நய்யாண்டி’ என்றாலே தனுஷ் ஞாபகத்திற்கு வருகிறாரோ இல்லையோ கண்டிப்பாக நஸ்ரியா ஞாபகத்திற்கு வருவார்.
அந்த படத்தில் நடித்ததற்காக கிடைத்த புகழுக்காக அல்ல, அந்த படத்தின் இயக்குனர் மீது அளித்த புகாருக்காக, என்பதுதான் முக்கியம்.
மழை விட்டும் தூவானம் விடவில்லை என்பார்கள். அது போல ‘நய்யாண்டி’ படப் பிரச்சனை முடிந்தும் நஸ்ரியா சமீபத்திய பேட்டி ஒன்றில் அவருடைய ஆத்திரத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்.
‘‘நய்யாண்டி’ படத்தில் நம்பிக்கை மோசடி செய்து விட்டார்கள். படத்தில் நடிக்க சம்மதிப்பதற்கு முன்பே ‘இப்படியெல்லாம் நடிக்க மாட்டேன்’ என அவர்களுக்கு தெளிவாக சொல்லிவிட்டேன். ஆனால், என்னை ஏமாற்றி, ‘டூப்’ மூலம் என்னை ஏமாற்றிவிட்டார்கள். ‘நய்யாண்டி’யில் எனக்கு நடந்தது நம்பிக்கை மோசடி.
இப்படியெல்லாம் சீட்டிங் பண்ணாம இருந்திருந்தாங்கன்னா, படம் நல்லா வந்திருக்குமோ என்னமோ, ” என்று பேட்டியளித்திருக்கிறார்.
எப்படியோ படம் ஓடினாலும் ஓடலைன்னாலும் நஸ்ரியாவுக்கு தமிழ்நாட்டுல நயா பைசா செலவில்லாம நல்ல பப்ளிசிட்டி கிடைச்சிடுச்சி….
0 comments:
Post a Comment