Tuesday, December 3, 2013

மூளையைப் பாதிக்கும் 10 பழக்கங்கள்! ! ! !



1. காலையில் உணவு உண்ணாமல் இருப்பது...!


காலையில் உணவு உண்ணாமல் இருப்பவர்களுக்கு  ரத்தத்தில் குறைவான அளவே சர்க்கரை இருக்கும். இது மூளைக்குத் தேவையான சக்தியையும் தேவையான ஊட்டச் சத்துக்களையும் கொடுக்காமல் ஆக்கி, மூளை அழிவுக்குக் காரணமாகும்.


2.மிக அதிகமாகச் சாப்பிடுவது...!


இது மூளையில் இருக்கும் ரத்த நாளங்கள் இறுகக் காரணமாகி, மூளையின் சக்தி குறைவுக்குக் காரணமாகும்.


3. புகை பிடித்தல்...!


மூளை சுருகவும், அல்ஸைமர்ஸ் வியாதி வருவதற்கும் காரணமாகிறது.


4.நிறைய சர்க்கரை சாப்பிடுதல்...!


நிறைய சர்க்கரை சாப்பிடுவது, புரோட்டின் நமது உடலில் சேர்வதைத் தடுக்கிறது. இதுவும்மூளை வளர்ச்சிக்கு பாதிப்பாகிறது.


5. மாசு நிறைந்த காற்று...!


மாசு நிறைந்த காற்றை சுவாசித்தல், நமக்குத் தேவையான ஆக்ஸிஜனை நாம் பெறுவதிலிருந்து தடை செய்கிறது. மூளைக்கு ஆக்ஸிஜன் செல்லாவிட்டால், மூளை பாதிப்படையும்.


6.தூக்கமின்மை...!


நல்ல தூக்கம் நம் மூளைக்கு ஓய்வுகொடுக்கும் . வெகுகாலம் தேவையான அளவு தூங்காமலிருப்பத ு மூளைக்குநீண்டகா லப் பாதிப்பை ஏற்படுத்தும்.


7. தலையை மூடிக்கொண்டு தூங்குவது...!


தலையை மூடிக்கொண்டு தூங்குவது, போர்வைக்குள் கரியமிலவாயு அதிகரிக்க வைக்கிறது. இது நீங்கள் சுவாசிக்கும் ஆக்ஸிஜனை குறைக்கிறது. குறைவான ஆக்ஸிஜன் மூளையைப் பாதிக்கிறது.


8.நோயுற்ற காலத்தில் மூளைக்கு வேலை கொடுப்பது...!


உடல் நோயுற்ற காலத்தில் மிக அதிகமாக மூளைக்கு வேலை கொடுப்பதும், தீவிரமாகப் படிப்பதும் மூளையைப் பாதிக்கும். உடல் சரியாக ஆனபின்னால், மூளைக்கு வேலை கொடுப்பதே சிறந்தது.


9.மூளைக்கு வேலை கொடுக்கும் சிந்தனைகளை மேற்கொள்ளாமல் இருப்பது...!


மூளையை அதிகமாக உபயோகப்படுத்தும ் சிந்தனைகளை மேற்கொள்வதால், மூளையில் புதுப்புது இணைப்புகள்உருவா கின்றன. அதனால், மூளை வலிமையான உறுப்பாக ஆகிறது.


10. பேசாமல் இருப்பது...!


அறிவுப்பூர்வமான உரையாடல்களை மேற்கொள்வது மூளையின் வலிமையை அதிகரிக்கிறது.

பொன்மொழிகள்!


* துன்பங்களை பலர் பொறுத்து கொள்கின்றனர். ஆனால், அவமதிப்பை சகிப்பவர்கள் வெகு சிலர் தான்.


—தாமஸ். 



 * தவறுகளை ஒப்புக் கொள்ளும் தைரியமும், அதை திருத்திக் கொள்வதற்கான பலனும் தான் வெற்றிக்கான வழி


. —லெனின். 



 * பிறருடைய அன்புக்கு பாத்திரமாவதை விட பிறரது நம்பிக்கைக்கு பாத்திரமாவது பன்மடங்கு மேல்
.

—டொனால்டு. 



 * வற்றி போனால்தான், கிணற்றின் அருமை தெரியும்.


—பிராங்க்ளின். 



 * தொழில் இல்லாத கல்வி, நீரின்றி வாடும் தாவரத்தைப் போன்றது.


 — போவீ. 



 * வசந்தம் ஒரே நாளில் மலர்ந்து விடுவதில்லை. அதேபோல வாழ்வில், உயர்வும் ஒரே நாளில் கிட்டி விடாது.


—அரிஸ்டாட்டில். 



 * உன் அன்பின் தன்மைக்கு ஏற்றபடி உன் செயல்கள் இருக்கும்; உன் செயல்களுக்கு ஏற்றபடி உன் வாழ்வு இருக்கும்.


 —சாக்ரடீஸ். 



 * உற்சாகம் இல்லாத உள்ளங்களுக்கு சோம்பல் சரணாலயம்; மூடர்களுக்கு அது ஓய்வு நாள்.


—செஸ்டர்பீல்டு. 



 * பிறரை விட தான் புத்திசாலி என்று ஜம்பம் பேசுபவன் எளிதில் பிறரிடம் ஏமாந்து போவான்.


 —ஈசாப். 



 * கடமை உணர்வே உன் நேர்மையான வாழ்க்கைக்கு ஆதாரம்.


—ஹென்றி.

குட்டிக்கதைகள்!

ஒரு ஊரில் எலித்தொல்லை.


அதைப் பார்த்த ராஜா,'


 'ஒரு செத்த எலி கொண்டு வந்தால் பத்து ரூபாய் தரப்படும்,''என்று அறிவித்தார்.


மக்களும் நிறைய எலிகளைக் கொன்று பையில் போட்டு 


 அரண்மனையில் கொடுத்துப் பணம் பெற்றுச்சென்றனர்.


அரண்மனை துர்நாற்றம் எடுக்க ஆரம்பித்தது.


அரசன் உடனே செத்த எலியின் வாலைக் கொண்டு வந்தால் போதும் என்று அறிவித்தார்.


வாலைக் கொண்டு வந்து பரிசு வாங்கும் மக்களின் எண்ணக்கை நாளுக்கு நாள் கூடிக் கொண்டே இருந்தது.


அனால் எலித்தொல்லை குறையவில்லை.இது பற்றி அரசன் தீவிரமாக விசாரித்ததில்தெரிய வந்தது; 


பணம் கிடைக்குமே என்றுமக்களே வீட்டில் எலி வளர்க்க ஆரம்பித்து விட்டார்கள்! 

ஆரோக்கியமாக வாழ...!

 * தூங்கப் போவதற்கு முன், தினமும் கை, கால்கள், முகத்தை கழுவுங்கள்;
பற்களையும் சுத்தம் செய்யுங்கள்.

சிறிது நேரம் வாய்க்குள்
 தண்ணீரை வைத்து, நன்றாக வாயை கொப்பளியுங்கள்.


 * தினமும் நன்றாக தூங்குங்கள். மாதத்தில்
 ஒரு முறையாவது கண்ணாடி முன் நின்று, உங்கள் உடலை பாருங்கள்.
அப்படி பார்த்தால், உடலில் ஏற்படும் சுருக்கங்கள், படைகள்
போன்றவைகளை கண்டறியலாம்.

 * உணவில் பச்சை காய்கறிகளையும், பழ வகைகளையும் தேவையான
 அளவு சேருங்கள்.

 * முடிந்த அளவு வாகன
 பயணங்களை மேற்கொள்ளாதீர்கள்;
அதிகமான தூரம் நடந்து செல்ல முயற்சி செய்யுங்கள்.

 * தினமும் குறைந்தது, 50 முறை உட்கார்ந்து எழுவது நல்லது.
அப்படி செய்தால்
 இடுப்பு அழகுப்படும்; தொந்தியும், வயிறும் குறையும்.

 * குளிக்கும் போது எப்போதும் குதிகாலையும், கால் விரல்களையும்
 தேய்த்து கழுவுங்கள்.

 * படுக்கைக்கு அருகிலும், வேலை பார்க்கும் இடத்துக்கு அருகிலும், ஒரு பாட்டில்
 தண்ணீர் எடுத்து வைத்து கொள்ளுங்கள்.
தேவைப்படும் போதெல்லாம் தண்ணீர்
 குடியுங்கள்.

 * முளைவிட்ட கடலை,
சிறுபயறு போன்றவைகளை காலை உணவில்
 சேர்க்க வேண்டும்.

 * கை நகங்களை வெட்டி சுத்தம் செய்வதை, கடமையாக கொள்ளவும்.

 * உறங்கும் போது காட்டன் துணிகளை அணியுங்கள்.

 * அதிக சூடு, அதிக குளிர் உணவுகள் பற்களுக்கு கேடு பயக்கும் என்பதை நினைவில் வைத்துக்
 கொள்ளுங்கள்.

 * இரவு இனிப்பு பலகாரங்கள் சாப்பிட்டால், மறக்காமல் பற்களை சுத்தப்படுத்தி விடுங்கள்.

 * இரவில் அதிக நேரம்
 விழித்திருப்பதும், பகலில் தூக்கம்
 போடுவதும் ஆரோக்கியத்திற்கு ஏற்றதல்ல.

 * கொழுப்பு நிறைந்த
 எண்ணெயை உணவில் சேர்க்காதீர்கள்; அது, உடல் அழகுக்கும்,
ஆரோக்கியத்திற்கும் கேடு பயக்கும்.

 * தினமும் காலையில் டீயோ, காபியோ குடிப்பதற்கு
 முன், ஒரு பழம் சாப்பிடுவது நல்லது.

 * தினமும் காலையில், 10 நிமிடமாவது உடற்பயிற்சி செய்யுங்கள்.