நம் ஷூ அளவு நமக்கு தெரியாதா?


 இதற்கெல்லாம் ஒரு செயலியா ?

 என்று கேட்பதற்கு முன் இணையம் மூலம் ஷூ வாங்கவோ அல்லது வெளிநாட்டுக்கு சென்றிருக்கும் போது ஷூ வாங்கவோ முற்படும் நிலையை கற்பனை செய்து பாருங்கள்.

 உள்ளூரிலேயே ஷூக்களின் அளவு நிறுவனத்திற்கு நிறுவனம் மாறுபடுகிறது.

அப்படி இருக்க வெளிநாடுகளில் சொல்லவா வேண்டும்.


 ஒவ்வொரு நாட்டிலும் ஷூக்களுக்கு ஒரு அளவை பின்பற்றலாம் தானே.

 எனில் இணையம் மூலம் வெளிநாட்டு ஷூவை வாங்கும் போது உங்கள் ஷூவின் அளவு அந்நாட்டு கணக்கில் எந்த அளவு வருகிறது என தெரிந்து கொள்வது அவசியம் தானே.

அதை தான் இந்த செயலி செய்கிறது.

 இதில் உங்கள் ஷூ அளவையும் , உங்கள் நாட்டையும் தெரிவித்தால் , அதற்கேற்ப நீங்கள் ஷூ வாங்க உள்ள நாட்டில் அதன் அளவு என்ன என்று கணக்கிட்டு சொல்கிறது.

நீங்கள் வெளிநாட்டு ஷூவை வாங்கா விட்டாலும் கூட , அயல்நாட்டில் இருக்கும் நண்பரோ உறவினரோ உங்களுக்கு ஷூ வாங்கி பரிசளிக்க விரும்பினால் இந்த செயலி பயனுள்ளதாக இருக்கும் அல்லவா?

 இப்போதைக்கு ஐபோனுக்கான வடிவம் மட்டுமே இருக்கிறது.
பாருங்கள் , எப்படி எல்லாம் செயலிகளை உருவாக்குகின்றனர் !

செயலியை டவுண்லோடு செய்ய: 

 http://www.mercurydesign.in/convert-my-shoe-size/

காவல்துறையினரிடம் ஆவணம் இன்றி சிக்கினால் இனி ஒரு எஸ்எம்எஸ் போதும்!

காவல்துறையினரிடம் ஆவணம் இன்றி சிக்கும்போது எஸ்எம்எஸ் மூலம் இனி இன்சூரன்ஸ் பற்றிய முழு தகவலையும் பெறலாம்.


எல்லா வாகனங்களுக்கும் இன்சூரன்ஸ் மிக அவசியம். சில சமயங்களில் சர்வீஸ் விடும்போது, வண்டியை கழுவும்போது, ஜெராக்ஸ் எடுக்க மறந்துவிடும்போது வாகனங்களில் இன்சூரன்ஸ் பேப்பரை மீண்டும் எடுத்து வைக்க மறந்துவிடுகிறோம். இதுபோன்ற சமயங்களில் சாலைகளில் போக்குவரத்து காவல்துறையினரிடம் சிக்கினால், தர்மசங்கடமான நிலை ஏற்படும்.


இந்த பிரச்சனையை தீர்ப்பதற்காக இன்சூரன்ஸ் ஒழுங்குமுறை ஆணையம் (ஐஆர்டிஏ) அதிரடி திட்டத்தை கொண்டு வந்துள்ளது. இதுகுறித்து அதன் வாகனங்கள் காப்பீடு பிரிவு உறுப்பினர் ராம்பிரசாத் கூறியதாவது:-


வாகனத்துக்கு காப்பீடு செய்துள்ளவர்களின் விவரங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய ஆரம்பித்துள்ளோம். இதன் மூலம், வாகன எண்ணுடன் எங்களின் குறிப்பிட்ட எண்ணுக்கு எஸ்எம்எஸ் அனுப்பினால், அதன் காப்பீடு பற்றிய விவரம் முழுமையாக அனுப்பி வைக்கப்படும். இது சட்டப்பூர்வமானது என்பதால், காவல்துறையினரிடம் அதை காண்பிக்க முடியும்.


மேலும், விபத்து சமயங்களில் சம்பந்தப்பட்ட வண்டியின் எண் மட்டும் தெரிந்திருந்தால் போதும், அதன் மூலம் அதன் உரிமையாளர் பெயர், விவரம் ஆகியவற்றை இதே எஸ்எம்எஸ் மூலம் தெரியவரும்.


காவல்துறையினருக்கும் இத்திட்டம் மிக உதவியாக இருக்கும். விரைவில் இத்திட்டம் அமலுக்கு வர உள்ளது என்றார்.

கேழ்வரகு தோசை - சமையல்!

 

 தேவையானவை:


 கேழ்வரகு மாவு - 1 கப்,

ஆட்டிய உளுத்தம்பருப்பு மாவு - அரை கப்,

உப்பு - தேவைக்கேற்ப,

சின்ன வெங்காயம் - 15,

பச்சை மிளகாய் - 2,

சீரகம் - அரை டீஸ்பூன்,

எண்ணெய் - தேவையான அளவு.


செய்முறை:


கேழ்வரகு மாவு, ஆட்டிய உளுத்தம்பருப்பு மாவு, உப்பு ஆகியவற்றை ஒன்று சேர்த்து கலந்து மறுநாள் வரை பொங்க விடவும் (12 மணி நேரம்).


 வெங்காயத்தை பொடியாகவும் பச்சை மிளகாயை சிறு வளையங்களாகவும் நறுக்கவும்.


மறுநாள் காலையில் மாவை நன்றாக கலக்கி விட்டு அதில் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து, சீரகத்தை தேய்த்துப் போட்டு தோசைக்கல்லை காயவைத்து மெல்லிய தோசைகளாக ஊற்றி சூடாக இருக்கும்போதே பரிமாறவும்


. இதற்கு காரச் சட்னி ஏற்ற ஜோடி.

முதல்ல தம்பி.. அப்புறம் அண்ணன்?

 

'பிரியாணி' படத்தில் கார்த்தியை இயக்கிய வெங்கட்பிரபு, தனது அடுத்த படத்தில் சூர்யாவை இயக்கவிருக்கிறாராம்.


கார்த்தி, ஹன்சிகா, பிரேம்ஜி, ராம்கி உள்ளிட்ட பலர் நடிக்கும் 'பிரியாணி' படத்தினை இயக்கினார் வெங்கட்பிரபு. யுவன் இசையமைக்க, ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்திருக்கிறது. இப்படம் டிசம்பர் 20ம் தேதி வெளிவரவிருக்கிறது.


ஏற்கனவே படத்தின் பணிகள் முழுவதும் முடிவடைந்து விட்டதால், தனது அடுத்த படத்திற்கான கதை விவாதத்தில் ஈடுபட்டு இருக்கிறார் வெங்கட்பிரபு. இம்முறை, சூர்யாவை இயக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


வெங்கட்பிரபு கூறிய கதையை கேட்ட சூர்யா, நல்லாயிருக்கு இப்படத்தினை எனது டி2 நிறுவனம் மூலம் தயாரிக்கிறேன் என்று கூறிவிட்டாராம்.


'பிரியாணி' படத்தினைப் போலவே இப்படமும் ஒரு ஆக்‌ஷன் த்ரில்லர் கதை தானாம். லிங்குசாமி படத்தினை முடித்தவுடன், வெங்கட்பிரபு இயக்கும் படத்திற்கு தேதிகள் ஒதுக்கி கொடுத்திருக்கிறாராம் சூர்யா.