Wednesday, December 4, 2013

ஊழல் தரவரிசை பட்டியலில் 94- வது இடத்தைத் தக்க வைத்த இந்தியா!



ஊழல் தரவரிசை பட்டியலில், இந்தியா இந்த ஆண்டும் 94ஆவது இடத்தில் உள்ளது.டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் என்ற அமைப்பு ஆண்டு தோறும் ஊழல் அளவின் அடிப்படையில் நாடுகளை பட்டியலிட்டு வருகிறது. இந்த ஆண்டு பட்டியலில் 177 நாடுகள் இடம் பெற்றுள்ளன. இதில் ஊழலே இல்லாத நாடுகளில் இருந்து ஆரம்பித்து ஊழல் நிறைந்தவை என நாடுகள் வரிசைப் படுத்தப்பட்டுள்ளன. இந்த பட்டியலில்தான் இந்தியா 94ஆவது இடத்தைத் தக்க வைத்துள்ளது.


 ஊழல் வரிசை நாடுகள் பட்டியலில் முதல் முறையாக 2007ஆம் ஆண்டில் இந்தியா இடம்பெற்றது. அப்போது 180 நாடுகளில் இந்தியா 72ஆவது இடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.


கடந்த ஆண்டு முதல் ஊழலை கணக்கிடுவது தொடர்பாக புதிய தொழில் நுட்ப முறைகள் கையாளப்பட்டன. இதன்படி, கடந்த ஆண்டு இருந்த நிலையை கணக்கிட்டால், நாம 96ஆவது இடத்தில் இருந்திருக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அப்படி பார்த்தால் இந்த ஆண்டு இந்தியாவின் நிலை சற்று மேம்பட்டுள்ளது எனலாம்.


தற்போது உலகிலேயே அதிக அளவு ஊழல் நடக்கும் நாடுகள் என்ற இடத்தில் சோமாலியா, வடகொரியா மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய மூன்று நாடுகள் இடம் பெற்றுள்ளன. பட்டியலில், மொத்தம் உள்ள 177 நாடுகளில், டென்மார்க் மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளில் ஊழல் மிகவும் குறைவு என குறிப்பிடப்பட்டுள்ளது. 

0 comments:

Post a Comment