Saturday, January 25, 2014

‘கோ-எட்’ நிர்வாண யோகா பள்ளி - இன்று தொடங்கியது..!

‘கோ-எட்’ நிர்வாண யோகா பள்ளி - நியூயார்க் நகரில் தொடங்கியது..!


அமெரிக்காவின் நியூயார்க் நகரில் முதல் முறையாக ஆண், பெண் இருபாலரும் சேர்ந்து நிர்வாணமாக யோகா பயிலும் பள்ளிக்கு நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது. இதுகுறித்து ஜோசி மற்றும் மோனிகா ஆகியோர் கூறுகையில்,ஓம், யோகா என்பது மனம் நிர்வாணத்தை நோக்கி பயணம் செய்யும் ஒரு ஆன்மீக பயணமாகும்.

 இன்றைய நவீன உலகில் இருபாலரும், ஈர்ப்பின் சக்தி வழியாக யோகாவில் பயணம் செய்து ஆன்மீக பரவசத்தை அடைய முடியும்.இதற்கான வழிமுறைகளை கற்றுக் கொடுக்கும் வகையில் புதிய பள்ளி தொடங்கப்பட்டுள்ளது. இங்கு பாலியல் உறவு வைத்துக் கொள்வதற்கு அனுமதி கிடையாது. பயிற்சியின் போது தங்களது தனித்தன்மையை பாதுகாத்து கொள்ளும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.”என்று அவர்கள் தெரிவித்தனர்

யோகா என்கிற உடல் மற்றும் மனப்பயிற்சி கலைக்கு தாயகம் இந்தியா. தற்போது யோகா, புத்த மதத்தின் வழியாக பல்வேறு நாடுகளுக்கும், பல்வேறு வடிவங்களிலும் பரவியுள்ளது. மேலும் யோகாவை கற்பிக்கும் மரபுவழி பள்ளிகளும் ஏராளமாக ஆசிய நாடுகளில் செயல்பட்டு வருகின்றன.

மேற்கத்திய நாட்டு மக்களும் யோகாவை பயில ஆர்வம் காட்டி வருகின்றனர். தற்போதைய வேகமான நவீன உலகத்தில் மன அமைதியையும், உடல் ஆரோக்கியத்தையும் ஒருங்கே கொடுக்கக் கூடிய கலையாக மேற்கு உலகில் யோகா கொடிக்கட்டி பறக்கிறது. அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் ஏராளமான டாலர்களை கொட்டிக் கொடுத்து இவற்றை கற்றுக் கொள்ள ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இந்நிலையில், அமெரிக்காவில் போல்ட் அன்ட் நேக்டு என்ற பெயரில் யோகா மையம் நடத்தி வரும் ஜோசி ஸ்வார்ஸ் மற்றும் மோனிகா வெர்னர் ஆகிய இரண்டு பேரும் சேர்ந்து, நியுயார்க் நகரில் முதல் முறையாக ஆண் பெண் இருபாலரும் ஒன்றாக சேர்ந்து பயிலும் நிர்வாண யோகா பள்ளியை தொடங்கியுள்ளனர். இதற்கு நகர நிர்வாகமும் அனுமதி வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்க்து. .

0 comments:

Post a Comment