Sunday, December 22, 2013

உறவுகள்….. உணர்வுகள்.....

“டீன் ஏஜ் பருவம்” ஒவ்வொருவரின் வாழ்விலும் மறக்கவே முடியாத மிக அழகான காலகட்டம்தான்.

துடிதுடிப்பு, பரப்பரப்பு, அலட்சியம், எந்த விஷயத்தையுமே மிகைப்படுத்துதல், ஆரவாரம், ஆர்ப்பாட்டம் என அமர்க்களமாயிருகும். அந்தப் பருவத்தில் அதற்கு எதிர்மாறான வலிகளும், ரணங்களும் தாக்குவது இயல்புதான்.

சுருக்கமாக சொல்லப்போனால் முரண்பாடுகளின் ஒட்டு மொத்த சங்கம்ம்தான் “டீன் ஏஜ்” பருவம்.

இந்தப் பருவத்தினரைக் கையாள்வது என்பது சாதார விஷயமல்ல. கம்பி மேல்நடப்பது போல் அதி ஜாக்கிரையுடன் இருக்க வேண்டியது அவசியம். டீன் ஏஜ் பருத்தினரின் மனநிலையை இந்த குட்டிக்கதை தெளிவாக விளக்கம் என நம்புகிறேன்.

ஒருவன் குரங்குகளை வளர்த்து வந்தான். தினமும் அவை சாப்பிட காலையில் நான்கு மாம்பழங்களையும் மாலையில் மூன்று மாம்பழங்களையும் கொடுத்து வாந்தான்.

ஒருநாள் அந்தக் குரங்குகளைப் பார்த்து “இனிமேல் உங்களுக்கு காலையில் மூன்று மாம்பழங்களும் மாலையில் நான்கு மாம்பழங்களும் தரலாம் என்றிருக்கிறேன்” என்றான்.

இப்படிச்சொன்னதுதான் தாமதம். “முடியாது. முடியவே முடியாது. இதற்கு நாங்கள் ஒரு போதும் ஒத்துக்கொள்ள முடியாது” என்று எல்லாக் குரங்களுகள் கத்த ஆரம்பித்துவிட்டன.

“கொஞ்சம் பொறுமையாகக்கேளுங்கள். காலையில் நான்கு மாலையில் மூன்று என்று வைத்துக் கொண்டாலும், காலையில் மொத்தம் உங்களுக்குக் கிடைக்கப் போவது ஏழு மாம்பழங்கள் தானே?

இதை ஏன் புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறீர்கள்… என்று எஜமான் விளக்கமளித்து முடிப்பதற்குள் அவை “வேண்டாம் வேண்டாம் எங்கள் முடிவை நாங்கள் மாற்றிக் கொள்வதாக இல்லை. முதலில் கொடுத்த முறைப்படியே கொடுங்கள்” என்று போராடி வெறி பெற்று, அந்த எஜமானரை சம்மதிக்க வைத்த பிறகு தான் ஓய்ந்தன.

இதே மனநிலைதான் டீன் ஏஜினருக்கும். முடிவைப் பற்றி அவர்களுக்கு அக்கறை இல்லை. அடுத்தவர் சொல்லும் கருத்தை ஆராய்ந்து அதில் இருக்கும் சாதக பாதகங்களைப் பிரித்துப் பார்க்கும் பக்குவம் இருப்பதில்லை. தான் பிடித்த முயலுக்கு மூன்றுகால் என்று பிடிவாதமா இருப்பார்கள்.

அடுத்தவர் சொல்லி விட்டார் என்பதற்காகவே, இவர் சொல்லி நாம் என்ன கேட்பது என்று நினைத்து வேண்டுமென்றே அதற்கு நேர்மாறாக செய்வார்கள்.

இவர்களை வலதுபக்கம் போகச் சொல்ல வேண்டும் என்றால் “இடது பக்கம் போ” என்று சொன்னால் போதும். காரியம் சரியாக நடந்துவிடும்.

அடுத்தது, இந்தக் குரங்குக்கூட்டத்தைப் போலவே ஒருவன் எதிர்க்க ஆரம்பித்தால் எல்லோரும் சேர்ந்து கொண்டுகூட்டத்தோடு கோவிந்தா போடுவது. இந்தக் குழு மனப்பான்மையின (Mass Mentality) எதிரொலிதான் கல்லூரிகளில் அடிக்கடி நடக்கும் ஸ்டிரைக், கலாட்டா போன்றவை.

இந்தக் கதையில் இன்னொரு உட்கருத்தும் பொதிந்துள்ளது. வாழ்க்கையின் முற்பகுதியில் கஷ்டப்பட்டுவிட்டு பிறகு சந்தோஷமாக வாழலாம் என்ற எண்ணம் மன முதிர்சி உடையவர்களுக்கு எழும். இப்போது கஷ்டப்படுவது பின்னால் கஷ்டப்படாமலிருப்பதற்குத்தான் என்ற பக்குவம் டீன் ஏஜ் பருவத்திற்குத் தோன்றாது.

இந்தக் குரங்குகள் எப்படி காலையிலேயே அதிகமா சாப்பிட்டு விடவேண்டும் என்று நினைகின்றனவோ அதே போல்தான் இப்போதே வாழ்க்கையின் எல்லா சந்தோஷங்களையும் அனுபவித்து விடவேண்டும் என்ற எண்ணம் இவர்கள் மனத்தில் ஆழப்பதிந்திருக்கும்.

“ஃபீயூச்சரைப் பத்தி யோசிச்சு பிரசன்ட் மறந்திராதே” என்று அதிமேதாவித்தனமாக தத்துவம் பேசுவார்கள். இதற்கு அத்தம் திருட்டுதம் அடிப்பது, பெண்களை கிண்டல் செய்வது, பெரியவர்களை எதிர்த்துப் பேசுவது தவறில்லை என்பதுதான்.

டீன் ஏஜினர் பேசும்போது கொஞ்சம் உற்றுக் கவனித்துப் பாருங்கள். ஒருவன் ஜோக்கடிப்பான் எல்லோரும் சிரிப்பார்கள். உடனே இன்னொருவனுக்குத் தன்னுடைய திறமையைக் காட்டி எல்லோரையும் தன் ஒரு கானா பாடலை எடுத்து விடுவான். உடனே எல்லோரும் கைதட்டுவார்கள்.

இது போராடித்து விட்டதா? அடுத்தகட்டம் சத்தமாய் சிரித்துப் பக்கத்தில் நடந்து போவோரை கதிகலங்கச் செய்வது, பஸ்சைத் தட்டி ஆர்ப்பாட்டம் செய்வது போன்ற நடவடிக்ககளின் மூலம் அடுத்தவரை திரும்பிப் பார்க்க வைத்து விடுவார்கள்.

நாய் குரைப்பது போல் சப்தம் எழுப்பும் ஹாரன்களை நம் பக்கதில் வந்து அடித்து பயமுறுத்துவார்கள். யாராவது “ஏம்பா ஒழுங்கா பார்த்துப் போகக்கூடாதா?” என்று நியாயமாய் கேள்வி எழுப்பினால் “ஏய், என்னா பெருசு, ஃபிலிம் காட்டற?” என்று எகிறுவார்கள்.

இதெல்லாம் தங்கள் ஈகோவை பூஸ்ட் அப் செய்து, உலகத்திலேயே நான் பெரிய ஆள், என்னை விட்டால் வேறு யாரும் கிடையாது என்று காட்டிக் கொள்ளத்தான்.

கூட்டத்திலிருக்கும் போது வீரம் காட்டுவார்கள். தனியாய் மாட்டிக் கொண்டால் அவ்வளவுதான்! பேய் முழி முழித்து “ஸாரி தலைவா” என்று ஜகா வாங்கி விடுவார்கள்.

இது போல் டீன் ஏஜினரின் சாகசங்களையும் குணநலன்களையும் அடுக்கிக் கொண்டே போகலாம். மேற்சொன்னதெல்லாம் சிறுதுளிதான். இவற்றையெல்லாம் நான் குற்றச் சாட்டுகளாக சொல்லவில்லை. இந்த சேஷ்டைகள் எல்லாம் இல்லையென்றால் ஏதோ கோளாறு என்று அர்த்தம்.

‘டீன் ஏஜினரின் குணங்களை நாம் தெளிவாகப் புரிந்து கொண்டால்தான், அவர்களை எப்படிக் கையாள்வது என்பதை உணர முடியும்.

குழந்தை வயிற்றில் இருக்கும்போதே, பிறந்த குழந்தை இரவில் அழும். நம்மைத் தூங்கவிடாமல் செய்யும் என்பதை தாய் புரிந்து கொண்டு, தூக்கத்தைக் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைத்துக் கொண்டு தயாரகிவிடுகிறாள்.

அதேபோல்தான் டீன் டீஜ் பருவத்தை அடையும்போது நம் குழந்தை இப்படி இப்படி நடந்து கொள்வான், அவன் மனநிலை இப்படித்தான் இருக்கும் என்பதை முதலிலேயே பெற்றோர் உணர்ந்து கொண்டு விட்டால், அந்த சமயத்தில் அவர்களை அழகாகக் கையாண்டு விடலாம்.

டீன் பருவத்தில் உங்கள் குழந்தையின் மனது கடல் போல பெருத்த ஆரவாரத்துடன் இருக்கும். அவர்கள் எப்போதும் சத்தம் போட்டுச் சிரிப்பது, ரேடியோவை, டீவியை சப்தம் அதிகமாய் வைப்பது போன்றவற்றிற்கெல்லாம இந்த மனநிலைதான் காரணம்.

தங்களின் மன இரைச்சலைத்தான் இதன் மூலம் வெளிப்படுத்துகிறார்கள். அது உங்களுக்கு எரிச்சல் மூட்டினாலும், பக்குவமாய் சொல்லித்தான் மாற்றி முயல வேண்டும்.

அதிக சத்தத்தினால் அக்கம்பக்கதிலுள்ள எவருக்கு எவ்வளவு தொந்தரவு, உன் காதிற்கு எவ்வளவு கேடு என்ற ரீதியில் பேசினால் நிச்சயமாய் இந்தப் பிரச்சனையைத் தீர்த்து விடலாம்.

நான் ஏற்கனவே சொன்னது போல இந்தப் பருவத்தினருக்கே உரிய குணம் ஈகோ, “நான்” “தன்னுடைய” என்ற நினைப்பு இவர்களுக்கு அதிகமாயிருக்கும். கத்தியை கொல்லவும் பயன்படுத்தலாம் என்பது போல் இவர்களுடைய ஈகோவை ஆக்கப்பூர்வமாகப் பயன்படுத்தலாம்.

அவர்களை அருகில் அமர வத்துப்பேசுங்கள். “உனக்கு என்ன வேண்டும்? உன்னை எல்லோரும் கவனிக்க வேண்டும் அவ்வளவு தானே இதற்கு ஏன் இப்படி பஸ்ஸைத் தட்டிக் கூச்சல் போடுகிறாய்? இதனால் மற்றவர்களின் எரிச்சலைத்தானே சம்பாதித்துக்கொள்கிறாய்? இந்த சக்தியைப் பயன்படுத்தி பாட்டு கற்றுக் கொள், மேடையில் கச்சேரி செய், புகழுக்குப் புகழ், பணித்திற்குப் பணம். என்ன…?” அப்படிப் பேசிப் பாருங்கள்.

நிச்சயமாய் ஏதாவது ஒரு துறையில் உங்கள் பிள்ளை சாதித்துக் காட்டுவான். ஆரம்பத்தில் தன்னை எல்லோரும் கவனிக்க வேண்டும். என்பதற்காகவே ஆரம்பித்தாலும் போகப் போக இந்த கலைகளே அவன் மனதிலிருக்கும் அகங்காரத்தைத் துடைத்துப் போடும்.

ஊரை அழிக்கும் பெரிய வெள்ளத்தை மடைதிருப்பி விட்டு பலருக்கும் பயனுள்ளதாக எவ்வளவு எளிதில் நீங்கள்மாற்றி விட்டீர்கள் பார்த்தீர்களா?

டீன் ஏஜ் பிள்ளைகளின் பெற்றோர் அடிக்கடி சொல்லும் “வார்த்தை வயித்தில நெருப்பைக் கட்டிக்கிட்டிருக்கேன்” என்பது தான். காரணம்? இந்த வயதில் வரும் இன்ஃபார்ச்சுவேஷன்.

கனி ஜோதிடம் தெரியுமா...........

கிளி ஜோதிடம் தெரியும் அது என்ன கனி ஜோதிடம் என்கிறீர்களா?
மேலை நாட்டில் இப்பொழுது பரபரப்பாக உலவி வருவது கனி ஜோதிடம். நாம் ஒருவரின் ராசி நட்சத்திரத்தைக் கொண்டு ஒருவரைப் பற்றிக் கணிப்பது போல் உங்களுக்குப் பிடித்தமான கனியைக் கொண்டு உங்கள் குணத்தைக் கணிப்பதுதான் இந்த ஜோதிடம்.

கீழே பல்வேறு கனிவகைகளும் அவற்றை விரும்புபவர்களின் பொதுவான தன்மைகளும் கொடுக்கப்பட்டுள்ளன. உங்களுக்குப் பிடித்த பழம் என்ன பலன் பொருந்துகிறதா என்று பார்த்துக்கொள்ளுங்களேன்!!

மாம்பழப்பிரியரா நீங்கள்?

அப்படியானால்....நீங்கள் கொஞ்சம் தீவிரமான ஆசாமி. உங்களுக்கு என்றுள்ள விருப்பு வெறுப்புகளை ஒருபோதும் மாற்றிக்கொள்ள மாட்டீர்கள். உங்களை மாற்ற முயல்வதோ உங்கள் மீது தாக்கத்தை ஏற்படுத்துவதோ மிகவும் கடினமான விஷயம். உங்களுக்கென்று மாற்றமுடியாத நிலையான எண்ணங்கள் இருக்கும். எந்தச் சூழ்நிலையையும் உங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைக்க விரும்புவீர்களே தவிர சூழ்நிலைக்கேற்றவாறு நீங்கள் வளையமாட்டீர்கள். மூளைக்குச் சவால் விடும் பணிகளை அதிகம் விரும்புவீர்கள். கொஞ்சம்... கொஞ்சமென்ன நிறையவே பிடிவாதக்காரர் நீங்கள். ஆயினும் அன்பான துணையிடம் கன்றுக்குட்டி போல் பாசமாக இருப்பீர்கள். அன்பை வீட்டுக்குள்ளும் உங்கள் வலிமையையெல்லாம் வெளியிலும் காட்டுவது உங்கள் தன்மை.

உங்கள் விருப்பம் வாழைப்பழமானால்....

நீங்கள் அந்த வாழைப்பழம் போலவே மென்மையானவர். மிகவும் அன்பானவர். பிறருக்கு இரங்கும் மனமும் இதமாகப் பழகும் குணமும் நிறைந்தவர். ஆனால் உங்களுக்குக் கூச்சம் அதிகம். பிறருடன் கலந்து பழக மாட்டீர்கள். உங்களுக்கு தன்னம்பிக்கையும் கொஞ்சம் குறைவுதான். உங்கள் மென்மையான குணத்தினை சிலர் அவர்களுடைய லாபத்திற்குப் பயன்படுத்திக்கொண்டு விடுவர். கவனம் தேவை.
உங்கள் துணையை நீங்கள் மிகவும் பாராட்டிச் சீராட்டி வைத்துக் கொள்வீர்கள். உங்கள் இனிய குணத்தினால் உங்கள் குடும்ப வாழ்வில் எப்பொழுதும் அமைதியும் அன்பும் நிலவும்.

ஆரஞ்சுப் பழத்தை விரும்புபர்களுக்கு:

அதிக அளவு பொறுமையும்இ அதே அளவு திடமான மன உறுதியும் உள்ளவர்கள் நீங்கள். மெதுவாக நிதானமாக அதேசமயம் கடின உழைப்பின் மூலம் உங்கள் இலக்கை அடைவது உங்கள் நோக்கமாக இருக்கும். நீங்களும் கூச்ச சுபாவம் உடையவர்தான் என்றாலும் நம்பிக்கைக்குரிய நண்பராக இருப்பீர்கள். பொதுவாக சண்டை சச்சரவை விரும்பாதவர்களாகிய நீங்கள் மிகுந்த அழகுணர்ச்சியை உடையவர். உங்கள் வாழ்க்கைத்துணையை அதிகக் கவனத்துடன் தேர்ந்தெடுப்பீர்கள்; முழு மனதுடன் நேசிப்பீர்கள்.

ஆப்பிளை விரும்பும் அன்பர்களே!

நீங்கள் உடனடியாக முடிவெடுத்துத் தடாலடியாகச் செயல் படக்கூடியவர். அதிகமாகச் செலவு செய்பவர். மிகவும் வெளிப்படையாகப் பேசும் போக்கை உடையவர். ஆனால் எளிதில் உணர்ச்சிவசப் படுபவர். உற்சாகத்துடன் நடைபோடக்கூடியவராகிய நீங்கள் ஒரு குழுவிற்குச் சிறந்த தலைவராக விளங்கக் கூடியவர். எப்பொழுதும் முன்னேறிச் செல்வீர்களே தவிர சுணங்கிவிட மாட்டீர்கள். வாழ்வில் உங்களுக்கு இருக்கும் ஈடுபாட்டிலும் செயல்பாட்டில் காட்டும் ஆர்வத்திலும் உங்களுக்கு நிகர் நீங்களேதான். உங்கள் துணையின் உள்ளம் கவர்ந்தவர் நீங்கள்.

அன்னாசியை ரசித்து ருசிப்பவரா?

நீங்கள் எந்த விசயத்தையும் சட்டென ஆலோசித்து முடிவெடுத்து அதைவிட வேகமாகச் செயல்படுத்துவீர்கள். உங்களுக்கு அதனால் லாபம் ஏற்படும் எனில் எத்தனை முறை வேண்டுமானாலும் துணிவுடன் தொழிலை மாற்றிக்கொண்டிருக்கும் பழக்கமுடையவர் நீங்கள். எவ்வளவு பெரிய வேலையாக இருப்பினும் அதை அருமையாக ஒருங்கிணைத்து நிர்வாகம் செய்யும் திறமையில் உங்களுக்கு இணையே இல்லை என்று சொல்லலாம். தன்னிறைவுடனும் நேர்மையாகவும் இருப்பது உங்கள் தன்மை. எளிதில் யாரிடமும் நட்புக் கொள்ள மாட்டீர்கள் ஆனால் அப்படி நட்புக்கொண்டால் வாழ்நாள் முழுவதும் அந்நட்பைத் தொடர்வீர்கள். உங்கள் துணைவர் ஃ துணைவி உங்கள் ஒளிவு மறைவில்லாத குணத்தால் ஈர்க்கப் பட்டாலும் அன்பை வெளிக்காட்டத்தெரியாத உங்கள் தன்மை அவரை சலிப்படையச் செய்துவிட வாய்ப்புண்டு.

திராட்சை விரும்பிகளே!

உங்களைப்பற்றிப் பார்ப்போமா? நீங்கள் பொதுவாக மென்மையாகஇ அமைதியாகப் பழகக் கூடியவர். ஆனால் 'சாது மிரண்டால் காடு கொள்ளாது' என்ற பழமொழி உங்களைப் பற்றித்தான் எழுந்ததோ என்னவோ! கோபம் பொங்கி வரும் அதே வேகத்தில் அடங்கியும் விடுவது உங்கள் சிறப்பியல்பு. அழகினை ஆராதிப்பவர் நீங்கள். மலரோஇ ஓவியமோ குழந்தைகளோ மற்ற மனிதர்களோ எதுவானாலும் அழகாக இருந்தால் இரசிப்பதும் பாராட்டுவதும் உங்களுக்கு இயல்பானது. உங்கள் தோழமையான அணுகுமுறையாலும் வெளிப்படையாகப் பாராட்டும் குணத்தினாலும்இ உங்களுடைய நட்பு பலராலும் விரும்பப் படும். உங்கள் வட்டத்தில் நீங்கள் பிரபலமானவராக இருப்பீர்கள். நீங்கள் செய்யும் எந்தச் செயலாக இருந்தாலும் அதை ஏனோதானோ என்று செய்யாமல் இரசித்துச் செய்வீர்கள். வாழ்வை உற்சாகத்துடனும்இ புத்துணர்வுடனும் எதிகொள்வீர்கள். என்ன? உங்கள் வாழ்க்கைத்துணையும் அதே போல் இருக்கவேண்டும் என்று எதிர்பார்ப்பீர்கள். அப்படியில்லை என்றால் கொஞ்சம் மனத்தை வருத்திக்கொள்வீர்கள்... கொஞ்ச நேரத்திற்கு. பின் உங்கள் பழைய துள்ளல் உங்களைத் தொத்திக்கொண்டுவிடும். அவ்வளவுதான்.


இனி என்ன? உங்கள் நண்பர் அல்லது வாழ்க்கைத்துணைக்குப் பிடித்த பழம் என்ன என்று தெரிந்துகொண்டு அவருடைய தன்மையைப் பற்றிச் சொல்லி வியக்க வையுங்களேன்!!!!!!!

பலனுள்ள பன்னிரண்டு

நாம் மற்றவர்களிடம் பழகும் போது எப்படி நடந்து கொள்கிறோம், நமது உடல் பாஷைகள், பேசும் விதம் ஆகியவற்றைக்கொண்டே அவர்கள் நம்மை மதிப்பீடு செய்கிறார்கள். குறிப்பாக நாம் ஒரு வேலைக்குச் செல்லுமிடத்தில் உயர் அதிகாரிகளிடம் பேசும்போது நமது நடை உடை பாவனைகள் எப்படி அமைகின்றன என்பதைப் பொறுத்துத்தான் நமது வெற்றியும் தோல்வியும் அமையும். இது நாம் நடைபயில முயற்சிப்பது போலத்தான். உங்களைப் பின்பக்கமாக நடந்து போகச் சொன்னால் எவ்வளவு கடினமாக இருக்கும்? அது போலத்தான் மற்றவர்களுடன் பழகும்போது எப்படி அவர்களுடன் உறவாட வேண்டும் என்பதான பயிற்சியும். எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று அறிவதற்கு முன்னால் என்னவெல்லாம் கூடாது என்பதைத் தெரிந்துகொண்டால் பயனுள்ளதாக இருக்கும்.

நாம் என்னவெல்லாம் செய்யக்கூடாது? இதோ 12 மோசமான பழக்கங்கள்:

1. மற்றவர்களிடம் பேசும்போது அவர்களை நேராகப் பார்க்காமல் நிலத்தைப் பார்த்துப் பேசுவது. யாருடன் பேசுகிறோமோ அவர்களது கண்ணை நேராகப் பார்த்துப் பேசும்போதுதான் நமது வார்த்தைகளிலுள்ள உண்மையையும் நேர்மையையும் அடுத்தவருக்குப் புரியவைக்க முடியும். அதற்காக அவர்களை முறைத்துப் பார்க்கக் கூடாது.

2. நிற்கும்போதோ உட்காரும்போதோ நேராக இல்லாமல் வளைந்து கூனியிருப்பது. நிமிர்ந்த நடையும் நேர்கொண்ட பார்வையும் மற்றவர்களை உங்கள் பால் ஈர்க்க அவசியம். அது உங்களுக்கு உங்கள்மேல் உள்ள தன்னம்பிக்கையைக் காட்டும்.

3. முகத்தைச் சிடுசிடுவென வைத்துக்கொண்டு முறைப்புடன் பேசுவது. இது யாருக்குமே பிடிக்காது, உங்களுக்கு பேசப் பிடிக்கவில்லையானால் அவர்களுடன் பேசுவதைத் தவிருங்கள், பேசும்போது முகத்தில் ஒரு புன்னகையைத் தவழவிடுங்கள். அது உங்கள் தன்னம்பிக்கையைக் காட்டுவதோடு உங்களோடு உறவாடுபவருக்கும் ஒரு உற்சாகத்தை அளிக்கும்.

4. யாராவது புதியவர்களைப் பார்த்தால் முகத்தைத் திருப்பிக்கொள்வது. உங்கள் பெற்றோர்கள் உங்களது சிறு வயதில் புதியவாராக யாராவது இருந்தால் அவருடன் பழகாதே என்று சொல்லிக் கொடுத்திருக்கலாம். ஆனால் நீங்கள் இப்பொது வளர்ந்து விட்டிர்கள். யாருடன் பேசும்போதும் நீங்கள் என்ன பேசுவது என்று பேசத் திணறாமல் அவர்களுடன் சரளமாக உரையாடுவது உங்களது உறவுகளை மேம்படுத்தும். சந்திப்பவர்கள் பரிச்சயமில்லாதவராக இருந்தாலும் கூச்சமில்லாமல் பேசப் பழகுங்கள்.

5. நீங்கள் மற்றவர்களது மனதில் ஏற்படுத்தும் முதல் முத்திரைதான் உங்களோடு உறவாடுபவர்களது நினைவில் எப்போதும் நிலைத்து நிற்கும். அதை வைத்துத்தான் நீங்கள் எப்படிப்பட்டவர் என்பதை அவர்கள் தீர்மானிப்பார்கள். அதனால் முதல் சந்திப்பிலேயே மற்றவர்களைக் கவருமாறு நடந்துகொள்வது மிகவும் அவசியம்.

6. மிகவும் சங்கோஜத்துடன் அதிகமாகப் பேசாமலிருப்பது. வாழ்க்கையில் வெற்றியடைய வேண்டுமானால் மற்றவர்களிடம் உறவாடும்போது நன்கு சகஜமாகப் பேசத் தெரிய வேண்டும். எண்ணங்களைத் தங்குதடையில்லாமல் வெளிப்படுத்த வேண்டும். அதற்காக வளவளவென்று பேசி 'இவன் எப்போது வாயை மூடுவான்' என்று மற்றவர்கள் நினைக்கும்படி செய்யக் கூடாது. வார்த்தைகளை அளந்து சரியான வார்த்தைகளைத் தேர்ந்தெடுத்து, அழகாகப் பேச வேண்டும். அசந்தர்ப்பமாக ஏதாவது பேசி, தப்பான அபிப்பிராயத்தை ஏற்படுத்தக் கூடாது. முக்கியமாக நீங்களே உங்கள் பேச்சைக் கேட்க வேண்டும். மனதில் தோன்றுவதை யெல்லாம் கண்டபடி உளறக் கூடாது.

7. மற்றவர்கள் பேசும்போது அவர்கள் பேச்சில் கவனமில்லாமல் இருப்பது. அடுத்தவர்கள் பேசும்போது காது கொடுத்துக் கேட்க வேண்டும். அவர்கள் பேசும்போது எங்கோ கவனத்தைச் செலுத்திவிட்டு, அவர்கள், 'நான் சொல்வது சரிதானே' என்று கேட்கும்போது என்ன சொன்னார்கள் என்றுகூடத் தெரியாமல் விழிக்கக் கூடாது. அவர்களைப்பற்றி உங்களுக்கு ஏதும் அக்கறையில்லை, 'மனுஷன் மகா போர்' என்று நினைத்தால் ஏதோ பரவாயில்லை. ஆனால் முக்கியமான அலுவலக அதிகாரியிடமோ அல்லது மிகவும் வேண்டியவருடனோ பேசும்போது மனதை அங்கும் இங்கும் அலைய விடதீர்கள். கேட்கும் விஷயத்தில் கவனமாக இருங்கள்!

8. சொந்தக்காரர்களுடன் அல்லது நண்பர்களுடன் தொடர்பு வைத்துக் கொள்ளாமலிருப்பதைத் தவிர்க்க வேண்டும். எல்லோரிடமும் நல்ல உறவு வைத்திருக்க அவர்களுடன் எப்போதும் தொடர்பில் இருப்பது அவசியம். அவ்வப்போது அவர்களது பிறந்த நாள், மணநாள் இவைகளைக் குறித்து வைத்துக்கொண்டு, வாழ்த்துத் தெரிவித்து, அவர்களுடன் ஏதாவது வகையில் தொடர்பு வைத்திருக்க வேண்டும். அதற்காக தினமும் பேச வேண்டும் என்பது அவசியமில்லை. நீங்கள் ஒருவர் இருக்கிறீர்கள் என்பதை அவர்களுக்கு அவ்வப்போது நினைவு படுத்திக்கொண்டிருந்தால் சரி!

9. உற்சாகமில்லாமல் சோர்ந்திருப்பதைத் தவிர்க்க வேண்டும். நீங்கள் இருக்கும் சூழ்நிலை இறுக்கமாக இருக்கும்போது அந்த இறுக்கத்தைத் தளர்த்தி ஒரு நல்ல உற்சாகமான சூழ்நிலையை உருவாக்க வேண்டும். சூழ்நிலை மகிழ்ச்சிகரமாக இல்லையென்றால் அதற்குப் பிறர் மீது பழிபோடுவதில் பயனில்லை. நிலைமையை சரிப்படுத்த நீங்கள் ஏதாவது செய்யுங்கள்! நீங்கள் மகிழ்ச்சியாக இல்லையென்றால் அதைப்பற்றி யாருக்கும் அக்கறையிருக்காது. ஒரு வேளை உங்கள் அம்மாவைத் தவிர!

10. மற்றவர்களோடு கலகலப்பாய் இல்லாமல் உம்மனாமூஞ்சியாய் இருப்பது அடுத்தபடி தவிர்க்கப்பட வேண்டிய ஒன்று. உங்கள் நண்பர்கள், உறவினர்கள் நீங்கள் ஒரு ஜாலியான மனிதர் என்று எண்ணும்படியாக இருக்க வேண்டும். சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் மற்றவர்களோடு சேர்ந்து பேசி வாழ்க்கையை உற்சாகமாகச் செலவிடுங்கள்!

11. உங்களுக்குள்ள பயத்தையும் தயக்கத்தையும் வெளிக்காட்டாதீர்கள். முக்கியமாக, புதிய நண்பர்களைச் சந்திக்கும்போது, உயர் பதவியில் இருப்பவர்களுடன் பேசும்போது, நேர்முகத் தேர்விற்குச் செல்லும் சந்தர்ப்பங்களில் தன்னம்பிக்கையுடன் செயல்படுவது அவசியம்.

12. விடாப்பிடியாகத் தான் பிடித்த முயலுக்கு மூன்றேகால் என்று நினைப்பது. எப்போதும் திறந்த மனதோடு இருங்கள் உங்களைச் சுற்றிப் பல மதத்தினர், வெவ்வேறு ஜாதியைச் சேர்ந்தவர்கள், கொள்கையில் மாறுபட்டவர்கள் இருப்பார்கள். அவர்கள் உணர்வுகளுக்கு மதிப்புக் கொடுத்து நடந்து கொள்ளுங்கள். அவர்களுடன் மனக்கசப்போ அல்லது வேறுபாடோ இருந்தால் சுமுகமாகப் பேசித்தீர்த்துக் கொள்ளுங்கள்.


தசாவதாரம்


உயிரியல் கொள்கையாக விளங்கும் டார்வின் கோட்பாடு பலருக்கு தெரிந்திருக்கலாம். லூயி பாஸ்டர் என்ற விஞ்ஞானிதான் முதன்முதலாக மாற்று சிந்தனையைத் தூண்டினார். ‘‘ஒவ்வொரு வகையான உயிரினமும் திடீர் திடீரென படைக்கப்பட்டன என்பது நம்புகிறமாதிரி இல்லை. அற்ப உயிரியான பாக்டீரியாகூட அப்பா, அம்மா இல்லாமல் பிறக்காது. எல்லா உயிரினங்களின் தலைமுறைகளும் பெருகும் விதம் இதான்! அப்படி பார்க்கப் போனால், மனித இனத்த உருவாக்கிய முதல் அப்பா, அம்மா யார்? ஒவ்வொரு இனத்தின் முதல் தலைமுறை யாராக இருக்கும்? இதை நாம் கண்டறிய வேண்டாமா?’’ என்று கேள்வி எழுப்பினார்.

இதன்பிறகு பலர் மனதிலும் இதே கேள்வி எழுந்தது....
அடுத்த சில வருஷங்களில் பரிணாமக் கொள்கையை அறிவித்த சார்லஸ் டார்வின், பல்வேறு உயிரினங்களும் தோன்றுவதற்கு ‘இயற்கைத் தேர்வு’தான் ((Natural selection) காரணம் என்றார். அதற்கு அவர் கொடுத்த விளக்கம் எல்லோரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது!
அது- கடலில் இருக்கும் பாசி, மீன்கள், ஆமைகள், நத்தைகள், காடுகளில் இருக்கும் குரங்கு போன்ற உயிரினங்கள், பறவைகள் என எல்லாமே ஏதோ ஒருவகையில் மனிதர்களுக்கு மூதாதையர்கள் என்றால் எல்லோருக்கும் அதிர்ச்சி வராதா?

அப்படியானால் நாம் அவற்றை என்ன உறவுமுறை சொல்லி அழைப்பது? பாசி... கொள்ளுத் தாத்தா, பூண்டோடு அழிந்துவிட்ட டினோஸர்கள்... எள்ளுத் தாத்தா, குரங்கு... பெரியப்பா, சிம்பன்ஸி வகைகள்... மனிதனின் சித்தப்பா என்றெல்லாம் டார்வின் அடுக்கியபோது பலருக்கு கோபம் வந்துவிட்டது. ஆனால், உண்மை அதுதான் என்று காலப் போக்கில் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிற��


டார்வினின் தியரி இப்படிப் போகிறது... ‘பூமியின் சூழ்நிலை ஒவ்வொரு காலகட்டத்திலும் மாறிவிடுகிறது. பூமியில் இருந்த உயிரினங்களும் அந்த மாற்றங்களுக்கு ஏற்ப மாறிவந்தன. ஒரு அப்பா, அம்மாவுக்கு பிறக்கும் அடுத்த தலைமுறை உயிரினம் தன அப்பா, அம்மாவின் குணங்கள் கொண்ட நூறு சதவிகித ஜெராக்ஸ் காப்பியாக இல்லாமல், அதன் தாய் & தந்தை சந்தித்த புதிய பிரச்னைகளை எதிர்கொள்ளும் விதமாக குணத்திலும் உடல் அமைப்பிலும் மிகமிக நுட்பமான சில மாற்றங் களோடுதான் பிறக்கிறது. கால ஓட்டத்தில் புதிதுபுதிதாக எழும் இயற்கையின் சவால்களைத் தாக்குப் பிடிக்க முடியாத உயிரினங்கள் மடிந்து போகின்றன. அந்த புதிய சவால்களைத் தாக்குப் பிடிக்கக் கூடிய வகையில் புதிய உயிரினங்கள் உருவாகின்றன. லட்சக்கணக்கான வருஷங்கள்... ஆயிரக்கணக்கான தலைமுறைகள்... ஒவ்வொரு உயிரினமும் கோடிக்கணக்கான எண்ணிக்கையில் இருந்தன. ஏதோ ஒரு மூலையில் இருக்கும் ஒரு உயிரினத்துக்கு பிறந்த வாரிசு, அதேமாதிரி இல்லாமல் புதிய இனமாக தலை எடுத்தது.

பரிணாம வளர்ச்சியும் அப்படித்தான் என்பது டார்வின் கட்சி! காலப்போக்கில், அறிவியல்ரீதியாக இது நிரூபிக்கப்பட்டது. நம் உடலில் இருக்கும் அதே போன்ற மரபணுக்கள்தான் பாக்டீரியா, பாசிகள், வீட்டு விலங்குகள், காட்டு விலங்குகள் என எல்லாவற்றின் உடம்பிலும் இருக்கின்றன. ‘அப்படின்னா எல்லாரும் பங்காளிங்கதான். முதன்முதலாக ஆழ்கடலில் எட்டிப்பார்த்த நீலப்பச்சைப் பாசிதான் நமக்கு மூதாதையர். அது அடுத்தடுத்த தலைமுறைகளை உருவாக்கியது. இப்படித்தான் படிப்படியாக உயிர்கள் தோன்றுவது நிகழ்ந்தது’ என்றார் டார்வின்.

 அந்த ஒற்றை நீலப்பச்சைப் பாசியிலிருந்துதான் சகல உயிரினங்களும் தோன்றியதாக வைத்துக் கொள்வோம். அந்த முதல் பாசி எங்கிருந்து வந்தது ?. உயிர்கள் எதுவுமே இல்லாத சூழலில் அதன் வருகை எப்படி நிகழ்ந்தது ? அது எப்படி பெருகியது ? அதிலிருந்து விலங்கினங்கள் எப்படி தோன்றியிருக்கும்?’ என அடுக்கடுக்கான கேள்விகள். எழுந்தது .பல நிபுணர்கள் ஒவ்வொரு தியரியாக சொன்னார்கள் ஆனால், கடைசியில் ஓபாரின் என்ற ரஷ்ய விஞ்ஞானி சொன்னதான் உண்மை என்று ஏற்றுக்கொள்ளப்பட்டு இருக்கிறது. ‘வானத்திலிருந்து வந்த மின்னல், கடலுக்கடியில் சில ரசாயன மாற்றங்களைச் செய்தது. அதன் விளைவாக உயிர்களின் அடிப்படைப் பொருட்களான மூலக்கூறுகள் கிளம்பின. அதிலிருந்துதான் உயிர் தோன்றியது’’ என்றார் அவர்.

பிற்பாடு சிகாகோவைச் சேர்ந்த விஞ்ஞானி ஸ்டான்லி மில்லர், 1953ஆம் ஆண்டு இந்த தத்துவம் உண்மை என்று நிரூபித்தும் காட்டினார். மூடிய ஒரு குடுவயில் ஆதிக்காலத்தில் கடல் இருந்த சூழ்நிலையை உருவாக்கி, மின்சாரத்தின் மூலம் செயற்கை மின்னல அந்த குடுவைக்குள் ஏற்படுத்தினார். அதன் விளைவாக செயற்கைக் கடலின் அடியில் உயிர் ஏற்படுவதற்கான சூழ்நிலை உருவானது. கவனிக்கவும்! சூழ்நிலைதான் ஏற்பட்டது! புதிய உயிரே தோன்றிவிடவில்லை. அது மனிதனால் ஆகக்கூடிய காரியமும் இல்லை!.

உலகத்தில் உயிரினங்கள் தோன்றிய மொத்த வரலாற்றையும் சுருக்கி ஒரு வருஷம் என்கிற கற்பனை காலண்டருக்குள் அடைத்தால், பாசி தோன்றியது ஜனவரி முதல் தேதி... மனிதன் தோன்றியது டிசம்பர் முப்பத்தோறாம் தேதி! அதாவது அவன்தான் கடைசிக் குழந்தை | இப்போதுள்ள உயிர்களிலேயே பரிபூரணமான குழந்தை!

உயிரியல் கொள்கையாக விளங்கும் டார்வின் கோட்பாட்டுக்கும் திருமாலின் பத்து அவதாரங்களுக்கும் சம்பந்தம் இருக்கு என்றால் சிரிப்பீர்கள். எளிமையாக சொல்ல முடிகிறதா என்று பார்க்கிறேன்.

முதலில் ஒரு செல்லிலிருந்து கடலில் தோன்றிய முதல் உயிரினம் மீன் என்றால் இது மச்சாவதாரம். பிறகு நீரிலும் நிலத்திலும் வாழும் ஆமை, தவளை போன்றவை தோன்றியது - இது கூர்மாவதாரம். அதன் பின் நிலத்தில் மட்டும் வாழும் உயிரனமாக (பன்றி) வராகவதாரம். பின் நான்காவதாக மனிதனுமின்றி, மிருகமுமின்றி நரசிங்காவதாரம். ஐந்தாவதாக ஒரு குள்ளமனிதனாக வாமனாவதாரம். ( இதற்கு பிறகு வருவோம்). ஆறாவதாக, மனிதன் கொஞ்சம் விலங்குகளின் தன்மையுடன் கூடிய பரசுராமாவதாரம். ஏழாவதாக முழுமனிதனாக இராமாவதாரம். எட்டாவதாக குறும்பு செய்யும் மனிதனாக கிருஷ்ணாவதாரம். ஒன்பதாவது விவசாயம் பார்க்கும் மனிதனாக பலராமவதாரம்.

டார்வினுக்கு இந்து மதத்தில் உள்ள 10 அவதாரங்களைத் தெரிய வாய்ப்பு இல்லை. ஆரம்பத்தில் உயிரனங்கள் தண்ணீரில் தோன்றியது. பிறகு அதே உயிரினம் தண்ணீரிலும் நிலத்திலும் வாழும் தகுதி பெற்றது. அதன் பிறகு நிலத்தில் வாழும் விலங்குகள். அடுத்து படிப்படியாக அந்த விலங்குகள் வளர்ச்சி பெற்று குரங்காகி அதிலிருந்து மனிதன் தோன்றினான். மீனில் ஆரம்பித்து 5-வது அவதாரமாக வருவது வாமன அவதாரம். நான்கு அவதாரங்களை அடுத்து விடுபட்ட இந்த குள்ளமான வாமன அவதாரம்தான் - ''மிஸ்ஸிங் லிங்க்'' என்பது உயிரின வளர்ச்சிப் படிகளில் அடிக்கடி உபயோகிக்கப்படும் ஒரு சொல். குரங்கிலிருந்து மனிதன் தோன்றினான் என்று விஞ்ஞானம் ஒப்புக் கொண்டாலும் குரங்குக்கும் மனிதனுக்கும் இடையில் ஏதோ ஒன்று இருக்கிறது. அந்த மிஸ்ஸிங் லிங்க் எதுவென்று விஞ்ஞானிகள் அவ்வப்போது தலையை பிய்த்துக் கொள்கிறார்கள். ஆனால் குரங்குக்கும் மனிதனுக்கும் உள்ள உருவ ஒற்றுமையைப் பார்த்தால் விடுப்படவில்லை என்பது தெளிவாகுகிறது.

சமீபத்தில் அதுவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்றால் நம்புவீர்களா ? ஆம் கடந்த அக்டோபர் மாதம் விஞ்ஞானிகள் குள்ள மனிதனின் எலும்புக்கூடுகளை இந்தோனேஷியாவில் கண்டுபிடித்துள்ளார்கள். இந்த மனிதனின் உயரம் மூன்று வயது குழந்தையின் உயரம். இவர்கள் மண்டை ஓடுகள் ஒரு சாத்துக்குடி அளவே இருப்பதாக படங்கள் காட்டுகிறது. இந்த மனிதன் 18,000 வருடங்களுக்கு முன் வாழ்ந்தவர்கள் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். அவர்கள் கண்டுபிடிக்கபட்ட இடத்தில் கல்லினாலான ஆயுதங்கள், மற்றும் மிருகங்களின் எலும்புகூடுகளும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

இந்த மனிதனுக்கு Hobbit என்று பெயர் வைத்துள்ளார்கள். (Lord of the Rings என்ற படத்தில் வரும் குள்ள மனிதனின் பெயர் )