Wednesday, December 4, 2013

டென்ஷனே இல்லாமல் புதிய நாளை வரவேற்க...

காலையில் விழித்தெழும்போது, இன்றைய தினம் செய்ய வேண்டிய வேலைகள் என் னென்ன என்று சிந்தித்துக் கொண்டே எழுந்தால், "டென்ஷன்` தானாகவே தொற்றிக் கொள்ளும். இதைத் தவிர்க்க...


மூதல் நாள் இரவே, அடுத்த நாள் செய்ய வேண்டிய வேலைகள், தொடர்பு கொள்ள வேண்டிய நபர்கள், வாங்க வேண்டிய பொருட்கள் என முக்கியமான வேலைகளை ஒரு பேப்பரில் எழுதி விட்டு, நிம்மதியாகப் படுத்துத் தூங்க வேண்டும்.


அடுத்த நாள் எழும்போது, இதைப் பற்றிய சிந்தனையே இல்லாமல், இனிமையான சங்கீதம் கேட்க வேண்டும். பல் துலக்குவது, பால்/ காபி/ டீ குடிப்பது, காலைக் கடன்களை முடிப்பது உட்பட முதல் அரை மணி நேர வேலைகளை செய்து முடித்த பின், முதல் நாள் இரவு எழுதிய பட்டியலைப் பார்த்துக் கொண்டால், எந்தெந்த வேலைகளை முதலில் செய்வது என்ற தெளிவு பிறக்கும்.


சுறுசுறுப்பாய் வேலைகளைச் செய்யத் துவங்கலாம். இது அடிப்படை. இது தவிர, தினமும் உங்கள் மனதை, "ரிலாக்ஸ்` செய்து கொள்ள சில யோசனைகள்...


இனிமையான சங்கீதம் கேட்க அடிப்படைத் தேவையாக அமைவது, குறைந்தபட்சம் ஒரு கருவி. அது கேசட் பிளேயராகவோ, எம்.பி.,3யாகவோ, கம்ப்யூட்டராகவோ இருக்கலாம்; இனிமையான சங்கீதத்தை இதமாகக் கேட்கும் வகையில், அறைகளில் ஸ்பீக்கர் வசதி செய்து கொண்டால், மிக நல்லது.


நீங்கள் பயன்படுத்தும் அந்தக் கருவி எந்தப் பிரச்னையும் இல்லாமல், சரியாக இயங்குகிறதா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். சரியாக இயங்கவில்லை என்றால், அதைச் சரி செய்வதில் எவ்வித தாமதமும் இருக்கக் கூடாது.


செடி வளர்க்கலாம். தினமும் ஒரே ஒரு பூவாவது தரக் கூடிய வகையில், பூச்செடி வளர்க்கலாம். எந்தச் செடியையும், அதன் அருகில் அமர்ந்து பேசி, கொஞ்சி, தண்ணீர் விட்டு வளர்த்தால், நீங்கள் எதிர்பார்ப்பது போலவே, பூக்களைக் கொடுக்கும்.


அவற்றுக்கும் மனது உண்டு என்பதை மறந்து விடாதீர்கள். நாமே வளர்த்து, ஒரே ஒரு பூ பூத்தால் கூட, அதில் கிடைக்கும் மன நிறைவு, நமக்கு நிம்மதியைக் கொடுக்கும்.


கவிதை எழுதப் பிடிக்குமா? அடி மனதில் தோன்றும் எண்ணங்களை வெளிப்படுத்தும் கவிதையாக அது அமைய வேண்டும். கவிதை எழுதப் பழகினால், மன வளம் பெருகும்; எழுத்து வளம் பெருகும். உங்களிடம் உள்ள வலிமையான கருத்துக்கள், பலவீனமான கருத்துக்கள் என்னென்ன என்பதைப் பாகுபடுத்திப் பிரித்துப் பார்க்கும் அறிவு வளரும்.


பாட்டு பாடலாம், ஓவியம் வரையலாம், துணி தைக்கலாம், நகைகள் செய்யலாம். இது போன்ற ஆக்கப்பூர்வமான செயல்களில் ஈடுபடும்போது, உங்களிடையே உள்ள கலைத் தன்மை வெளிப்படும். இதுவே உங்களின் தனித் தன்மையை நிலைநாட்டும்.


ஒரு வேலை செய்து கொண்டிருக்கும்போது, தேவையற்ற விஷயங்களை மனதில் அசை போட வேண்டாம். உங்களுக்கு சம்பந்தம் இல்லாத விஷயங்களில் நாட்டம் செலுத் தும்போது வேலையில் கவனம் குறையும்.


அதுவே உங்களுக்கு ஆபத்தாய் அமைந்து விடும். முழுமையான பணி செய்த திருப்தி ஏற்படாது; மன நிம்மதி கெடும். மேலே சொல்லப்பட்டுள்ள விஷயங்கள் அனைத்தையும் பின்பற்றுவது மிகவும் கடினம் தான். வாழ்க்கையில் சந்தோஷமும் நிலைப்பதில்லை; துன்பங்களும் நிலைப்பதில்லை. இன்றைய தினத்தில் உள்ள கடமைகளையும், பணிகளையும் சீராகச் செய்யும்போது கிடைக்கும் நிம்மதியுடன், திருப்தியாக வாழப் பழகிக் கொள்ளுங்கள்.

விற்பனை பொருளாக மாறி வரும் தாய்ப்பால்!



தாய்ப் பாலுக்கு, பெரும் மகத்துவம் உண்டு. ஒவ்வொரு குழந்தைக்கும், பிறந்த முதல் ஆறு மாதங்களுக்கு கண்டிப்பாக தாய்ப்பால் கொடுக்க வேண்டும் என்பது, உலகம் முழுவதும் உள்ள இளம் தாய்மார்களுக்கு, டாக்டர்கள் கொடுக்கும் அறிவுரை.


விட்டமின், நோய் எதிர்ப்பு சக்தி, எளிதில் ஜீரணமாகும் சக்தி உள்ளிட்ட, குழந்தைகளுக்கு தேவையான, அனைத்து ஊட்டச்சத்துகளும் தாய்ப்பாலில் இருப்பது தான், டாக்டர்களின் இந்த அறிவுரைக்கு காரணம். தாய்ப் பாலுக்கு நிகரான சத்து, குழந்தைகளுக்கு வேறு எதிலும் கிடைப்பது இல்லை.


ஆனால், சமீபகாலமாக, அழகு கெட்டு விடும் என்பதற்காக, ஒரு சில தாய்மார்கள், குழந்தைகளுக்கு போதிய அளவு, தாய்ப்பால் கொடுப்பது இல்லை என்ற விமர்சனம், நம் நாட்டில் எழுந்துள்ளது. குழந்தை பிறந்த ஓரிரு மாதங்களிலேயே, புட்டிப் பாலை, அதன் பச்சிளம் வாய்களுக்குள் திணித்து விடுகின்றனர். இதுபோன்ற புட்டிப் பால் கலாசாரத்தில் வளரும் குழந்தைகள், எதிர்காலத்தில் நோய்களின் அமுத சுரபியாக திகழும் அபாயம் உள்ளதாக, டாக்டர்கள் கவலை தெரிவித்து வருகின்றனர்.


தாய்ப்பாலுக்கு உள்ள மகத்துவத்தை பயன்படுத்தி, அமெரிக்கா, பிரிட்டன் போன்ற மேற்கத்திய நாடுகளில், கல்லா கட்ட துவங்கியுள்ளன பல நிறுவனங்கள். பணத்தாசை பிடித்த சில பெண்கள், "பேஸ்புக்' போன்ற சமூக வலைதளங்கள் மூலமாக, தாய்ப்பாலை விற்பனை செய்வதாக, புகார்கள் எழுந்துள்ள நிலையில், அதை விட அதிர வைக்கும் நிகழ்வுகள், சீனாவில் அரங்கேறுகின்றன.


"நோய், மன அழுத்தம் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவர்கள், அறுவை சிகிச்சை செய்தவர்கள், ஊட்டச் சத்து குறைபாடு உள்ளவர்கள், தாய்ப்பால் அருந்தினால், அந்த பாதிப்புகளிலிருந்து குணமடையலாம்...' என்ற பிரசாரம், சமீபகாலமாக சீனாவில் முழு வீச்சில் நடந்து வருகிறது.


இதைப் பயன்படுத்தி, சென்ஜென் மற்றும் குவாங்டன் ஆகிய நகரங்களில் செயல்படும் சில நிறுவனங்கள், தாய்ப்பாலை விற்பனை பொருளாக்கி, செமத்தியாக காசு பார்க்க துவங்கியுள்ளன. அதிகாரப்பூர்வமற்ற வகையில் செயல்படும் இந்நிறுவனங்கள், இளம் தாய்மார்களுக்கு பண ஆசை காட்டி, அவர்களை, தங்கள் வலையில் வீழ்த்தி, அவர்களிடமிருந்து தாய்ப்பாலை பெறுகின்றன.


சம்பந்தப்பட்ட பெண்களின் வீடுகளுக்கு நேரடியாக சென்றோ அல்லது தங்கள் நிறுவனங்களுக்கு வரவழைத்தோ, தாய்ப்பாலை பெறும் நிறுவனங்கள், அதற்காக, அவர்களுக்கு, கணிசமாக பணம் கொடுக்கின்றன. சில பெண்கள், மாத கணக்கில், அந்த நிறுவனங்களுக்கு தாய்ப்பாலை கொடுக்கின்றனர்.


இதற்காக, ஒரு மாதத்துக்கு, ஒரு லட்சம் ரூபாய் வரை, அந்த பெண்களுக்கு கொடுக்கப்படுவதாக, பதற வைக்கும் செய்திகள் வெளியாகி வருகின்றன. இந்த பெண்களிடமிருந்து பெறும், தாய்ப்பாலை, பதப்படுத்தியோ அல்லது, "பிரஷ்'ஷாகவோ, வாடிக்கையாளர்களுக்கு வழங்குகின்றன இந்நிறுவனங்கள்.


செல்வத்தில் கொழிக்கும், பெரும் பணக்காரர்கள் தான், இந்த நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள். ஒரு சில ஓட்டல்களில், தாய்ப்பாலில் தயாராகும் இனிப்பு வகை மற்றும் ஐஸ்கிரீம் ஆகியவற்றை விற்பனை செய்கின்றன. சீனாவில் அரங்கேறும், இந்த அநியாயத்துக்கு, அங்குள்ள சமூக ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.


"தாய்ப்பால் என்பது, ஒரு வரம் போன்றது. ஒரு தாய், தன் குழந்தைக்கு கொடுக்க வேண்டிய சொத்து. தாய்மையின் அடையாளம். அதை, விற்பனை பொருளாக்கி, பெண்களை, கால்நடைகளாக மாற்றுவதை, ஒருபோதும் ஏற்க முடியாது...' என, அவர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளதை அடுத்து, சீன அரசு, தற்போது களத்தில் இறங்கியுள்ளது.

நான் இன்னும் கன்னிப்பையன்(?)தான்: சல்மான் கான் அதிரடி ஸ்டேட்மெண்ட்!



தான் இன்னும் கன்னித்தன்மையை இழக்காத ஆண் என்றும், தனது வருங்கால மனைவிக்காக அதனை பாதுகாத்து வருவதாகவும் 47 வயதாகும் பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கான் கூறியுள்ளர்.


பாலிவுட்டின் சர்ச்சை நாயகன் சல்மான் கான். மான்வேட்டை தொடங்கி அவர் ஆடாத வேட்டையே இல்லை எனலாம். அவர் குறித்த எத்தனை சர்ச்சைகள் வந்தாலும் பாலிவுட்டின் ஸ்வீட் ராஸ்கலாக சல்மான் இன்னும் கோலோச்சுகிறார்.


ஐஸ்வர்யா ராய் தொடங்கி சல்மானுடன் கிசுகிசுக்கப்பட்ட பாலிவுட் நடிகைகள் அநேகம்பேர் உண்டு. அதிலும் ஐஸ்வர்யா ராயுடனான காதல் முறிந்த பின்னர் ஒருநாள் குடிபோதையில் ஐஸ்வர்யா ராய் வீட்டுக்கு வெளியே நின்று சல்மான் கான் தகராறு செய்ததும், அதனைத் தொடர்ந்து தன்னை வீட்டுக்குள் அனுமதிக்காத ஐஸ்வர்யா ராயின் தாயாரை கண்டபடி திட்டியும், ஐஸ்வர்யா ராயுடனான நெருக்கமான உறவுகள் பற்றியும் தொலைபேசியில் பேசி சண்டை போட்ட டெலிபோன் உரையாடல்கள்,  2006 ல் மும்பை பத்திரிகைகளில் எழுத்துவடிவில் பிரசுரிக்கப்பட்டு, அப்போது பரபரப்பாக பேசப்பட்டது.


பாலிவுட் பிரபலங்களிடம் மும்பை நிழலுக தாதா தாவூத் இப்ராகிம் ஆட்கள் பணம் கேட்டு மிரட்டுவது குறித்த புகார் அதிகமாக வந்ததால், முக்கிய நடிகர், நடிகைகள், இயக்குனர்களின் தொலைபேசி உரையாடல்களை காவல்துறை ஒட்டுக்கேட்டது. அப்படி ஒட்டுக்கேட்டபோதுதான் சல்மான் கான், ஐஸ்வர்யா ராயுடன் பேசி சண்டைபோடும் உரையாடல்களும் பதிவாகி, அது வெளியே ஊடகங்களுக்கும் கசிந்துவிட்டது.


அந்த தொலைபேசி உரையாடல்கள் வெளியான பின்னர் சல்மான் கான் மீது பாலிவுட் வட்டாரத்தில் ஒருவித வில்லன் இமேஜே   உருவாகி விட்டது. இதனால் சிறிதுகாலம் தனது சினிமா உலக வாழ்க்கையில் சற்று சறுக்கலை சந்தித்தாலும், மீண்டும் அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்து இன்றும் பாலிவுட்டின் அசைக்க முடியாத ஹீரோவாக வலம் வருகிறார் சல்மான் கான். அதே சமயம் அவருக்கும், முன்னணி நடிகைகளுக்கும் இடையேயான் கிசுகிசுக்களுக்கு மட்டும் பஞ்சமே இல்லை.




இந்நிலையில் ஸ்டார் டி.வி.யில் வரும் 'காஃபி வித் கரண்' என்னும் நிகழ்ச்சியில் பங்கேற்ற சல்மான் கானிடம்,கரண் ஜோகர் நடத்திய கல கல பேட்டியில் சல்மான் கான், தான் இன்னும் கன்னித்தன்மையை இழக்காத ஆண் என்றும், தனது வருங்கால மனைவிக்காக அதனை பாதுகாத்து வருவதாகவும்  கூறியுள்ளர்.


அவர் இவ்வாறு கூறியதும் பேட்டி எடுத்த கரண் வியப்பு மேலிட, " அதாவது இன்னும் நீங்கள் கன்னித்தன்மையுடன் இருப்பதாக சொல்கிறீர்கள்... அப்படித்தானே..? " எனக் கேட்டதும், ஆமாம் என்று தலையை அசைக்கிறார் சல்மான்.


 "அப்படியானால் நீங்கள் பழகிய பெண்கள் யாருடனும் செக்ஸ் வைத்துக்கொள்ளவில்லை?!" என்று கிரண் வெடி சிரிப்புடன் கேட்க, "அவர்கள் அனைவரும் எனது நண்பர்கள்...அவ்வளவுதான்!" எனக் கூறுகிறார் சல்மான்.


தொடர்ந்து பேசும் சல்மான், " இரவில் நான் தனிமையாக தூங்குவதையே விரும்புகிறேன்.ஸ்டூடியோக்களில் இரவில் தங்கினால் எனது படுக்கையில் யாரும் இல்லை என்பதை காட்டும்விதமாக சோபாவில் கால்களை விரித்தபடி தூங்குகிறேன்" என்று கூறுகிறார்.


அடுத்த கேள்விக்கு நகரும் கரண், 3 பாலிவுட்  நடிகைகளின் பெயர்களை கூறி, இவர்களில் யாரை திருமணம் செய்துகொள்ள விரும்புகிறீர்கள்? என கேட்கிறார். அதற்கு "ப்ரீத்தி ஜிந்தா!" என பதிலளிக்கிறார் சல்மான்.


 
தொடர்ந்து, "உங்கள் நெற்றிபொட்டில் யாராவது ஒருவர் துப்பாக்கியை வைத்து, ஒரு 'கே' (Gay) ஆணுடன் இருக்க வேண்டும் என்றால் யாரை தேர்வு செய்வீர்கள்?" என்ற கேள்விக்கு பதிலளித்த சல்மான், "இல்லை..முதலில் அப்படி ஒரு துப்பாக்கி எப்போதுமே செய்யப்படாது" என்று கூறிவிட்டு, பின்னர் அப்படி இருக்க வேண்டும் என்றால் கரணுடன் ( நிகழ்ச்சியை நடத்துபவர்) என்று சிரித்துக்கொண்டே பதிலளித்தார்.



 "நீங்கள் விரும்புவது என்ன...விரும்பாதது என்ன..?" என்ற கேள்விக்கு, "பிரச்னைகளில் சிக்கிக்கொள்வதை விரும்புகிறேன்; ஆனால் அதிலிருந்து வெளிவரமுடியாமல் இருப்பதை விரும்பவில்லை" என பதிலளித்துள்ளார் சல்மான். 

‘வீரம்’ படத்தோட ஒன்லைன் கதை என்னான்னு தெரியணுமா?



அஜித், தமன்னா, சந்தானம், பாலா, விதார்த் மற்றும் பலர் நடிக்க தேவி ஸ்ரீ பிரசாத் இசையில், சிவா இயக்கி வரும் ‘வீரம்’ படம் பொங்கலுக்கு வெளியாகிறது.இப்படத்தில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு அஜித் கிராமத்து கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இருந்தாலும் ‘மங்காத்தா’, ‘ஆரம்பம்’, படங்களைத் தொடர்ந்து இந்த படத்திலும் ‘நரைத்த’ தலை முடியுடன்தான் நடிக்கிறார்.


கிராமத்து கதைங்கறதால அண்ணன் தம்பி அஞ்சு பேருன்னு படத்தோட கதையும் கிராமத்துல இருக்கிற மாதிரி பாசமாவே அமைச்சிருக்காங்க.
படத்தோட கதை என்னன்னா, இப்படி அண்ணன் தம்பிகளான அஞ்சு பேருமே ஒருத்தருக்கொருத்தர் சளைச்சவங்க இல்லை, அராத்துன்னா அராத்து அப்படி ஒரு அராத்தாம். இப்படி கலாட்டாவானவங்களுக்கு மத்தியில தமன்னாவும், சந்தானமும் எப்படி வர்றாங்கன்றதுதான் படமேவாம்.


படம் ஃபுல்லாவே அஜித்துக்கு வேட்டி சட்டைதான் காஸ்ட்யூம். அவராவே விரும்பி நடிக்கிற கேரக்டர். படத்துல மருந்துக்குக் கூட பன்ச் டயலாக் கிடையாதாம்.நிச்சயமா வித்தியாசமான படமா இந்த ‘வீரம்’ படம் இருக்கும்னு சொல்றாரு டைரக்டர் சிவா…