Sunday, December 22, 2013

மெல்போர்ன் - மழை..வெயில்..குளிர்...


மெல்போர்ன் - மழை..வெயில்..குளிர்...

மழை..வெயில்..குளிர்...

மெல்போர்ன் என்றாலே இம்மூன்றும் நினைவுக்கு வந்து ஒரு விதமான சுகத்தையும், சூட்டையும் உண்டுபண்ணும்.

இங்கு வாழ்ந்தவர்களுக்கும்,வாழ்பவர்களுக்கும் அதன் அர்த்தம் புரியும். பொதுவாக மெல்போர்ன் காலநிலை எப்போதும் ஒரு சீராக இருப்பதில்லை..ஒரு நாளில் ஆறு வானிலைகள் தோற்றம் காட்டும் ஒரு காலத்துப்பூங்கா..இப்பொது தண்ணீரை அரசியலும் இயற்கைத்தாயும் சரி பாதி பங்கெடுத்து தர முயற்ச்சிக்கின்றனவாம்...இயற்கைத்தாய் சரி..அரசியல்?

காலையில் அடிக்கும் வெயில்,சரி இன்று குளிர்சட்டை தேவையில்லைபோல என்று இங்கு(மெல்போர்ன்) வந்த தொடக்கத்தில் நினைத்து வெளிக்கிளம்பியபோது பக்கது வீட்டு ஆண்டி ஒரு மாதிரி சிரித்தது இன்னும் நினைவுக்குள் இருக்கு. அடுத்த நிமிடம் காற்றும் மழையும் அடித்து நடந்துபோன என்னை ஓடவைத்தது. இரயில் நிலையத்தில் நின்ற அரைவாசி மூக்கு முகத்தில் ஒட்டிக்கொண்ட பெண்ணும் சிரித்துவைத்தாள். மறுபடியும் வெயில்,இப்போது காற்றும் சேர்ந்து..அன்று வீடு திரும்பியபோது அந்த ஆண்டி சொன்னபிறகுதான் ஓரளவு விளங்கியது.

இன்று பலஆண்டுகள் களித்தும் சிலநேரங்களில் எதையும் பார்க்காமல் வெளியில் கிளம்பிவிடுவேன் ஆனால் இம்முறை கார் இருக்கிறது என்ற துணிவில், ஆனாலும் சிலநேரங்களில் மழையிலுமோ அல்லது வெயிலிலோ மாட்டிவிடுவேன்.இன்றும் அப்படித்தான் ஆனால் மெல்போர்ன் தனது ஆறுமுறைமாறும் வானிலையை இருமடங்காக்கியிருக்கிறது என்று மட்டும் புரிகிறது. நாளை?

மழை...வெயில்..காற்று...

0 comments:

Post a Comment