Sunday, December 22, 2013

கனி ஜோதிடம் தெரியுமா...........

கிளி ஜோதிடம் தெரியும் அது என்ன கனி ஜோதிடம் என்கிறீர்களா?
மேலை நாட்டில் இப்பொழுது பரபரப்பாக உலவி வருவது கனி ஜோதிடம். நாம் ஒருவரின் ராசி நட்சத்திரத்தைக் கொண்டு ஒருவரைப் பற்றிக் கணிப்பது போல் உங்களுக்குப் பிடித்தமான கனியைக் கொண்டு உங்கள் குணத்தைக் கணிப்பதுதான் இந்த ஜோதிடம்.

கீழே பல்வேறு கனிவகைகளும் அவற்றை விரும்புபவர்களின் பொதுவான தன்மைகளும் கொடுக்கப்பட்டுள்ளன. உங்களுக்குப் பிடித்த பழம் என்ன பலன் பொருந்துகிறதா என்று பார்த்துக்கொள்ளுங்களேன்!!

மாம்பழப்பிரியரா நீங்கள்?

அப்படியானால்....நீங்கள் கொஞ்சம் தீவிரமான ஆசாமி. உங்களுக்கு என்றுள்ள விருப்பு வெறுப்புகளை ஒருபோதும் மாற்றிக்கொள்ள மாட்டீர்கள். உங்களை மாற்ற முயல்வதோ உங்கள் மீது தாக்கத்தை ஏற்படுத்துவதோ மிகவும் கடினமான விஷயம். உங்களுக்கென்று மாற்றமுடியாத நிலையான எண்ணங்கள் இருக்கும். எந்தச் சூழ்நிலையையும் உங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைக்க விரும்புவீர்களே தவிர சூழ்நிலைக்கேற்றவாறு நீங்கள் வளையமாட்டீர்கள். மூளைக்குச் சவால் விடும் பணிகளை அதிகம் விரும்புவீர்கள். கொஞ்சம்... கொஞ்சமென்ன நிறையவே பிடிவாதக்காரர் நீங்கள். ஆயினும் அன்பான துணையிடம் கன்றுக்குட்டி போல் பாசமாக இருப்பீர்கள். அன்பை வீட்டுக்குள்ளும் உங்கள் வலிமையையெல்லாம் வெளியிலும் காட்டுவது உங்கள் தன்மை.

உங்கள் விருப்பம் வாழைப்பழமானால்....

நீங்கள் அந்த வாழைப்பழம் போலவே மென்மையானவர். மிகவும் அன்பானவர். பிறருக்கு இரங்கும் மனமும் இதமாகப் பழகும் குணமும் நிறைந்தவர். ஆனால் உங்களுக்குக் கூச்சம் அதிகம். பிறருடன் கலந்து பழக மாட்டீர்கள். உங்களுக்கு தன்னம்பிக்கையும் கொஞ்சம் குறைவுதான். உங்கள் மென்மையான குணத்தினை சிலர் அவர்களுடைய லாபத்திற்குப் பயன்படுத்திக்கொண்டு விடுவர். கவனம் தேவை.
உங்கள் துணையை நீங்கள் மிகவும் பாராட்டிச் சீராட்டி வைத்துக் கொள்வீர்கள். உங்கள் இனிய குணத்தினால் உங்கள் குடும்ப வாழ்வில் எப்பொழுதும் அமைதியும் அன்பும் நிலவும்.

ஆரஞ்சுப் பழத்தை விரும்புபர்களுக்கு:

அதிக அளவு பொறுமையும்இ அதே அளவு திடமான மன உறுதியும் உள்ளவர்கள் நீங்கள். மெதுவாக நிதானமாக அதேசமயம் கடின உழைப்பின் மூலம் உங்கள் இலக்கை அடைவது உங்கள் நோக்கமாக இருக்கும். நீங்களும் கூச்ச சுபாவம் உடையவர்தான் என்றாலும் நம்பிக்கைக்குரிய நண்பராக இருப்பீர்கள். பொதுவாக சண்டை சச்சரவை விரும்பாதவர்களாகிய நீங்கள் மிகுந்த அழகுணர்ச்சியை உடையவர். உங்கள் வாழ்க்கைத்துணையை அதிகக் கவனத்துடன் தேர்ந்தெடுப்பீர்கள்; முழு மனதுடன் நேசிப்பீர்கள்.

ஆப்பிளை விரும்பும் அன்பர்களே!

நீங்கள் உடனடியாக முடிவெடுத்துத் தடாலடியாகச் செயல் படக்கூடியவர். அதிகமாகச் செலவு செய்பவர். மிகவும் வெளிப்படையாகப் பேசும் போக்கை உடையவர். ஆனால் எளிதில் உணர்ச்சிவசப் படுபவர். உற்சாகத்துடன் நடைபோடக்கூடியவராகிய நீங்கள் ஒரு குழுவிற்குச் சிறந்த தலைவராக விளங்கக் கூடியவர். எப்பொழுதும் முன்னேறிச் செல்வீர்களே தவிர சுணங்கிவிட மாட்டீர்கள். வாழ்வில் உங்களுக்கு இருக்கும் ஈடுபாட்டிலும் செயல்பாட்டில் காட்டும் ஆர்வத்திலும் உங்களுக்கு நிகர் நீங்களேதான். உங்கள் துணையின் உள்ளம் கவர்ந்தவர் நீங்கள்.

அன்னாசியை ரசித்து ருசிப்பவரா?

நீங்கள் எந்த விசயத்தையும் சட்டென ஆலோசித்து முடிவெடுத்து அதைவிட வேகமாகச் செயல்படுத்துவீர்கள். உங்களுக்கு அதனால் லாபம் ஏற்படும் எனில் எத்தனை முறை வேண்டுமானாலும் துணிவுடன் தொழிலை மாற்றிக்கொண்டிருக்கும் பழக்கமுடையவர் நீங்கள். எவ்வளவு பெரிய வேலையாக இருப்பினும் அதை அருமையாக ஒருங்கிணைத்து நிர்வாகம் செய்யும் திறமையில் உங்களுக்கு இணையே இல்லை என்று சொல்லலாம். தன்னிறைவுடனும் நேர்மையாகவும் இருப்பது உங்கள் தன்மை. எளிதில் யாரிடமும் நட்புக் கொள்ள மாட்டீர்கள் ஆனால் அப்படி நட்புக்கொண்டால் வாழ்நாள் முழுவதும் அந்நட்பைத் தொடர்வீர்கள். உங்கள் துணைவர் ஃ துணைவி உங்கள் ஒளிவு மறைவில்லாத குணத்தால் ஈர்க்கப் பட்டாலும் அன்பை வெளிக்காட்டத்தெரியாத உங்கள் தன்மை அவரை சலிப்படையச் செய்துவிட வாய்ப்புண்டு.

திராட்சை விரும்பிகளே!

உங்களைப்பற்றிப் பார்ப்போமா? நீங்கள் பொதுவாக மென்மையாகஇ அமைதியாகப் பழகக் கூடியவர். ஆனால் 'சாது மிரண்டால் காடு கொள்ளாது' என்ற பழமொழி உங்களைப் பற்றித்தான் எழுந்ததோ என்னவோ! கோபம் பொங்கி வரும் அதே வேகத்தில் அடங்கியும் விடுவது உங்கள் சிறப்பியல்பு. அழகினை ஆராதிப்பவர் நீங்கள். மலரோஇ ஓவியமோ குழந்தைகளோ மற்ற மனிதர்களோ எதுவானாலும் அழகாக இருந்தால் இரசிப்பதும் பாராட்டுவதும் உங்களுக்கு இயல்பானது. உங்கள் தோழமையான அணுகுமுறையாலும் வெளிப்படையாகப் பாராட்டும் குணத்தினாலும்இ உங்களுடைய நட்பு பலராலும் விரும்பப் படும். உங்கள் வட்டத்தில் நீங்கள் பிரபலமானவராக இருப்பீர்கள். நீங்கள் செய்யும் எந்தச் செயலாக இருந்தாலும் அதை ஏனோதானோ என்று செய்யாமல் இரசித்துச் செய்வீர்கள். வாழ்வை உற்சாகத்துடனும்இ புத்துணர்வுடனும் எதிகொள்வீர்கள். என்ன? உங்கள் வாழ்க்கைத்துணையும் அதே போல் இருக்கவேண்டும் என்று எதிர்பார்ப்பீர்கள். அப்படியில்லை என்றால் கொஞ்சம் மனத்தை வருத்திக்கொள்வீர்கள்... கொஞ்ச நேரத்திற்கு. பின் உங்கள் பழைய துள்ளல் உங்களைத் தொத்திக்கொண்டுவிடும். அவ்வளவுதான்.


இனி என்ன? உங்கள் நண்பர் அல்லது வாழ்க்கைத்துணைக்குப் பிடித்த பழம் என்ன என்று தெரிந்துகொண்டு அவருடைய தன்மையைப் பற்றிச் சொல்லி வியக்க வையுங்களேன்!!!!!!!

0 comments:

Post a Comment