Tuesday, December 3, 2013

பேஸ்புக், ட்விட்டர் மூலம் சதி + வதந்தீ = ஐடி கம்பெனிகளின் தில்லு முல்லு அம்பலம்!

 

குறிப்பிட்ட அரசியல் தலைவருக்கு அமோக ஆதரவு இருப்பதாக காட்ட வேண்டுமா? அதற்கு ஒரு விலை.

*எதிராக உள்ள தலைவரின் செல்வாக்கை ஒன்றுமில்லாமல் செய்ய வேண்டுமா? இதற்கு இரு மடங்கு விலை.

*குறிப்பிட்ட தொகுதியில் யாருக்கும் ஓட்டு விழக்கூடாது என்று தடுக்க வேண்டுமா? சில லட்சம் ஆகும்.

*தேவைப்பட்டால் வாக்காளர்களை பீதியடைய செய்ய வதந்திகளை கிளப்ப வேண்டுமா? இதற்கு செலவு கோடியை எட்டும்.
nov 30 edit obra_post
 *உயர் அதிகாரி மீது குற்றச்சாட்டுக்களை எழுப்பி அவரை பதவியில் இருந்து தூக்க வேண்டுமா? சில லட்சம் ஆகும். இப்படி எதை வேண்டுமானாலும் செய்ய பேஸ்புக், ட்விட்டர் மற்றும் யுடியூப் வலைதளங்களை பயன்படுத்தி போலியாக செயற்கையாக மோசடித்தனமாக கருத்துக்களை பரப்புவது, வீடியோக்களை வெளியிடுவது என்பது ஒரு பிசினசாகவே நடக்கிறது. இப்படி அவதூறுகளை, வதந்திகளை பரப்பியும், ‘லைக்’ மற்றும் எதிரான கருத்துக்களை லட்சக்கணக்கில் வெளியிட்டும் சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தவே சில ஐடி கம்பெனிகள் உள்ளன. இவர்களால் போலியாக லட்சக்கணக்கில் வெறும் ‘லைக்’ போடுவது மட்டுமல்ல, எதிரான கருத்துகளை வெளியிடுவது மட்டுமல்ல, குறிப்பிட்ட பகுதிகளில் பதற்றம் ஏற்படுத்தவும், குறிப்பிட்ட அரசியல் கட்சி, தலைவருக்கு செல்வாக்கை அழிக்கவும் முடியும். இதை ஒரு பிசினசாகவே இந்தியாவில் செய்வது யார் தெரியுமா? ஏதோ தாதாக்கள், மாபியாக்கள் என்று எண்ணி விட வேண்டாம். சில ஐடி கம்பெனிகள் தான். இந்த பெரும் சதி பிசினசை கோப்ரா போஸ்ட் என்ற புலனாய்வு வெப்சைட் அம்பலப்படுத்தியுள்ளது.

கோப்ரா போஸ்ட் என்ற புலனாய்வு வெப்சைட் ஏற்கனவே பல மோசடிகள், தவறுகளை அம்பலப்படுத்தியுள்ளது இது. டெல்லியில் ஆரம்பித்து பெங்களூர் வரை 24 ஐடி கம்பெனிகளை கண்டுபிடித்து அவர்களின் இந்த கேவலமான ‘சதி’ பிசினசை இந்த வெப்சைட் அம்பலப்படுத்தியுள்ளது. இதற்காக கோப்ரா போஸ்ட் வெப்சைட்டின் இணை ஆசிரியர் சையது மஸ்ரூர் அசன் என்பவர் தான் இந்த மோசடி ஐடி கம்பெனிகளை அணுகி பேசியுள்ளார்.

‘என் பாஸ் நேதாஜி வரும் சட்டசபை தேர்தலில் நிற்க வேண்டும். அதற்கு அதிக ‘லைக்’ போட வேண்டும். அவர் வெற்றி பெற்றபின் லோக்சபா தேர்தலில் நிற்க வேண்டும். அதன் பின் அமைச்சராக வேண்டும். இதற்கு என்ன செலவானாலும் பரவாயில்லை. பேஸ்புக், ட்விட்டர், யுடியூப் என்று அனைத்திலும் கருத்துக்களை பரப்ப வேண்டும்’ என்று சொல்லியிருக்கிறார். இதை எல்லா கம்பெனிகளும் நம்பி பேரம் பேசியுள்ளன. இந்த கம்பெனிகளின் பெயர்களுடன் அவர்களுடன் நடத்திய பேரத்தை வெப்சைட் அம்பலப்படுத்தியுள்ளது.

இதையடுத்து கோப்ரா போஸ்ட் வெளியிட்ட தகவல்கள் குறித்து மத்திய அரசு நடவடிக்கை எடுக்க உள்ளது. மத்திய உள்துறை அமைச்சர் சுசில்குமார் ஷிண்டே, ஐடி நிறுவனங்கள் இப்படி நடந்து கொள்வது பற்றி வெப்சைட் வெளியிட்ட தகவல்கள் உண்மை தான் என்பது போல குறிப்பிட்டார். ‘சமீபத்தில் உளவுத்துறை கூட்டத்தில் கூட நான் இதுபற்றி குறிப்பிட்டேன். எனது கவலை இப்போது நிரூபணமாகி விட்டது. இன்னும் தகவல்கள் முழுமையாக வரட்டும். உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’ என்ரு தெரிவித்தார்.

0 comments:

Post a Comment